பயிர் பாதுகாப்பு :: கொண்ட கடலை பயிரைத் தாக்கும் பூச்சிகள்

bengalgram2 bengalgram1

பொதுப் பெயர்: கொண்டைக்கடலை
அறிவியல் பெயர்: சீசர் அரிட்டினம்
குடும்பம்: பேபேசியே

1. பச்சைக் காய்ப்புழு - ஹெலிகோலெர்பா ஆர்மிஜீரா

கட்டுப்பாடு

  • இனக்கவர்ச்சிப் பொறி எக்டருக்கு 12 என்ற எண்ணிக்கையில் வைத்து பூச்சி நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தவும்.
  • எக்டருக்கு 50 பறவைத் தாங்கிகள் என்ற எண்ணிக்கையில் அமைக்கவும்.
  • வளர்ந்த புழுக்களை சேகரித்து அழிக்கவும்.
  • பச்சைக் காய்ப்புழு நச்சுயிரியை எக்டருக்கு 1.5 X 10 12  கிருமிகள் மற்றும் ஒட்டும் திரவம் 1.0 மி லி  / லி.  என்ற விகிதத்தில் கலந்து தெளிக்கவும்.
  • கீழ்கண்ட பூச்சிக் கொல்லி மருந்துகளில் ஏதேனும் ஒன்றினை ஒரு எக்டருக்கு 625 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும் /  தூவவும்.
    • டைகுளோர்வாஸ் 625 மி.லி
    • குயினால்பாஸ் 4 சதத்தூள் 25 கி.கி
    • கார்பரில் 5 சதத்தூள் 25 கி.கி
    • மோனோகுரோட்டாபாஸ் 36 எஸ். எல் 625 மிலி
    • டிரைஅசோபாஸ் 750 மி லி சதம் தெளித்தபின் வேப்பங்கொட்டைச்சாறு கரைசல் 31.0 லி /  எக்டர் இரண்டு முறை தெளிக்கவும்.
    • பாசலோன் 35 இ.சி 1.25 லி

 

(குறிப்பு: புழுக்களின் மூன்றாம் பருவநிலைகள் வரை மட்டுமே பூச்சிக் கொல்லிகள் பச்சைக் காய்ப்புழு நச்சுயிரி தெளிக்கவும்.)

அறிகுறிகள்

  • இளம்புழுக்கள் நரம்புகளை மட்டும் விட்டுவிட்டு இலையில் உள்ள அனைத்து பச்சையத்தையும் சுரண்டி உண்டு விடும். இதனால் இலைகள் எலும்புக் கூடு போல் காட்சியளிக்கும்.
  • முடிவில் இலைகள் உதிர்ந்து விடும்.
  • பூக்கள் மற்றும் பச்சைக்காய்களை உண்ணும்
  • பச்சைக் காய்களில் வட்ட வடிவ துளைகள் ஏற்படுத்தி, காயின் உள்ளே உள்ளவற்றை உண்ணுவதால், வெற்றுக் காய்கள் மட்டும் செடிகளில் இருக்கும்.

பூச்சியின் விரம்

முட்டைகள்   - வட்ட வடிவில், பால் வெள்ளை நிறத்தில், தனித்தனியாக இருக்கும்.
கூட்டுப்புழு -   பழுப்பு நிறத்தில் இருக்கும்
மண், இலை, காய் மற்றும் பயிரின் குப்பைகளில் காணப்படும்.
தாய்ப்பூச்சி – இளம் பழுப்பு கலந்த மஞ்சள் நிறத்தில், தடித்து இருக்கும்.
முன்னிறக்கைகள் சாம்பல் நிறத்திலிருந்து இளம் பழுப்பு நிறத்துடன் V வடிவ குறியுடன் காணப்படும்.
பின்னிறக்கைகள் இளம் வெள்ளை நிறத்தில், அகலமான கருப்பு நிற வெளி விளிம்புடன் காணப்படும்.
bengal gram
வட்ட வடிவ துளை
2. அரைக் காவடிப்புழு: ஆட்டோக்ராபா நைகிரிஸிக்னா

அறிகுறிகள்:

  • எலும்புக்கூடு போன்ற இலைகள், செடிகள் வெள்ளை நிறமாக மாறும்
  • இளம் புழுக்கள் இலை மொட்டு, பூக்கள், இளம் காய்கள், வளரும் விதைகளை உண்ணும்
  • சிதலமடைந்து, ஒழுங்கற்ற காய்கள் தோன்றும் (இது பச்சைக்காய்ப் புழுவின் அறிகுறிகளுக்கு மாறுபட்டு இருக்கும்)

பூச்சியின் விபரம்:

  • முன்னிறக்கைகள் வித்தியாசமான வடிவமைப்புடன் காணப்படும்
  • புழுக்கள் 25 மி.மீ நீளத்துடன் இருக்கும்

கட்டுப்பாடு

  • 10 % பொருளாதாரச் சேத நிலை அடையும் போது கட்டுப்பாட்டு முறைகளை மேற்கொள்ள வேண்டும்.
  • ஆழமான வெயில் உழவு 2-3 வருடங்களுக்கு செய்ய வேண்டும்.
  • பருவத்துக்கு முன்னரே விதைத்தல், குறைந்த வாழ்நாள் உடைய இரகங்களைப் பயிரிடுதல்
  • நெருக்கமாகப் பயிரிடுவதை தவிர்க்க வேண்டும்.
  • உயரமான சோளப்பயிரை பயிரிடுவதால் பறவை தாங்கிகளாக செயல்படும்.
  • புழுக்கள் மற்றும் தாய்ப்பூச்சிகளை அகற்றி அழிக்க வேண்டும்.
  • இனக் கவர்ச்சிப்பொறி 50 மீ இடைவெளியில் ஒரு எக்டருக்கு 5 பொறிகள் என்ற விதத்தில் வைக்க வேண்டும்.
  • ஒரு எக்டருக்கு 50 பறவை தாங்கிகள் அமைக்க வேண்டும்.
  • விளக்குப் பொறிகள் 5 ஏக்கருக்கு ஒன்று அமைத்து பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம்.
  • டிரைக்கோகிரம்மா கைலோனிஸ் ஒரு எக்டருக்கு, ஒரு வாரத்திற்கு 1.5 இலட்சம் என்ற அளவில் 4 முறையில் அளிப்பதால் கட்டுப்படுத்தலாம்.
  • பச்சை கண்ணாடியிறக்கைப் பூச்சி, இறைவிழுங்கிகளான பச்சாடைப்பூச்சி, சிலந்திகள், எறும்புகளை வளரவிடலாம்.
  • என். பி. வி 250 எல். இ  / எக்டர் என்ற விகிதத்தில் புழுக்களின் ஆரம்ப நிலையில் அளிக்க வேண்டும். என். பி. வி யை 0.1 % டீ பால் சோப் கரைசல்  + கரும்புச் சர்க்கரை 0.5 % என்ற விதத்தில் கலந்து 10 – 15 நாட்கள் இடைவெளியில் பூக்கும் பருவம் ஆரம்பிக்கும் காலத்தில் மூன்று முறை தெளிக்க வேண்டும்.
  • பி. டி. 600 கி வேப்ப எண்ணெய்  / புங்கம் எண்ணெய் 80 கி. கி 2 மிலி / லிட்டர் என்ற அளவில் தெளிக்க வேண்டும்
  • வேப்பங்கொட்டைச்சாறு 5%, டிரைஅசோபாஸ் 0.05 %  அளித்த பின்னர் 2 முறை தெளிக்க வேண்டும்
  • பின்வரும் பூச்சிக் கொல்லிகளில் ஏதேனும் ஒன்றை 25 கிலோ / எக்டர் என்று அளிக்க வேண்டும்.
    • குயினால்பாஸ் 4 டி
    • கார்பரில் 5 டி
    • குயினால்பாஸ் 25 இ.சி ஒரு எக்டருக்கு 1000 மி லி என்ற அளவில் தெளிக்க  வேண்டும்.
3. வெட்டுப்புழு -  அக்ரோடிஸ் இப்ஸிலான்

அறிகுறிகள்

  • புழுக்கள் 2-4 இன்ச் ஆழத்தில் மண்ணில் இருக்கும்
  • புழுக்கள் இளம் செடிகளின் அடிப்புறம், கிளைகள் அல்லது வளரும் செடிகளின் தண்டுகளை வெட்டும்.
  • வெட்டிய செடிப்பகுதிகளை மண்ணுக்குள் எடுத்துச் சென்று உண்ணும்.
  • புதைந்துள்ள தண்டு அல்லது கிளைகள் கண்டிப்பாகி புழுக்கள் மறைவதற்கான இடமாக இருக்கும்.

