பயிர் பாதுகாப்பு :: துளசி பயிரைத் தாக்கும் நோய்கள்
துளசி
துளசி இருந்தால் இல்லங்களுக்கு நோய்கள் அண்டாது. துளசி ஒரு கிருமி நாசினியாக செயல்படுகிறது. துளசி இலை, பூ, விதை மருத்துவத்தில் பயன்படுகிறது.
வாடல் நோய்
இந்நோய் இளம்  நாற்றுகளைத் தாக்கக்கூடும். இந்நோயானது ஆகஸ்டு – செப்டம்பர் மாதங்களில் காற்றின் வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் அதிகரிக்கும் போது அதிகமிருக்கும்.  இதைத் தடுக்க விதைப்பதற்கு முன் விதைகளை விதை நேர்த்தி  செய்ய வேண்டும். ஒரு கிலோ விதையை இரண்டு கிராம் கார்பண்டாசிம் மருந்தில் கலந்து, பின்  விதைக்க வேண்டும். பயிர் சுழற்சி மூலம் வாடல் நோய் வராமல் தடுக்கலாம்.
இலைப்புள்ளி நோய்
இலைப்புள்ளி நோய் செடிகளுக்கு  அதிக அளவில்  சேதத்தை ஏற்படுத்தும். குறிப்பாக, மழைக்காலங்களில் இந்நோய் தென்படும். இதனைக் கட்டுப்படுத்த  மான்கோசெப் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
வேரழுகல் நோய்
அதிக மழை உள்ள இடங்களில் வேரழுகல் நோய் தென்படலாம். நிலத்தில் வடிகால் வசதியை ஏற்படுத்தினால் இந்நோய் வராமல் தடுக்கலாம்.
சாம்பல் நோய்
இலைகளின் மேல் வெண்மையான சிறுசிறு திட்டுகள் தென்படும். நோய் முற்றிய நிலையில் இலைகள் பழுப்படைந்து காணப்படும். பெரும்பாலான இலைகள் கொட்டி விடும். இந்நோயைக் கட்டுப்படுத்த, நனையும் கந்தகம் 0.2 சதம்  அல்லது டிரைடிமார்ப் 0.2 சதம்  அல்லது புரோபிகனோசோல் 0.1 சதம்  20 நாட்கள்  இடைவெளியில் இரு முறை தெளிக்க வேண்டும்.
சிறு இலை நோய்
இலை மிகவும் சிறுத்து, செடியின் வளர்ச்சி குன்றி காணப்படும். இந்நோய் பரவாமல் தடுக்க நோயுற்ற செடிகளைப் பிடுங்கி அப்புறப் படுத்தி விட வேண்டும்.

Updated on Feb, 2014
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2014