பயிர் பாதுகாப்பு :: வெங்காயம் பயிரைத் தாக்கும் நோய்கள்

கழுத்து அழுகல் – போபரிடிஸ் அலி, போட்ரிடிஸ். ஸ்கோமோசா, மற்றும் போட்ரிடிஸ். சினேரியா

அறிகுறிகள்:

  • பொதுவாக அறிகுறிகள் அறுவடை செய்த பிறகு தான் தோன்றும். நோய் தாக்குதல் வயலில் காணப்படும். அறுவடைக்கு முன்போ அல்லது பின்போ 500 - 750 ஃபேரன்ஷீட்டில் குளிர்ந்த ஈரப்பதமான வெப்பநிலையில் கொள்ளை நோய் உருவாகும்.
  • அறுவடை செய்யும் போது வறண்ட வெப்பநிலை இருந்தால் சேமித்து வைக்கும் போது ஏற்படும் இழப்பு குறைவாக இருக்கும்
  • அறிகுறிகள் முதலில் குமிழின் கழுத்துப் பகுதியில் உள்ள திசுக்கள் மென்மையாக மாறி காணப்படும் அல்லது அந்தப் பகுதியில் மிக அரிதான புண்கள் தோன்றும்
  • விளிம்புகள் நோய் தாக்கப்பட்ட திசு மற்றும் திடமான திசுக்களை பிரித்துவிடும். நோய் தாக்கப்பட்ட திசுக்கள் சிறுத்தும், மென்மையாகவும் பழுப்பு நிறத்தில் இருந்து சாம்பல் நிறத்தில் தோன்றும். இந்த நோய் படிப்படியாக அடியில் உள்ள குமிழைத் தாக்கும்
  • பிறகு முழு குமிழும் காய நேரிடும். இரண்டாவது தாக்குதல் மென்மை அழுகல் நுண்ணுயிரிகள் நீர் அழுகல் நோயை உருவாக்கும்.
  • கடினமான, வடிவமில்லாத விதை போன்றும், ஸ்கிளிரோடியா, கழுத்துப் பகுதியிலுள்ள செதில்களுக்கு இடையே தோன்றும்
  • பூசணங்களினால் ஏற்படும் கழுத்தழுகல் நோய் குளிர் காலத்தில் முன்பே நோய் தாக்கப்பட்டு சிதைந்த வெங்காயத்தின் மேல் மண்ணிலேயே காணப்படும் மற்றும் சேமிப்பு கொட்டகையில் உள்ள குப்பைப் பொருள்களிலும் பரவும்.

மேலே

நீலப் பூசண அழுகல் – பெனிசிலியம் ஸ்பீசியஸ்

அறிகுறிகள்:

  • நீலப் பூசணம் பொதுவாக அறுவடை செய்யும் பொழுதும், சேமித்து வைக்கும் பொழுது காணப்படும். தொடக்க அறிகுறிகள் செதில்களின் வெளிப்புறத்தில் நீர் கோத்தது போன்று தோன்றும்
  • பச்சை நிறத்தில் இருந்து நீலம் கலந்த பச்சை நிறத்தில் மாறிவிடும். பின் நைவுப்புண்களின் மேல் சாம்பல் பூசணம் ஏற்படும். நோய் தாக்கப்பட்ட பகுதிகளில் உள்ள சதையுள்ள செதில்கள் சாம்பல் நிறமாக வெட்டும் பொழுது தோன்றும்
  • முன் நிலைகளில் பாதிக்கப்பட்ட குமிழ்கள் அழிந்து நீர் அழுகலாக மாறிவிடும்
  • பெனிசிலியத்தின் இனத்தால் நீலப் பூசணம் உருவாகும். இந்தப் பூசணங்கள் பொதுவாக சேப்ரோமைட்ஸினால் செடிகள் சிதைவுற்றும், திசுக்கள் முதிர்ந்தும் காணப்படும். அடுத்தப்படியாக வெங்காய குமிழ்களிலும், பூண்டுகளிலும் புண்கள் சிறாய்வுகள் அல்லது தவிர்க்க முடியாத கழுத்து திசுக்கள் ஏற்படும்.
  • ஒருமுறை குமிழுக்குள் புகுந்தால், சதையுள்ள செதில்களில் பூசண இழை வளரத் தொடங்கும். இறுதியாக பூசண வித்துக்கள் அதிகப்படியாக நைவுப்புண் மற்றும் புண்களில் தோன்றும்
  • உகந்த நிலையில் மிதமான வெப்பநிலை 700 - 770 பே (210 - 250 செ) மற்றும் அதிக ஈரப்பதம் உள்ள வெப்ப நிலையும் அடங்கும்.

