பயிர் பாதுகாப்பு :: சூரியகாந்தி பயிரைத் தாக்கும் பூச்சிகள்
பொதுப்பெயர்: சூரியகாந்தி அறிவியல் பெயர்: ஹீலியான்தஸ் அன்னுஸ்

குடும்பம்: அஸ்ட்ரேஸியே

 

தலைத் துளைப்பான்: ஹெலிக்கோடெர்மா ஆர்மிஜெரா
பீகார் கம்பளிப்பூச்சி: ஸ்பைலோசோமா ஆப்லிக்வா
புகையிலைப் புழு: ஸ்போடாப்டிரா லித்தூரா
இலைதத்துப்பூச்சி: அம்ரசக்கா பிகுட்டிலா
பாராகீட்: சிட்டகுலா க்ரமேரி
 

 
1.தலைத் துளைப்பான்: ஹெலிக்கோவெர்பா ஆர்மிஜெரா

அறிகுறிகள்:

  • தலை பகுதியின் உள்ளே புழு துளை செய்தல்.
  • நன்றாக வளர்ந்த விதைகளின் மீது புழுக்கள் உண்டு, தலை பகுதியை துளை செய்யும்.
  • பூஞ்சான் உருவாகி, தலைப்பகுதி அழுக ஆரம்பிக்கும்.
  • வளர்ச்சியின் ஆரம்பநிலையில் புழுக்கள் இலைகளை அதிகமாக உண்ண ஆரம்பித்து பின் தலைப்பகுதியைத் துளைக்கும்.

பூச்சியின் விபரம்:

  • முட்டைகள்: உருளை வடிவத்தில், பால் வெள்ளை நிறத்தில், தனித்தனியாக முட்டை இடும்
  • புழு: பச்சை நிறத்திலிருந்து பழுப்பு நிறமாக தோற்றமளிக்கும். உடலின் மீது அடர் பழுப்பு சாம்பல் நிற வரிகளும், அடர் மற்றும் மங்கிய நிற வளையங்களும் காணப்படும்.
  • கூட்டுப்புழு: பழுப்பு நிறத்தில் மண், இலை, காய் பயிர் குப்பைகளில் காணப்படும்
  • பூச்சி :
  • இளம் பழுப்பு கலந்த மஞ்சள் நிறத்தில், தடித்து காணப்படும். முன் இறக்கைகள் ஆலிவ் பச்சை நிறத்திலிருந்து இளம் பழுப்பு நிறத்துடன், அடர் பழுப்பு நிற வட்ட வடிவ புள்ளி நடுவிலும் காணப்படும்.
  • பின் இறக்கைகள் இளம் புகை வெள்ளை நிறத்துடன், அகலமான கருப்பு நிற வெளி விளிம்புடன் காணப்படும்.
Capitulum borer boring sunflower capitulum

கட்டுப்பாடு :

  • ஊடு பயிராக பச்சைப் பயிறு, உளுந்து, கடலை, சோயாபீன் பயிரிடலாம்.
  • 3-4 வரிசைகள் மக்காச்சோளம் (அ) சோளம் சூரியகாந்தி பயிரைச் சுற்றி விதைக்கலாம்.
  • பொறிப் பயிர்களாக துலக்கமல்லி 50 செடிகள் / ஏக்கர் என்ற அளவில் விதைக்கலாம்.
  • இனக்கவர்ச்சிப் பொறி 14 பொறிகள் / ஏக்கர் வைத்துக் கட்டுபடுத்தலாம்.
  • விளக்குப்பொறி (1 விளக்குப் பொறி / 5 ஏக்கர்) என்ற அளவில் வைக்கலாம்.
  • இரை விழுங்கிகளான காக்சி நெல்லி டிஸ், கிரைசோபெர்லா கார்னியா 1 புழு/தலை என்ற அளவில் வயலில் வெளியிடலாம்.
  • ஒட்டுண்ணிகளான டிரைக்கோகிராமா (20,000/ஏக்கர்) பிரக்கான் வகைகள், கேம்போலெட்டிஸ் வகைகளை வயலில் வெளியிடலாம்.
  • ஹெச். என். பி.வி 250 எல்.இ. + பிடி 0.5 கிலோ /ஹெக்டர் என்ற அளவில் தெளிக்கலாம்.
  • ஹெச். என். பி.வி 250 எல்.இ. + 1 கிலோ கரும்பு சர்க்கரை + 200 மி.லி. சேண்டோவிட் (அ) பீபால் கலந்து மாலை வேளைகளில் மட்டும் தெளிக்கலாம்.
  • 5% வேப்ப எண்ணெய்  (அ) 5% வேப்பங்கொட்டை சாறு முட்டை இடுவதற்கு முன் தெளிக்கவும்.
  • ஹெச்.என்.வி.பி. 250 எல்.இ./ஹெக்டர் + எண்டோசல்பான் 35 கிகி 1மிலி /லிட்டர்  பூக்க ஆரம்பிக்கும் முன் தெளிக்க வேண்டும்.
  • மோனோகுரோட்டாபாஸ் 2மிலி/லிட்டர் தண்ணீர் (அ) குயினைல்பாஸ் 3மிலி/லிட்டர் (அ) ப்ரினோபாஸ் 2 மிலி/லிட்டர் (அ) குளோர்பைரிபாஸ் 2.5மிலி/லிட்டர்  என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும்.
  புழு   
    கூட்டுப்புழு
     பூச்சி
 
