| 
        
          
            
              | பயிர் பாதுகாப்பு  :: மக்காச்சோள பயிரைத் தாக்கும் பூச்சிகள் |  
          
            | 
                
                  |  |  
                  | 1.  குருத்து ஈ : அதெரிகோனா ஓரியன்டாலிஸ் |  
                  | தாக்குதலின் அறிகுறிகள்  
                      முட்டையிலிருந்து  வெளிவரும் காலற்ற புழுக்கள் இலையுறைக்கும், தண்டிற்கும் இடையே குடைந்து சென்று நடுக்குருத்தை  தாக்குகிறது. இதனால் நடுக்குருத்து அழுகிவிடும்.  | பூச்சியின் விபரம்: 
                      குருத்து ஈ: வெள்ளை நிறத்தில்  இருக்கும்.   |  
                  | 
                    
                      |  |  |  |  
                      | முதிர் பூச்சி | இளம் பூச்சி, புழு, கூட்டுப்புழு மற்றும் முதிர் பூச்சி | காய்ந்த நடுக்குருத்து |  |  
                  | கட்டுப்படுத்தும் முறைகள்: 
                      பூச்சி மருந்தினால் விதைமுலாம் பூசப்பட்ட விதைகளை       பயன்படுத்தவேண்டும்.இமிட்டோகுளோரோபிட் மருந்தினால் பூசப்பட்ட       விதைகளை பயன்படுத்தவேண்டும்.அறுவடை செய்த உடனே சோளத் தட்டைகளை அகற்றியபின்       உழுதுவிடவேண்டும்.குறைந்த விலை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்       கழக மீன் இறைச்சிப் பொறியினை எக்டருக்கு 12 என்ற எண்ணிக்கையில் அமைத்து குருத்து       ஈக்களை கவர்ந்து அழிக்கலாம்.கீழ்காணும் ஏதேனும் ஓர் மருந்தினை தெளிக்கவேண்டும்
                        மெத்தில் டெமட்டான் 25 இ.சி        500 / எக்டர் டைமீதோயேட் 30 இ.சி 500 மிலி        / எக்டர் வேப்பங்கொட்டை வடிநீர் 5 சதவீதம் நீம் அசால் 1 சதவீதம்  |  
                
                  | 
 மேலே
  |  
                  | 2.தண்டுத்துளைப்பான்: கைலோ பார்டெலஸ் |  
                  | தாக்குதலின் அறிகுறிகள் 
                      புழு தண்டினைத் துளைத்து உள்ளே சென்று பகுதியைத்       தின்று சேதம் விளைவிக்கும்.இளம் பயிரில் இப்பூச்சியினால் தாக்குதல் ஏற்பட்டால்       நடுக்குருத்து காய்ந்துவிடும்.வளரும் பயிரிலிருந்து வெளிவரும் இலைகளின் இரண்டு       பகுதியிலும் சம அளவில் துவாரங்கள் இருக்கும். |  
                  |  |  
                  | 
                    
                      | 
                        
                          | பூச்சியின் விபரம்  
                              புழுக்கள் பழுப்பு கலந்த மஞ்சள் நிறத்தில் இருக்கும்.  தலை பழுப்பு நிறத்துடன் காணப்படும்.தாய் அந்துப்பூச்சி பழுப்பு நிறத்தில் இருக்கும்.   |  |  |  |  
                          | கூட்டுப்புழு மற்றும் புழு | அந்துப்பூச்சி |  |  |  
                  | கட்டுப்படுத்தும் முறைகள்: 
                      அவரை அல்லது தட்டைப்பயிரை 4:1 என்ற விகிதத்தில்       ஊடுபயிராக பயிர் செய்யலாம்.விளக்குப்பொறி அமைத்து அந்துப்பூச்சிகளைக்       கவர்ந்து அழிக்கலாம்.அறுவடை செய்த உடனே மக்காச்சோளத் தட்டைகளையும்       சேர்த்து நிலத்தை உழவு செய்வதன் மூலம் கூட்டுப்புழுக்களை அழிக்கலாம். கீழ்காணும் ஏதேனும் ஒர் மருந்தினை மணலுடன்       (50 கிலோ) கலந்து வீசவும்
                        போரேட் 10 ஜி 8 கிலோ கார்போபியூரான் 3 ஜி 17 கிலோ கார்பரில்+லின்டேன் 4 ஜி 20 கிலோ கார்பரில் 50 டபில்யூ.பி 1 கிலோ                       |  
                
