பயிர் பாதுகாப்பு :: ஓட்ஸ் பயிரைத் தாக்கும் நோய்கள்

இலைத்துரு நோய் : பக்சின்யா கொரோனேட்டா
கரிப்பூட்டை நோய் : உஸ்டிலாகோ அவின்னே
இலைப்புள்ளி : டிராக்ஸ்லிரா அவன்னேசியே,
விக்டோரியா கருகல் : பைபோலாரிஸ் விக்டோரியே,
குத்து அழுகல் நோய் : பைபோலாரிஸ் மெய்டிஸ்
செப்டோரியா இலைப்புள்ளி : செப்டோரியா வகை
ஹேலோ கருகில் : சூடோமோனஸ் கொரோனாபேசியன்ஸ

1.நுனி அல்லது இலைத்துரு நோய் : பக்சினியா கொரோனேட்டா வகை அவின்னே

அறிகுறிகள்

  • பனி அதிகமாகும் காலங்களில் இந்த நோய் தோன்றும். மாற்று ஓம்புயிரி – ரேம்னஸ் வகைகள்.
  • மிகச்சிறிய, வட்ட வடிவமான மஞ்சள் கலந்த சிவப்பு நிற மேல் எழுந்த புள்ளிகள் இலைப்பரப்பு மற்றும் இலையுறையின் ஏதாவது ஒரு பக்கம் தோன்றும்.
  • இந்த மேலே எழுந்த புள்ளிகளில் உள்ள மஞ்சள் கலந்த சிவப்பு நிற வித்துக்கள் மூலம் பரவும்.

கட்டுப்பாடு

  • நோய் எதிர்ப்பு சக்தியுள்ள இரகங்களைப் பயிரிடுதல்.
  • மேன்கோசெப் 1 கிலோ/ ஹெக்டர் என்ற அளவில் தெளிக்கவேண்டும்.

மேலே

2.கரிப்பூட்டை நோய் : உஸ்டிலாகோ அவின்னே, உஸ்டிலாகோ கொல்லேரி

அறிகுறிகள்:

  • தளர்ந்த கரிப்பூட்டை (உஸ்டிலாகோ அவின்னே) மற்றும் மூடிய கரிப்பூட்டை (உஸ்டிலாகோ   கொல்லேரி) ஆகிய இரண்டும் தான் பரவலாக ஓட்ஸ் பயிரில் நோய் ஏற்படுத்துபவை.
  • உதிரி கரிப்பூட்டையில் உள்ள வித்துக்கள் அனைத்து விதைகளையும் அழிக்கும்.
  • மழை மற்றும் காற்றினால் கீழே விழும் பயிர்களில் இந்த நோய் வித்துக்கள் தோன்றும்.
  • வயலில் தெள்ளத் தெளிவாக நோய் தாக்கப்பட்ட கதிர்கள் வெளியே தெரியும்.

கட்டுப்பாடு

  • கேப்டான் 2 கிராம் /கிலோ என்ற அளவில் விதை நேர்த்தி செய்தல்.

மேலே

3.இலைக் கருகல், விக்டோரியா கருகல், குத்து அழுகல் நோய்

அறிகுறிகள்:

  • மூன்ற வகை பூஞ்சைகள் ஓட்ஸ் பயிரில் நோயை ஏற்படுத்தும்.
  • இலைகளில் இலைக் கருகல் தோன்றும்.
  • முதலில் இளம் மஞ்சள் நிறத்தில் தோன்றி பின் சிவப்பிலிருந்து பழுப்புநிறமாக தோன்றும்.
  • விக்டோரியா கருகல் என்பது நாற்று கருகலாகும். நாற்றுக்கள் முளைக்க ஆரம்பித்தவுடனே சிலசமயங்களில் மடிந்து விடும்.
  • பயிர்கள் குட்டை வளர்ச்சியுடன், இலைகள் சிவப்பு நிறமாக மாறும். அதே சமயத்தில் பயிர்கள் மடிந்து விடும்.
  • குத்து அழுகல் என்பது அடித்தண்டு மற்றும் வேர் அழுகலாகும்.

கட்டுப்பாடு:

  • விதை நேர்த்தி, பயிர் சுழற்சியின் மூலம் நோயைக் கட்டுப்படுத்தலாம்
  • திரம் 4 கிராம்/கிலோ என்ற அளவில் விதை நேர்த்தி செய்தல்.

மேலே

4. செப்டோரியா இலை கருகல் : செப்டோரியா வகைகள்

அறிகுறிகள்:

  • சாம்பல் முதல் அடர் பழுப்பு நிற இலைக் கருகல் தோன்றும்.
  • தண்டில் கருப்பு புள்ளிகள் தோன்றுவதால் பயிர்கள் மடியும்.
  • தானியங்கள் சில சமயங்களில் தாக்கப்பட்ட கருப்பு நிறமாக மாறும்

கட்டுப்பாடு:
  • பயிர் சுழற்சி, பயிர் குப்பைகளை புதைக்க வேண்டும்.

மேலே

5.ஹேலோ கருகல் : சூடோமோனஸ் கொரானோபேசியன்ஸ்

அறிகுறிகள்:

  • இலை பரப்பில் நீள் வட்ட வடிவ நீரில் அமிழிந்த புள்ளிகள் லேசான பழுப்பு நிறத்தில் தோன்றும்.
  • பழுப்பு நிற புள்ளியைச் சுற்றி லேசான மஞ்சள் நிற வளையம் தோன்றும்.

கட்டுப்பாடு:

  • விதைநேர்த்தி, பயிர் குப்பைகளை அழித்தல், பயிர் சுழற்சி.

மேலே

ஆதாரம்:
www.fao.org/docrop/008
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2014