2.பீகார் கம்பளிப் பூச்சி : ஸ்பைலோசோமா அப்லிக்வா

அறிகுறிகள் :

  • இளம்புழுக்கள் இலையின் அடிப்பகுதியில் காணப்படும். இலை மிகத் தீவிரமாக இலைகளை உண்ணும்.
  • தீவிரத் தாக்குதலின் போது இலைகள் உதிர்ந்துவிடும்.
  • தாக்கப்பட்ட இலைகள் காய ஆரம்பிக்கும்.

பூச்சியின் விபரம்:

  • முட்டை : இலையின் அடிப்புறத்தில் கூட்டமாக இடப்படும்.
  • புழு  : நீளமாக மஞ்சள் முதல் கருப்பு நிறமுடன் முடிகளால் சூழப்பட்டிருக்கும்.
  • பூச்சி : பழுப்புநிறத்துடன், சிவப்பு நிற வயிறுடன் காணப்படும்.
  • இளஞ்சிவப்பு நிற இறக்கைகளுடன், எண்ணற்ற கரும்புள்ளிகளுடன் காணப்படும்

கட்டுப்பாடு :

  • ஆழமாக கோடை உழவு செய்தல்.
  • நன்றாக மக்கிய உரங்களை பயன்படுத்துதல்.
  • பட்டாணி பயருடன் 2:1 என்ற விகித்தில் ஊடு பயிரிடலாம்.
  • புழுக்களை சேகரித்து, அழிக்க வேண்டும்.
  • பேசலோன் 35 கிகி 1000 மிலி/ஹெக்டர் என்ற அளவில் தெளித்தல்.

 

 
3. புகையிலைப் புழு : ஸ்போடாப்டிரா லித்தூரா

அறிகுறிகள் :

  • இளம் இலைகள், கிளைகள், இதழ்களை உண்ணும்.
  • பின் வயல் முழுவதும் பரவி, இலைகள் உதிரும்.
  • வளர்ந்த விதைகளை புழுக்கள் உண்ணும்

கட்டுப்பாடு:

  • இனக்கவர்ச்சிப் பொறிகள் ( 4 பொறிகள்/ ஏக்கர்) என்ற அளவில் பயன் படுத்துதல்.
  • முட்டைகளை சேகரித்து, அழித்தல்.
  • ஒவ்வொரு பயிரின் 100மீக்கும் எட்டு முட்டைக் கூட்டம் இருந்தால், 5% வேப்பங் கொட்டை சாற்றை மாலை வேளைகளில் தெளிக்க வேண்டும்.
  • எஸ்.எல்.என்.பி.வி 250 எல் . இ./ஹெக்டர் என்ற அளவில் புழுக்கள் ஒட்டுண்ணியாக வளர்வதற்கு தெளிக்க வேண்டும். (எஸ்.எல்.என்.பி.வி 250 எல்.இ/ஹெக்டர் + 0.2% கரும்பு சர்க்ரை கலந்து அடித்தால் நல்ல பலனைத் தரும்.)
  • சிலந்திகள், க்ரைசோபர்ல்லா, இரை விழுங்கும் பூச்சிகளை பாதுகாக்க வேண்டும்.
  • குளோர்டைரிபாஸ் (அ) குயினைல்பாஸ் 2மிலி/லிட்டர் என்ற அளவில் தெளிக்க வேண்டும்.

