பயிர் பாதுகாப்பு ::சோள பயிரைத் தாக்கும் பூச்சிகள்
Cereals Sorghum
துளைப்பான்      
குருத்து ஈ - அதெரிகோனா சொக்கேட்டா அறிகுறிகள் அடையாளம் கட்டுப்பாடு
தண்டு துளைப்பான் – கைலோ பார்டெலஸ் அறிகுறிகள் அடையாளம் கட்டுப்பாடு
இளஞ்சிவப்பு தண்டு துளைப்பான் – செசாமியா இன்பெரன்ஸ் அறிகுறிகள் அடையாளம் கட்டுப்பாடு
கதிர் உண்ணும் பூச்சிகள்      
கதிர் துளைப்பான் - ஹெலிகோலெர்பா ஆர்மிஜீரா அறிகுறிகள் அடையாளம் கட்டுப்பாடு
கதிர் நாவாய்ப்பூச்சி -கலோகொரிஸ் அங்குஸ்டேட்டஸ் அறிகுறிகள் அடையாளம் கட்டுப்பாடு
சோளக்கதிர் ஈ-கான்டேரினா சொர்கிகோலா அறிகுறிகள் அடையாளம் கட்டுப்பாடு
சாறு உறிஞ்சும் பூச்சிகள்      
குருத்துப்பூச்சி -பெரிகிரினஸ் மெய்டிஸ் அறிகுறிகள் அடையாளம் கட்டுப்பாடு
இலைப்பேன் -ரேப்லோஸிப்பம் மெய்டிஸ் அறிகுறிகள் அடையாளம் கட்டுப்பாடு
 
1. குருத்து ஈ : அதெரிகோனா சொக்கேட்டா

தாக்குதலின் அறிகுறிகள் :

  • புழுக்கள் தண்டுகளை துளைத்து உள்ளே சென்று உண்பதால் நடுக்குருத்து காய்ந்து விடும்.
  • நடுக்குருத்தின் அடிப்பாகத்தை தாக்குவதால் நடுக்குருத்து அழுகிவிடும்.
  • தாக்கப்பட்ட பயிர்களில் பக்கத் தூர்கள் உருவாகும்.
  • இப்பூச்சி ஒரு மாதப் பயிரை மட்டும் தாக்கும்.

பூச்சியின் விபரம் :

  • முட்டை : அரிசி போன்று தட்டையாக வெள்ளை நிறத்தில் இருக்கும்.
  • குருத்து ஈ : வெள்ளை சாம்பல் நிறத்தில் இருக்கும்.

 

கட்டுப்படுத்தும் முறைகள் :

  • பூச்சியின் தாக்குதலை எதிர்த்து வளரக்கூடிய இரகங்களான கோ - 1 , சி.எஸ்.எச் 15 ஆர், மாலதாண் ஆகியவற்றைப் பயிரிடலாம்.
  • சரியான பருவங்களில் முன்கூட்டியே விதைப்பு செய்வதன் மூலம் இப்பூச்சியின் தாக்குதலைத் தவிர்க்கலாம்.
  • பூச்சி மருந்தினால் விதைமுலாம் பூசப்பட்ட விதைகளை பயன்படுத்த வேண்டும்.
  • இமிடகுளோர்பிட் மருந்தினால் விதை நேர்த்தி செய்த விதைகளை விதைக்கவேண்டும்.
  • அறுவடை செய்த உடனே சோளத்தட்டைகளை அகற்ற வேண்டும்.
  • குறைந்த விலை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழக மீன் இறைச்சிப் பொறிகளை எக்டருக்கு 12 என்ற எண்ணிக்கையில் அமைத்து குருத்து ஈக்களை கவர்ந்து அழிக்கலாம்.
  • கீழ்காணும் ஏதேனும் ஒர் மருந்தினை நாற்றுகள் நாற்றாங்காலில் இருக்கும் போது தெளிக்கவேண்டும்.
    மெத்தில் டீமட்டான் 25 இ.சி 18 மிலி
    டைமீத்தேயேட் 30 இ.சி 12 மிலி
  • நேரிடையாக சோளம் விதையை விதைப்பு செய்த வயலில் கீழ்காணும் ஏதேனும் ஒர் மருந்தினைத் தெளித்து குருத்து ஈக்களைக் கட்டுப்படுத்தலாம்.
    மெத்தில் டீமட்டான் 25 இ.சி 18 மிலி
    டைமீத்தேயேட் 30 இ.சி 12 மிலி
 