                  | மேலே
  |  
                  | 
                    3. இளஞ்சிகப்பு தண்டுதுளைப்பான் 
                   |  
                  | தாக்குதலின் அறிகுறிகள்  
                      
                        இளஞ்சிவப்பு  புழு தண்டினை துளைத்து உள்ளே சென்று குருத்துக்களை தாக்குகிறது.தாக்கப்பட்ட  இளம்பயிரில் குருத்து அழுகிவிடும். | பூச்சியின் விபரம் 
                      பெண் அந்துப்பூச்சி முட்டையை இலையை அடிப்  பகுதியில் இடுகிறது. புழு-சிகப்பு கலந்த பழுப்பு நிறத்திலும்இ  தலை கருமை நிறமாகவும் இருக்கும். |  
                  | 
                    
                      | 
 |  | 
 |  
                      | முட்டை | கூட்டுப்புழு மற்றும் புழு | முதிர் பூச்சி |  |  
                
                  | மேலே
  |  
                  | 4. கதிர் துளைப்பான் ஹெலிகோவெர்பா  ஆர்மீஜீரா |  
                  | தாக்குதலின் அறிகுறிகள்  
                      புழு கதிரை துளைத்து உள்ளே சென்று தின்று சேதம்       விளைவிக்கும்.புழுவின் சேதக்கழிவுகள் தாக்கப்பட்ட பகுதியில்       காணப்படும். பூச்சியின் விபரம்  
                      முட்டைகள் : உருண்டை வடிவமாக  வெள்ளை நிறத்தில் இருக்கும்புழு : பச்சை கலந்த  பழுப்பு நிறத்தில் இருக்கும்.  உடலின் மேற்பரப்பில்  பழுப்பு மற்றும் வெள்ளை நிறக்கோடுகள் காணப்படும்.
கூட்டுப்புழு : பழுப்பு நிறத்தில்  இலை, காய் மற்றும் மண்ணினுள் காணப்படும்அந்துப்பூச்சி பழுப்பு கலந்த மஞ்சள் நிறத்திலும் இருக்கும்.  முன் இறக்கை பச்சை கலந்த பழுப்பு நிறத்திலும், பின் இறக்கை வெள்ளை நிறத்திலும் இருக்கும். |  |  
                  |  |  
                  | 
                    
                      
                        |  |  |  |  
                        | இளம் பூச்சி | முதிர் பூச்சி |  |  
                  | கட்டுப்படுத்தும் முறைகள்: 
                      விளக்கு பொறி அமைத்து அந்துப்பூச்சிகளைக் கவர்ந்து       அழிக்கலாம்இனக்கவர்ச்சி பொறி அமைத்து ஆண் அந்துப்பூச்சியின்       எண்ணிக்கையைக் குறைக்கலாம்கதிர் வெளிவந்த 18 நாட்களுக்கு பிறகு கீழ்காணும்       மருந்தினுள் ஏதேனும் ஒன்றினைத் தூவி அந்துப்பூச்சியின் தாக்குதலைக் குறைக்கலாம்
                        