பூச்சியின் விபரம் :

  • முட்டை : கூட்டமாக  உள்ள முட்டைகள் தங்கம் கலந்த பழுப்பு நிறத்தில் தோற்றமளிக்கும்.
  • புழு : இளம் பச்சை நிறத்துடன் அடர் குறிகளுடன் காணப்படும். இளம் நிலையில் தீவிரமாக உண்ணும்.
  • பூச்சி : முன் இறக்கைகள் : பழுப்பு நிறத்தில், அலை போன்ற வெள்ளை நிற குறிகளுடன் காணப்படும்.
  • பின் இறக்கைகள் : வெள்ளை நிறத்தில், விளிம்புகளில் பழுப்பு நிற திட்டுக்களுடன் காணப்படும்.
 
4.இலைத்தத்துப்பூச்சி : அம்ரசக்கா பிகுட்டில்லா பிகுட்டில்லா

பூச்சியின் விபரம் :

  • இளம் பூச்சிகள் – இளம் பச்சை நிறத்தில்,  கண்ணாடி போன்று இருக்கும்.‘V’ வடிவத்தில் இரண்டு கரும்புள்ளிகள் மேற்பக்கத்திலும், ஒரு கரும்புள்ளி முன் இறக்கையிலும் காணப்படும்.
  • பூச்சிகள் : பச்சை கலந்த மஞ்சள் நிறத்தில், ‘V’ வடிவத்தில் இரண்டு கரும்புள்ளிகள் மேற்பக்கத்திலும், ஒரு கரும்புள்ளி முன் இறக்கையிலும் காணப்படும்.

கட்டுப்பாடு :

  • காக்ஸிநெல்லிடிஸ், இரைவிழுங்கி ஜியோகோரிஸ் டிரைகலர், அந்தோகோரிஸ் வகைகளை பாதுகாத்தல்.
  • மித்தைல் டெமட்டான் 25கிகி 650மிலி/ஹெக்டர் என்ற அளவில் தெளிக்கவும்.
  • 600 லிட்டர் நீரில் கரைத்து தெளிக்கவும்.

அறிகுறிகள் :

  • இளம் பூச்சிகள் மற்றும் முதிர்ப் பூச்சிகள் பயிரின் சாற்றை உறிஞ்சுகின்றன.
  • இலைகள் இளம் மஞ்சள் நிறமாக மாறுகின்றன.
  • தீவிர தாக்குதலின் போது, இலைகள் உள்நோக்கி சுருளும்
  • இலை விளிம்புகள் இளம் இளஞ்சிவப்பு கலந்த பழுப்புநிறமாக மாறும்.
 
5.பாராகீட் : சிட்டகுலா காராமெரி

அறிகுறிகள் :

  • கதிர் பிடிக்கும் காலத்திலிருந்து அறுவடை வரை பறவைகள் சேதப்படுத்துகின்றன.
  • 152 விதைகள் ஒரு நாளுக்கு பறவைகள் உண்ணுகின்றன.

பூச்சியின் விபரம் :

  • மெல்லியதாக, பச்சை நிறத்தில், குட்டை, வளைந்த கொக்கியுடன் காணப்படும். அடி மரத்தில் உள்ள வெற்றிடத்தில் பறவைகள் கூடு கட்டும்.

கட்டுப்பாடு :

  • காகங்களை வயலில் விடுவதால் பறவைகளின் நடமாட்டத்தைத் தடுக்கலாம்.
  • பட்டாசு கொளுத்திப் போடுவதன் மூலமும், கார்பைடு துப்பாக்கி, பாலித்தீன் பைகளை கட்டி விடுவதாலும் கட்டுப்படுத்தலாம்.
  • பறவை சத்தம் போடும் ஒலி நாடாவை பயன்படுத்தலாம்.
  • உயிர்கேட்பொலி முறையால் முன்பதிவு தடுமாற்றம் ஏற்படுத்தும் ஒலிகளை பயன்படுத்துவதால் பறவைகளை கட்டுபடுத்தலாம்.
  • பறவை கூடுகளை வயலைச் சுற்றிலும் வைப்பதால் அழிக்கலாம்.
  • ஒரு எக்டருக்கு 2 வேலையாட்களை நியமிப்பதால் பறவைகளை விரட்டலாம்.
  • பறவைகள் முட்டையிடும், குஞ்சுப் பொரிக்கும் இடங்களை அகற்றலாம்.
  • வேப்பங்கொட்டை சாறு 10 கிராம் /லிட்டர் என்ற அளவில் விதைகள் உதிர்ந்த பின் தெளிக்கவேண்டும்.
  • பறவை நுழைய முடியாத வலைகளை பயன்படுத்தலாம்.
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2014