2. தண்டுத்துளைப்பான்: கைலோ பார்டெலஸ்

தாக்குதலின் அறிகுறிகள்

  • நடுக்குருத்து வதங்கி மற்றும் காய்ந்து காணப்படும்.
  • இளம் பயிரில் இப்பூச்சியினால் தாக்குதல் ஏற்பட்டால் நடுக்குருத்து காய்ந்துவிடும்.
  • வளரும் பயிரிலிருந்து வெளிவரும் இலைகளின் இரண்டு பகுதியிலும் சம அளவில் துவாரங்கள் இருக்கும்
  • வளர்ச்சியடைந்த பயிர் தாக்கப்பட்டால் கதிர் பதராகி போகிவிடும்
 

பூச்சியின் விபரம்

  • புழுக்கள் பழுப்பு கலந்த மஞ்சள் நிறத்தில் இருக்கும். தலை பழுப்பு நிறத்துடன், உடலின் மேற்பரப்பில் கரும்புள்ளிகளும் காணப்படும். தாய் அந்துப்பூச்சி பழுப்பு நிறத்தில் இருக்கும்

 

 

கட்டுப்படுத்தும் முறைகள்:

  • குருத்துக் காய்ந்த செடிகளை வயலிலிருந்து அகற்றிவிடவேண்டும்
  • அறுவடை செய்த உடனே, சோளத் தட்டைகளையும் சேர்த்து நிலத்தை உழவு செய்வதன் மூலம் தண்டுத்துளைப்பானின் கூட்டுப் புழுக்களை அழிக்கலாம்
  • அவரை அல்லது தட்டைப்பயிரை 4:1 என்ற விகிதத்தில் சோளத்துடன் ஊடுபயிராக செய்வதன் மூலம் இப்பூச்சியின் தாக்குதலை சிறிதளவு குறைக்கலாம்
  • விளக்கு பொறி அமைத்து அந்துப்பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கலாம்
  • முட்டை ஒட்டுண்ணியான ட்ரைக்கோக்ரைமா, பிராக்கன் மற்றும் புழு ஒட்டுண்ணியான மைக்ரோபிராக்கள், ஏபன்டெலஸ் ஆகியவைகளை பயன்படுத்தி அந்துப் பூச்சியின் முட்டைக் குவியலையும், புழுக்களையும் சேர்த்து அழிக்கலாம்

 

 
3.இளஞ்சிவப்பு தண்டு துளைப்பான்: செசாமியா இன்பெரன்ஸ்

தாக்குதலின் அறிகுறிகள்

  • இளஞ்சிவப்பு புழு தண்டினை துளைத்து உள்ளே சென்று குருத்துக்களை தாக்குகிறது
  • தாக்கப்பட்ட இளம்பயிரில் குருத்து அழுகிவிடும்

பூச்சியின் விபரம்

  • பெண் அந்துப்பூச்சி முட்டையை இலையின் அடிப்பகுதியில் இடுகிறது
  • புழு - சிகப்பு கலந்த பழுப்பு நிறத்திலும் தலை கருமை நிறமாகவும் இருக்கும்
 
4. கதிர் துளைபான்: ஹெலிகோவெர்பா ஆர்மீஜீரா

தாக்குதலின் அறிகுறிகள்

  • புழு கதிரை துளைத்து உள்ளே சென்று தின்று சேதம் விளைவிக்கும்.
  • புழுவின் சேதக்கழிவுகள் தாக்கப்பட்ட பகுதியில் காணப்படும்.

பூச்சியின் விபரம்

  • முட்டைகள் : உருண்டை வடிவமாக வெள்ளை நிறத்தில் இருக்கும்
  • புழு : பச்சை கலந்த பழுப்பு நிறத்தில் இருக்கும். உடலின் மேற்பரப்பில் பழுப்பு மற்றும் வெள்ளை நிறக்கோடுகள் காணப்படும்.
  • கூட்டுப்புழு : பழுப்பு நிறத்தில் இலை, காய் மற்றும் மண்ணினுள் காணப்படும்
  • அந்துப்பூச்சி பழுப்பு கலந்த மஞ்சள் நிறத்திலும் இருக்கும். முன் இறக்கை பச்சை கலந்த பழுப்பு நிறத்திலும், பின் இறக்கை வெள்ளை நிறத்திலும் இருக்கும்.