பூச்சியின் விபரம்

  • முட்டைகள் – மண்கட்டிகள், தண்டின் அடிப்பாகம், இலையின் இரண்டு பக்கமும் காணப்படும்.
  • புழுக்கள் – அடர் பழுப்பு நிறத்துடன் சிவப்பு நிற தலையுடன் காணப்படும்
  • கூட்டுப்புழு – மண் கூட்டுக்குள் வளரும்
  • தாய்ப்பூச்சி – பழுப்பு நிறத்தில், எண்ணற்ற அலை வரிகள் மற்றும் புள்ளிகளுடன் 3 – 5 செ.மீ அளவுக்கு இறக்கைகளின் குறுக்கே காணப்படும்.

கட்டுப்பாடு

  • ஆழமான வெயில் உழவு செய்ய வேண்டும்.
  • நன்கு மட்கிய அங்கக உரங்களை பயன்படுத்த வேண்டும்.
  • பயிர் சுழற்சி முறையை மேற்கொள்ள வேண்டும்.
  • அக்டோபரின் கடைசி வாரத்தில் பருவத்துக்கு முன்னரே விதைக்க வேண்டும்.
  • கோதுமை அல்லது பின் விதை அல்லது கடுகு பயிருடன் இடைப்பயிரிட வேண்டும்.
  • ஆரம்பகாலத் தாக்குதலின் போது பூச்சிகளை சேகரித்து அழிக்க வேண்டும்.
  • தக்காளி அல்லது வெண்டைச் செடியை வயலின் அருகில் பயிரிடக் கூடாது.
  • துலுக்கமல்லி செடியை வரப்பு ஓரங்களில் பயிரிட வேண்டும்.
  • விளக்குப் பொறிகளை அமைத்து தாய்ப்பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம்.
  • குயினல்பாஸ் 25 இ.சி 1000 மி.லி /  எக்டர் அளவில் தெளிக்க வேண்டும்.
  • அதிகத் தாக்குதலின் போது, ஸ்பார்க் 36 இ.சி 1000 மிலி / எக்டர் அல்லது ப்ரோபெனோபாஸ் 50 இ.சி 1500 மிலி /  எக்டர் என்ற அளவில் 500 – 600 லிட்டர் தண்ணீரில் கரைத்து தெளிக்க வேண்டும்.
4. கரையான்: ஒடோன்டோடெர்மஸ் ஒபிஸிஸ்

அறிகுறிகள்

  • வேர் மற்றும் தண்டை துளைத்து உண்பதால் விரைவில் பயிர்கள் வாடிவிடும்.
  • வறட்சிக் காலத்தில் முக்கியமாக பயிர்களைத் தாக்கும்.

பூச்சியின் விபரம்

  • கரையான் புற்றுக்களில் உயிர் வாழும்.
  • மண்ணில் மற்றும் பயிர்களில் முட்டைகளை இடுகின்றன.
  • வேலையாட்கள் பூச்சி சிறியதாக (4 மி.மீ), மென்மையாக, வெள்ளைநிற உடம்புடன், பழுப்புநிறத் தலையுடன் காணப்படும்.
bengal gram

கட்டுப்பாடு

  • இடை உழவு முறைகளை அடிக்கடி செய்ய வேண்டும்.
  • விதைப்பதற்கு முன் பாசனம் செய்ய வேண்டும்.
  • வயல் சுகாதாரம், பயிர் குப்பைகளையும், மக்காத பயிர்களையும் அந்தந்த நேரத்தில் அழித்து விட வேண்டும்.
  • மக்காத பண்ணை உரம் அல்லது கம்போஸ்ட் உரங்களை பயன்படுத்தக் கூடாது.
  • 2 – 3 முறை ஆழமாக உழவு செய்ய வேண்டும்.
  • வயலைச் சுற்றியுள்ள கரையான் புற்றுக்களை அழிக்க வேண்டும்.
  • குளோர்பைரிபாஸ் ஒரு கிலோ விதைக்கு 4 மிலி என்ற அளவில் கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
Updated on April 29, 2014
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2014