பயிர் பாதுகாப்பு :: மிளகாய் பயிரைத் தாக்கும் நோய்கள்

நுண்ணுயிரி மென்மை அழுகல் – எர்வினியா க்ரோட்டோவோரா சப்ஸ்பீசியஸ் கரோட்டோவோரா

அறிகுறிகள்:

  • சதை உள்ள பழங்களில் உள்ள தண்டுப் பகுதிகளை நோய் சுலபமாக தாக்கப்படும்
  • ஆரம்ப காலத்தில் பழத்தில் உள்ள நைவுப்புண்கள் லேசான நிறத்தில் இருந்து ஆழ்ந்த கருப்பு நிறமாக மாறி, நீர் கோத்து குழி போன்று தோன்றும்
  • குறிப்பாக அதிக வெப்பநிலையில் பாதிக்கப்பட்ட பகுதிகள் விரைவாக பெரிதாகும் மற்றும் திசுக்கள் இழை நயத்தை இழந்துவிடும்
  • பிறகு பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து நுண்ணுயிரி கசிவு ஏற்படும். இரண்டாவது உயிரி அழுகிப்போன் திசுக்களை திரும்ப தாக்கும்
  • அறுவடைக்கு பின்னால் பழங்களின் நுனியில் உள்ள தண்டுகள் மென்மையாகக் காணப்படும்
  • தாக்கப்பட்ட பழங்கள் செடியிலே தண்ணீர் நிரப்பிய பை போன்று தொங்கி கிடக்கும்

நோய் வளர்ச்சியடைவதற்கான நிலைகள்:

  • நுண்ணுயிரிகள் வயலிலேயே ஊடுருவும் முட்டைக்கோசு மற்றும் உருளைக்கிழங்கு பயிர்களுக்கு இடையில் மிளகு பயிர் சுலபமாக சுற்றி காணப்படும்
  • மிளகு விதைகளின் மேல் நுண்ணுயிரிகள் தூய்மைக்கெடுப்பியாக இருக்கும்
  • நுண்ணுயிரியை வடிகால் நீர், நீர்ப்பாசனம், அல்லது தெளிப்பு நீர்ப்பாசனம் மூலம் கடத்தலாம். ஆனால் புண்கள் பாதிப்படைவதற்கு தேவையான ஒன்று
  • களையெடுக்கும் பொழுது செடிகளை முரட்டுத்தனமாக கையாண்டால் புண் ஏற்படும் அல்லது அதிகப்படியான காற்று, மற்றும் பூச்சிகளினால் புண்கள் ஏற்படும்
  • ஈரோப்பியன் மற்றும் ஆசியாடிக் கார்ன் துளைப்பான்களால் மிளகுத் தண்டுகளில் நுண்ணுயிரிகள் உருவாகும்.
  • அதிகப்படியான தழைச்சத்து கருவுறலினால் சுலபமாக மென்மை அழுகல் நோய் தாக்கப்படும்
  • வெது வெதுப்பான, ஈரப்பதமான வெப்பநிலை நோய் தாக்குதலுக்கு ஏதுவான நிலையாகும்

கட்டுப்பாடு:

  • கழுவும் பொழுது க்ளோரின் தண்ணீரை பயன்படுத்தினால் மென்மை அழுகல் நுண்ணுயிரியின் எண்ணிக்கையை குறைத்தும், நோய் தாக்குதலையும் குறைக்க உதவும்
  • அறுவடைக்கு முன்னதாக இவை மென்மை அழுகலினால் பழங்களின் மீது நுண்ணுயிரி தாக்குதல் உருவாவதை குறைக்க இயலாது
  • பழங்களை முழுமையாக வறல விட வேண்டும்
  • மூட்டைக்கட்டும் பொழுதும், சேமித்து வைக்கும் பொழுதும் பழங்களை சுத்தமாகவும், குளிர்வான வறண்ட இடத்தில் வைக்கவும்

மேலே

ஆந்தராக்னோஸ் – கொலேட்டோட்ரைக்கம் கேப்சிஸி

அறிகுறிகள்:

  • கொலட்டோட்ரைக்கம் நோய் உருவாவதற்கு உகந்தது. இவை மிளகு செடிகளின் அனைத்து பகுதிகளையும் செடிகள் வளரும் எதாவது ஒரு பருவத்தில் தாக்கும்
  • பழங்களில் உள்ள நைவுப்புண்கள் இந்நோய்க்கு முக்கிய நிலையாகும்
  • பழங்களின் அறிகுறிகள் முதலில் நீர் கோத்தது போன்று தொடங்கி பின் மென்மையாகவும், சிறிது குழியாகவும், தோல் போன்றும் காணப்படும்
  • நைவுப்புண்கள் முக்கால் பங்கு பழங்களை மூடி அதிகப்படியான நைவுப்புண்கள் உருவாகும்
  • மேல்புறம் உள்ள நைவுப்புண்களை ஈரப்பதமுள்ள, ஜெலட்டின் பூசண வித்துக்கள் மூடி அரக்கு நிறத்தில் பூஞ்சாண்கள் பழத்தில் தோன்றி அதிக எண்ணிக்கையில் முள்தண்டுகளை உருவாக்கும்
  • ஒரே மையமுள்ள வளையங்கள் போல் பூசண வித்துக்கள் பொதுவாக பழத்தின் புள்ளிகளுக்குள் தோன்றும்
  • சில சமயங்களில் நைவுப்புண்கள் பழுப்பு நிறத்தில், ஆரஞ்சு நிறமில்லாமல் பின் கருப்பு நிறத்தில் மாறி பூசண வித்துக்களால் உருவாகும்

பரவி, ஊடுருவும்:

  • பூஞ்சாண் விதைகளுக்குள் மற்றும் விதைக்கு மேலும் வாழும்
  • ஆன்த்தராக்னோஸ் வயலில் பயிரை இடம் மாற்றி வேறிடத்தில் நடும் பொழுது உருவாகும். அல்லது செடிகள் சிதையும் பருவத்தில் மற்றும் களையெடுக்கும் பருவத்தில் ஊடுருவும்
  • ஒன்று விட்டு ஒன்றாக களையெடுக்கும் பொழுதும், மற்ற செடிகள் அதாவது சொலனேசியேவில் (தக்காளி, உருளைக்கிழங்கு) பரவும். இருந்தாலும் ஃப்ளோரிடாவில் கடினமாக நோய் தாக்குதல் ஏற்படும்
  • பழங்கள் பூசண வித்துக்களால் தாக்கப்படும். மழை சிதரடிப்பதால் மிளகு செடிகளில் சிதைவு ஏற்படும்
  • பாதிக்கப்பட்ட திசுக்களில் புதிய பூசண வித்துக’கள’ உருவாகி பின் அது மற்ற பழங்களையும் தாக்கும்
  • 800 பே (270 செ) வெப்பநிலை நோய் உருவாவதற்கு உகந்த வெப்பநிலையாகும். இருப்பினும் நேய் தாக்குதல் அதிகம் மற்றும் குறைந்த வெப்பநிலையிலும் உருவாகும்.
  • தீவிர இழப்பு மழைக் காலங்களில் அதிகமாக இருக்கும். ஏனென்றால் பூசண வித்துக்கள் தண்ணீரில் சிதரடித்து மற்ற திடமான பழங்கள் மீது பரவி அதிகப்படியான தாக்குதலை ஏற்படுத்தும்
  • நோய்கள் அதிகப்படியாக முதிர்ந்த பழங்கள் மீது உருவாகி அதிக நாட்களுக்கு செடியிலேயே தங்கி விடும். இருப்பினும் முதிர்ந்த மற்றும் முதிராக பழங்களையும் தாக்கும்
  • பூசண வித்துக்கள் - 300 செ, ஆர்.ஹெச்.85% மாறி மாறி வெளிச்சம் மற்றும் இருட்டில் இந்த வெப்பநிலையில் உருவாகும்

மேலே

சாம்பல் பூசணம் – போட்ரிடிஸ் ஸ்பீசியஸ்

அறிகுறிகள்:

  • பழத்தில் அறிகுறிகள் முதலில் நீர் கோத்தது போன்ற புள்ளிகள் தோன்றி பின் அது விரைவாக பெரிதாகி மஞ்சள் கலந்த பச்சை நிறம் அல்லது சாம்பல் கலந்த பழுப்பு நிறத்தில் வடிவமில்லாமல் நைவுப்புண்கள் தோன்றி மென்மையாகவும், பஞ்சு போன்றும் இழை நயத்துடன் காணப்படும்
  • வெல்வெட் போன்று பூசண இழை மற்றும் பூசண வித்துக்கள் நைவுப்புண்கள் குளிர்ந்த மற்றும் ஈரப்பதமான நிலையில் உருவாகும்
  • பூஞ்சாண்கள் குளிர் காலங்களில் உருவாகும் இதை ஸ்க்ளோட்டியா பூசண வித்து வகை எனப்படும்
  • தாக்கப்பட்ட செடி திசுக்களில் உள்ள சிறிய துண்டுகள் அல்லது பூசண வித்துக்கள் மழை சிதரடிப்பதால் குறைந்த தூறம் பரவும்
  • பூசண வித்துகள் மண்ணின் மூலம் பரவி, பயன்படுத்தும் கருவி மற்றும் வேளையாட்களின் துணி வரை பரவும்

கட்டுப்பாடு:

சேமிப்பிற்கு முன்பு உலர் நேர்த்தி முறை:

  • உலர் நேர்த்தி முறை மற்றும் சுடு நீரில் முக்கி எடுப்பதும் போட்ரிடிஸ் சினேரியா அழுகலை குறைக்க உதவும்
  • 300 செல்சியஸில் 48 – 72 மணி நேரம் கூடான காற்றில் வைத்து நேர்த்தி செய்யவும் அல்லது 500 செ - 530 செல்சியஸில் 2 – 3 நிமிடங்கள் சுடு நீரில் வைத்தால் நோய்க்காரணிகளை குறைக்கலாம்

மேலே

அல்ட்டர்னேரியா அழுகல் – அல்ட்டர்னேரியா அல்ட்டர்னேட்டா

அறிகுறிகள்:

  • பூசணங்கள் புண்கள் வழியாக நுழையும் (துளைகள் மூலம்)
  • பழங்களின் புள்ளிகளில் துருப்பிடித்த கருப்பு நிற பூசண வித்துக்கள் தோன்றும்
  • அதிகப்படியாக இந்நோய்கள் பூக்கள் மலரும் போது நுனி அழுகியும் காணப்படும்.இந்நோய் புண்கள் குளிர்விக்கும் போதும், அழுகி இருக்கும் போதும் பரவும்
  • பழங்களின் மேல் பச்சை கலந்த பழுப்பு நிறத்தில் இருந்து பழுப்பு நிற நைவுப்புண் மூடி காணப்படும். இதனுடன் சாம்பல் கலந்த பழுப்பு நிற பூசணமும் உருவாகும்.
  • இதே நைவுப்புண் பழங்களின் அடிப் பகுதியில் தோன்றும்
  • பெரிய நைவுப்புண்கள் மாறி மாறி லேசான மற்றும் ஆழ்ந்த பழுப்பு நிறத்தில் ஒரே மையமுள்ள மண்டலம் காணப்படும்
  • மிளகை குளிர்விப்பானில் நிலையான வெப்ப நிலையில் வைத்து அழுகல் உருவாவதை ஆராயலாம். ஆனால் பழங்களை குளிர்விப்பானில் இருந்து வெளியே எடுத்த பின் மிதமான வெப்ப நிலையிலிருந்து வெது வெதுப்பான வெப்ப நிலையில் பழங்கள் அழுக நேரிடும்

கட்டுப்பாடு:

சேமிப்பிற்கு முன்பு உலர் நேர்த்தி முறை:

  • சேமிப்பிற்கு முன்பு உலர் நேர்த்தி செய்வதும்,சுடு நீரில் முக்கி வைப்பதும் அல்ட்டர்னேரியா அல்ட்டர்னேட்டாவினால் தாக்கப்பட்ட குடைமிளகாயை பக்குவப்படுத்த உதவும்
  • 300 செல்சியஸில் 48 – 72 மணி நேரம் கூடான காற்றில் வைத்து நேர்த்தி செய்யவும் அல்லது 500 செ - 530 செல்சியஸில் 2 – 3 நிமிடங்கள் சுடு நீரில் வைத்தால் நோய்க்காரணிகளை குறைக்கலாம்

மேலே

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2013