கட்டுப்படுத்தும் முறைகள்:

  • விளக்கு பொறி அமைத்து அந்துப்பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கலாம்
  • இனக்கவர்ச்சி பொறி அமைத்து ஆண் அந்துப்பூச்சியின் எண்ணிக்கையைக் குறைக்கலாம்
  • கதிர் வெளிவந்த 18 நாட்களுக்கு பிறகு கீழ்காணும் மருந்தினுள் ஏதேனும் ஒன்றினைத் தூவி அந்துப்பூச்சியின் தாக்குதலைக் குறைக்கலாம்
    • கார்பரில் 25 கிலோ
    • மாலத்தியான் 25 கிலோ
    • பாசலோன் 25 கிலோ
 
5. குருத்துப்பூச்சி: பெரிகிரினஸ் மெய்டிஸ்

தாக்குதலின் அறிகுறிகள்

  • குஞ்சுகள் இலைகளின் சாறை உறிஞ்சுகிறது
  • குஞ்சுகள் தேன் கழிவு நீர் திரவத்தை இலைகளின் மேற்பரப்பில் சுரக்க செய்கிறது
  • தாக்கப்பட்ட இலைகள் நுனி முதல் அடிவரை சுருண்டுவிடுகிறது
  • சேதம் அதிகமாகும் போது பயிர்களில் கதிர் உருவாகுவதில்லை

பூச்சியின் விபரம்

  • குருத்துப் பூச்சி மஞ்சள் கலந்த பழுப்பு நிறத்திலும், கண்ணாடி போன்ற இறகுகளைக் கொண்டிருக்கும்

கட்டுப்படுத்தும் முறைகள்:

  • டையசின் 0.04 சதம் (அ) டைமீத்தேயேட் 0.02 சதம் அல்லது பாஸ்போமிடான் 250 மிலி மருந்தை எக்டருக்கு 500 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும்
 
6. கதிர்நாவாய் பூச்சி: கலோகொரிஸ் அங்குஸ்ட்டேட்டஸ்
தாக்குதலின் அறிகுறிகள் பூச்சியின் விபரம் கட்டுப்படுத்தும் முறைகள்: கார்பரில் 25 கிலோ/ எக்டர் 
மாலத்தியான் 25 கிலோ/எக்டர் 
பாசலோன் 25 கிலோ/எக்டர் 
வேப்பங்கொட்டைச்சாறு 5 சதம்
 
7. சோளக்கதிர் ஈ: கான்டேரினா சொர்கிகோலா

தாக்குதலின் அறிகுறிகள்

  • முட்டையிலிருந்து வெளிவரும் சிகப்புநிற புழுக்கள் பால் பிடிக்கும் கதிர்களை உண்டு சேதப்படும்
  • சோளக்கதிரின் மணிகளை அழுத்தினால் சிகப்பு நிற நீர் வெளிவரும்
  • தாக்கப்பட்ட மணிகள் சுருங்கிவிடும்
  • கதிர் பதராகிவிடும்
  • தாக்கப்பட்ட கதிர்களில் சிறிய துவாரங்கள் காணப்படும்

பூச்சியின் விபரம்

ஈ - ஆரஞ்சு நிறத்தில் இருக்கும்

 

கட்டுப்படுத்தும் முறைகள்:

  • விளக்கு பொறி அமைத்து அந்தப்பூச்சியைக் கவர்ந்து அழிக்கலாம்
  • கதிர் உருவாகிய 18 நாட்கள் கழித்து கீழ்காணும் ஏதேனும் ஒர் மருந்தினை தெளித்து சோளக்கதிர் தாக்குதலைக் குறைக்கலாம்
  • கார்பரில் 25 கிலோ / எக்டர்
  • மாலத்தியான் 25 கிலோ / எக்டர்
  • பாசலோன் 25 கிலோ/ எக்டர்
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2014