0
அறுவடைப் பின்சார் நோய்கள் :: பழங்கள் :: வாழை

வாழை காம்பு அழுகல்: போட்ரியோடிப்ளாய்டியா தியோப்ரோமே

அறிகுறிகள்:

  • பூத்தார் தண்டுகள் கருப்பு நிறமாக மாறும். நிறம் இல்லாத பகுதிகளில் ஒன்றில் நான்கு பங்கு பழங்கள் முழுவதையும் மூடி விடும். பழத்தைத் தாங்கும் கைப்பிடி திறன் இழந்துவிடும்
  • பூஞ்சாண் மூன்றில் இருந்து ஐந்து பாகங்களாகப் பிரிக்கக் கூடியவை. இந்தப் பூஞ்சாண் காற்று வழியாகப் பரவும்
  • பழத்தின் முனைகள் கருப்பு நிறமாகவும், அந்திப்பூச்சிகள் பழத்தை துளையிடும். இதனால் நோய் தாக்குதல் நேரிடையாகத் துளைத்துவிடும். பூஞ்சாண் தோன்றும். 23.900 செல்சியஸ் நோய் உருவாவதற்கு உகந்த வெப்பநிலை ஆகும்
  • காற்று மற்றும் மழைக் காலங்களில் குலையில் உள்ள விரல்களில் தியான புள்ளிகள் தோன்றும்
ஆரம்பநிலை அறிகுறி தண்டுகள் கருப்பு நிறமாக மாறும் பூஞ்சாண்

கட்டுப்பாடு:

  •   வயலில் உள்ள காய்ந்த இலை சருகுகளை அடிக்கடி சுத்தம் செய்தால் முடி அழுகல் நோயை கட்டுப்படுத்தலாம்
  •   வயலை தூய்மையாக வைத்துக் கொண்டால் முடி அழுகல் பூஞ்சாண் வித்துக்களின் எண்ணிக்கையை குறைக்கலாம்
  •   சேமித்து வைக்கும் பகுதிகளின் அருகில் அழுகிய பழங்களையோ அல்லது செடியின் கழிவு பொருட்களையோ அதன் அருகில் வைக்கக்கூடாது
  •  தாரில் இருந்து வரும் தாவரப்பாலை சுத்தமான நீரில் நன்கு கழுவ வேண்டும். கழுவிய பின் அந்த நீரை உடனடியாக அகற்றி விட வேண்டுமு்.  இல்லையெனில் பூஞ்சாண் வித்துக்கள் பலமாகத் தாக்கிவிடும்
  •  பழத்தாரில் இருந்து சீப்பாக வெட்டும் பொழுது கவனமாக வெட்ட வேண்டும். வெட்டும் பொழுது பிளவுகளைத் தவிர்க்கவும். பூசணக் கொல்லியில் பழங்களை அறுவடை பின்சார் நேர்த்தி செய்ய வேண்டும்
Image source: Ludivine L.,Marc, C, Luc de L.D.B and Haissam J.M. 2010. Crown rot of bananas:Preharvest factors involved in postharvest diseases development and integrated control methods. Plant Disease, 94(6), pp.648-658.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015