பயிர் பாதுகாப்பு :: குளிர்மண்டல காய்கறிகள் பயிரைத் தாக்கும் பூச்சிகள்

கடுகு அசுவிணி : லிப்பேஃபிஸ் எரிசிமி

தாக்குதலின் அறிகுறிகள்:

  • இளம் குஞ்சுகள் மற்றும் அசுவிணிகள் இலையின் அடியிலிருந்து சாற்றை உறிஞ்சி சேதப்படுத்தும்
  • தாக்கப்பட்ட இலைகள் சுருண்டு விடும். முதிர்ந்த நிலை செடிகள் வாடி இற்ந்துவிடும்
  • செடிகள் வளர்ச்சிக் குன்றி காணப்படும். அசுவிணிகளில் இருந்து வெளிவரும் தேன் போன்ற திரவம் கரும்புகை பூசணம் நோய் ஏற்படுத்துகிறது

பூச்சியின் விபரம்:

  • அசுவிணி: மிகச்சிறியது, மிருதுவான உடை உடையது, முத்து போன்ற வடிவமுடையது.

கட்டுப்படுத்தும் முறை:

  • மஞ்சள் ஒட்டுப்பொறி வைத்து அசுவிணிகள் நடமாட்டத்தை அறியவும்
  • காக்சோநல்லா, செப்டம்பஸ்டேட்டா, மோனேச்சிலஸ், செக்ஸ்மாக்குலேட்டா, போன்ற இயற்கை எதிரிகளைக் கொண்டு அசுவினியை கட்டுப்படுத்தலாம்
  • டைமெத்தோயேட் @ 2 மி.லி/லிட்டர் தெளிக்கவும்



இலை துளைத்தல்

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015