பயிர் பாதுகாப்பு :: கண்வலிக் கிழங்கு பயிரைத் தாக்கும் நோய்கள்
கண்வலிக் கிழங்கு

இலைக் கருகல் நோய் - ஆல்டர்னேரியா ஆல்டர்னேட்டா
இந்நோய் தொடர் மழை மற்றும் பனிக் காலத்தில் அதிகம் ஏற்படும். இலைகள் மேலிருந்து கருகி காய்ந்து விடும். இதனைக் கட்டுப்படுத்த புரோபிகனோசோல் இரண்டு மில்லி,  ஒரு லிட்டர் தண்ணீர் என்ற விகிதத்தில் கலந்து  பூஞ்சாண மருந்தை மாதம் ஒரு முறை தெளிக்க வேண்டும்.
கிழங்கு  அழுகல் நோய்
கிழங்கு  அழுகல் நோய் மழைக் காலத்தில் வரும் பூஞ்சாண நோயாகும். மண்ணில் வடிகால் வசதி குறைவாக இருக்கும் போது அதிக அளவில் பாதிக்கப்படுகிறது. இதனால் கொடிகள் நிறம் மாறி வெளுத்து காய்ந்து விடும். இதனைக் கட்டுப்படுத்த சூடோமோனாஸ் புளூரோசன்ஸ் எதிர் உயிரி பாக்டீரியத்தை 5 கிராம் ஒரு லிட்டர் தண்ணீர் என்ற அளவில் கலந்து  கிழங்குகளை 20 நிமிடங்கள் நனைத்து நட வேண்டும். பெவிஸ்டின் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் 1 கிராம் என்ற அளவில் கலந்து  தாக்கப்பட்ட கொடிகளின் கிழங்குகள்  நனையுமாறு மண்ணில் ஊற்ற வேண்டும். அல்லது டெபுகோனசோல் இரண்டு மில்லி,  ஒரு லிட்டர் தண்ணீர் என்ற விகிதத்தில் கலந்து  பூஞ்சாண மருந்தை இரண்டு முறை தெளிக்க வேண்டும். மண்ணில் தண்ணீர் தேங்காத வண்ணம் வசதியை ஏற்படுத்த வேண்டும்.

Updated on Feb, 2014

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2014