மேலே

ஃபுசேரியம் அடி அழுகல் – ஃபுசேரியம் ஆக்ஸிஸ்போரம், ஃபுசேரியம் ஸ்பீசியஸ்.சிபே

அறிகுறிகள்:

  • தொடர்ந்து மஞ்சள் நிறமாக மாறி, பின்னோக்கி காயத் தொடங்கும்
  • வெள்ளை பூசண வளர்ச்சி குமிழின் அடிப்பகுதியில் தோன்றும்
  • மண் மூலம் இயற்கையாகப் பரவும்
  • புண்கள் மற்றும் வேர் வடுக்கள் தான் நோய்க் காரணிகள் உருவாகும் முதல் படி.

மேலே

கருப்புப் பூசணம் – அஸ்பர்ஜிலஸ் நைகர்

அறிகுறிகள்:

  • நோய் தாக்குதல் கழுத்துப் பகுதியில் உள்ள திசுக்களில் தோன்றும் பின் இலைத் தழைகள் முதிரும் பருவத்தில் இறந்துவிடும்
  • பாதிக்கப்பட்ட குமிழ்கள் நிறம் மாறி, கழுத்துப் பகுதிகளை சுற்றி கருப்பு நிறமாகவும், பாதிக்கப்பட்ட செதில்கள் உதிர்ந்தும் காணப்படும்
  • சாம்பல் போன்று கருப்பு நிற பூசண வித்துக்கள் கோடுகள் போன்று பொதுவாக நரம்புகளின் மேல் மற்றும் நடுவில் வறண்ட செதில்கள் தோன்றும்
  • நோய் தாக்குதல் முதலில் கழுத்துப் பகுதியில் பரவி சதையுள்ள செதில்களின் நடுப்பகுதி வரை பரவும்.
  • நோய் தாக்கப்படும் ஆரம்ப காலத்தில், முழு குமிழுமே கருப்பாக மாறி, இரண்டாவது தாக்குதலாக நுண்ணுயிரி மென்மை அழுகல் நோயால் குமிழ்கள் மென்மையாகவும் காணப்படும்
  • சில குமிழ்களில் வெளிப்புற அறிகுறிகள் தென்படாது

கட்டுப்பாடு:

  • 4 கி/கி.கி தையாமின்னை வைத்து விதை நேர்த்தி செய்ய வேண்டும்
  • 0.25% காப்பர் ஆக்ஸில் க்ளோரைட் அல்லது 0.2% க்ளோரோதலோனில், அல்லது 0.2% ஜினெப் அல்லது 0.2% மேன்கோசெப்பை மூன்று முறை தழை தெளிப்பாக தெளிக்கவும்
  • உற்பத்தியாளர்கள் பயிர் சுழற்சியை மேற் கொள்ள வேண்டும். சேமிப்பு வைத்திருப்பதிலிருந்து அழிவைக் குறைக்க அறுவடை செய்யப்பட்ட குமிழ்கள் திடமாக இருக்க வேண்டும். நோய் தாக்கப்பட்டு இருந்தால் அதனை திடமான குமிழ்களுடன் இணைக்கக்கூடாது
  • 0.25% காப்பர் ஆக்ஸில் க்ளோரைடை மண்ணில் தெளிக்கவும்

மேலே

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2014