                          கார்பரில்  25 கிலோ மாலத்தியான்  25 கிலோ பாசலோன்  25 கிலோ  |  
                
                  | மேலே
  |  
                  | 5. கொத்துப்புழு : கிரிப்டோபிளேபஸ் கினிடியெல்லா |  
                  | தாக்குதலின் அறிகுறிகள்  
                      புழு பூக்களில் உள்ள பச்சையத்தினை உண்ணும் பின்னர்       கதிர்கள் பால் பிடிக்கும் தருணத்தில் சேதப்படுத்தும்.மக்காச்சோள கதிர்கள் ஒன்றோடு ஒன்று இணைந்து  காணப்படும்.  |  | பூச்சியின் விபரம்  
                      புழு நீளமாகவும், கரும்பழுப்பு நிறத்திலும்       காணப்படும்.தாய்பூச்சியின் முன்னிறக்கைகள் கரும்சாம்பல்       நிறத்தில் காணப்படும்  கட்டுப்படுத்தும் முறைகள்: 
                       மோனேகுரோடோபாஸ் (அ) எண்டோசல்பானை தெளிக்கலாம்   |  
                
                  | மேலே
  |  
                  | 6. சாம்பல் வண்டு : மில்லோசிரஸ் வகை |  
                  |  | தாக்குதலின் அறிகுறிகள்   
                      புழுக்கள் வேர்களின் நுனிகளை உண்ணும், வண்டுகள்       இலைகளின் ஓரங்களைக் கடித்து சேதம் உண்டாக்கும். பூச்சியின் விபரம்
 
                      வண்டு : சாம்பல் நிறத்தில்  காணப்படும் கட்டுப்படுத்தும் முறைகள்: 
                      குயினால்பாஸ்  25 இ.சி 1 லி , எக்டர் (அ) கார்பரில் 50 டபில்யூ பி 1 கிலோ  |  
                
                  | மேலே
  |  
                  | 7. தத்துப்பூச்சி : பைரில்லா பெர்புஸில்லா |  
                  | தாக்குதலின் அறிகுறிகள்  
                      இலைகள் மஞ்சள் நிறத்தில் தோன்றும் இலைகளில் கருமையான பூசணத்தினால் மூடப்பட்டிருக்கும்மேற்பகுதியில் உள்ள இலைகள் காய்ந்தும், பக்கவாட்டில்       மொட்டுகள் முளைக்கத் துவங்கும்  | பூச்சியின் விபரம்  குஞ்சுகள் : ஆரஞ்சு நிறத்திலும்,  குஞ்சுகளின் பின்பகுதியில் வால் போன்ற அமைப்பு காணப்படும்.  தத்துப்பூச்சி:  வளர்ந்த தத்துப்பூச்சி மஞ்சள் நிறத்திலும் கூரிய  மூக்குடனும் காணப்படும். |  
                  | கட்டுப்படுத்தும் முறைகள்: 
                      தேவைக்கு அதிகமான பசுந்தாழ் உரங்களைத் தவிர்க்க       வேண்டும்விளக்குப் பொறி அமைத்து தத்துப்பூச்சியை கவர்ந்து       அழிக்கலாம்நட்ட 150 மற்றும் 210 நாட்கள் கழித்து தோகை       உரிப்பதன் மூலம் குஞ்சுகளையும் முட்டைகுவியலையும் அழிக்கலாம்முட்டைப்புழு ஒட்டுண்ணியான எப்ரிகிரேனியா       மெலனோலூகா எக்டருக்கு 8-10 இலட்சம் வீதம் வெளியிட்டு தத்துப்பூச்சியின்       முட்டைகளை அழிக்கலாம்கீழ்காணும் ஏதேனும் ஒரு மருந்தினை 150 வது மற்றும்       210 வது நாளில் தெளிக்கலாம்
                        மாலத்தியான் 50 இ.சி 2000 மிலிமோனோகுரோடோபாஸ் 36 டபில்யூ.எஸ்.சி        2000 மிலி  | 
                    
                      |  |  
                      | முதிர் பூச்சி |  |  
                
                  | மேலே
  |  
                  | 8. அசுவினி : ரோபாலோசைபம் மெய்டிஸ் |  
                  | தாக்குதலின் அறிகுறிகள்  
                      இலைகள் மஞ்சள் நிறமாக மாறும்இலை குருத்துகளின் வட்டப் பகுதியை சுற்றிலும்       கூட்டமாக காணப்படும்    | பூச்சியின் விபரம்  அசுவினி - கரும் பச்சை  நிற கால்களுடன் மஞ்சள் நிறமாக தோன்றும்  கட்டுப்படுத்தும் முறைகள்: 
                      பூச்சி தாக்கிய செடியின் கீழ்பகுதியில் டெமட்டான்       25 இ.சி 20 மிலி பூச்சி மருந்தினை தெளிக்கலாம் |  
                  |  |  
                
                  | மேலே
  |  
                  | 9.குருத்து பூச்சி: பெரிகிரென்ஸ் மெய்டிஸ் |  
                  | தாக்குதலின் அறிகுறிகள்  
                      தாக்கப்பட்ட பயிர்கள் மஞ்சள் நிறமாகவும், வளர்ச்சி       குன்றியும் காணப்படும் தாக்கப்பட்ட பயிர்களில் இலைகள் மேலிருந்து கீழாக       உதிரும் கதிர் பிடித்தல் இருக்காது மற்றும் தாக்குதல்       தீவிரமாக இருந்தால் பயிர்கள் காய்ந்துவிடும்இலைகளில் கருமையான பூசணத்தினால் மூடப்பட்டிருக்கும்  | பூச்சியின் விபரம்  முட்டை : இலையின்  திசுகளின் உள்ளே முட்டைகள் இட்டு வெள்ளை நிற மெழுகால் மூடப்பட்டிருக்கும்தாய்ப்பூச்சி : இறக்கைகள்  ஒளி ஊடுருவக்கூடியதாகவும், கரும் பழுப்பு அல்லது மஞ்சள் கலந்த பழுப்பு நிறமாகவும் காணப்படும்.
 |  
                  | 
                    
                      |  |  |  |  |  
                      | இளம் பூச்சி | முதிர் பூச்சி |  |  
                  | கட்டுப்படுத்தும் முறைகள்: கீழ்வரும்  பூச்சி மருந்தினுள் ஏதேனும் ஒன்றை தெளிக்கவும்  
                      டையசின் 0.04 சதவிகிதம் டைமிதோயேட் 0.02 சதவிகிதம்பாஸ்பாமிடான் 250 மி.லி |  
                
                  | மேலே
  |  
                  | 10.கதிர் நாவாய் பூச்சி:  கலோக்கோரிஸ்  அங்கஸ்டேடஸ் |  
                  | தாக்குதலின் அறிகுறிகள்  
                      குஞ்சுகளும், வளர்ந்த பூச்சியும் கதிர் பால்பிடிக்கும்       தருணத்தில் சாறை உறிஞ்சுகிறது பாதிக்கப்பட்ட கதிர் பால் பிடிக்காமல் சுருங்கி       பழுப்பு நிறத்தில் இருக்கும் குஞ்சுகள் ஆரஞ்சு மற்றும் வெளிரிய பச்சை நிறமாகவும்,       தாய்பூச்சியுடன் கதிர்களில் காணப்படும்  | பூச்சியின் விபரம்  
                      முட்டை : உருண்டையாக  நீல நிறத்தில் இருக்கும் குஞ்சுள் : ஒடுங்கியும்,  பச்சை நிறமாகவும் காணப்படும்தாய்ப்பூச்சி : ஆண் தாயப்பூச்சி  பச்சை நிறமாகவும், பெண்தாய்ப்பூச்சி பச்சை நிறமாகவும், ஓரத்தில் பழுப்பு நிறமாகவும்  காணப்படும்  |  
                  | கட்டுப்படுத்தும் முறைகள்: கீழ்காணும்  ஏதாவது ஒரு மருந்தினை கதிர் வரும் தருவாயில் மூன்றாவது மற்றும் பதினெட்டாவது நாளில்  தெளிக்கவும்  
                                              கார்பரில் 10 டி 25 கிலோ /எக்டர்                         மாலத்தியான் 5 டி 25 கிலோ /எக்டர்                         பாசலோன் 4 டி 25 கிலோ /எக்டர்                         வேப்பம் கொட்டை வடிநீர் 5 சதவீதம்                         அசடிராக்டின் 1 சதவீதம்  |  |  
 |