பயிர் பாதுகாப்பு :: கரும்பு பயிரைத் தாக்கும் பூச்சிகள்
வெள்ளை ஈ: அலிரோலோபஸ் பாரோடென்சிஸ்
தாக்குதலின் அறிகுறிகள்:
 • இலைகள் மஞ்சள் நிறமாதல்.
 • சோகைகள் இளஞ்சிவப்பு அல்லது கரு ஊதா/நாவல் நிறமாக மாறிப் பின் உலர்ந்து காய்ந்து  போதல்.
 • பாதிக்கப்பட்ட சோகைகளில் வெள்ளை மற்றும் கறுப்புப் புள்ளிகள் காணப்படும்.
 • தாக்குதல் அதிகரிக்கும் போது இலைகள் எரிந்ததுப்போல் தோற்றமளிக்கும்.
 •  கரும்பின் வளர்ச்சி தாமதமாகும்.
   
  இலைகள் மஞ்சள் நிறமாதல்   இளஞ்சிவப்பு அல்லது கரு ஊதா/நாவல் சோகைகள் வெள்ளை மற்றும் கருப்பு புள்ளிகள்
பூச்சியின் விபரம்: 
 • முட்டை: சோகைகளின் அடிப்பகுதியில் முட்டைகள் இடப்பட்டிருக்கும்.  சிறிய வளைந்த காம்புடன் மஞ்சள் நிறமான முட்டைகள் இடப்பட்ட 2 மணி நேரத்தில் இது கருப்பு நிறமாக மாறிவிடும்.
 • குஞ்சுகள் மற்றும் கூட்டுப்புழு: வெளிர் மஞ்சள் நிற முட்டைகள் தட்டையாகவும் பின்பு பளபளக்கும் கருமைநிறமாக மாறி விடும்.நீள்வட்ட வடிவிலும் இருக்கும்.  மெழுகினால் சூழப்பட்டுக் காணப்படும்.  நான்காவது புழு நிலை கூட்டுப்புழுவாக தட்டையாக, சாம்பல் நிறத்தில் குஞ்சுகளை விட சற்று பெரிதாகத் தெரியும். முன் மார்பில் டி ‘T வடிவில் வெள்ளை நிறக் கோடு காணப்படும். இக்கோடு புழு வண்டாக மாறும்போது மார்பினை இரண்டாகப் பிரிக்கும்.
 • முதிர்ந்த பூச்சி: வெளிர் மஞ்சள் நிற உடலில் இறக்கைகள் மெழுகினால் சூழப்பட்டிருக்கும்.
   
  இளம் மற்றும் முதிர்ந்த பூச்சி   வெள்ளை ஈ
கட்டுப்படுத்தும் முறை:

உழவியல் முறைகள்:

 •   வயலில் நீர் தேங்காமல் முறையான வடிகால் வசதி செய்து வைக்க வேண்டும்.
 • 5 மற்றும் 7 வது மாதங்களில் சோகை உரித்தல் வேண்டும்.
 • அதிகளவு உரமிடுவதைத் தவிர்க்கவும்.
 • பைரில்லா, கருப்பு வண்டு, பஞ்சு அசுவினி போன்ற பூச்கிளைக் கட்டுப்படுத்த பூச்சிக் கொல்லிகள் அதிகம் உபயோகிப்பதைத் தவிர்த்தல்.

இயற்பியல் முறை:

 • சோகைகளில் கூட்டுப்புழுக்கள் கூடுகட்டி இருப்பதால், சோகைகளை உரித்து உடனே எரித்து விட வேண்டும். இது வெள்ளை ஈக்களாக வெளி வருவதைத் தடுக்கும்.
 • போதிய அளவு நீர்ப்பாசனம் செய்வதால்  மண்ணின் ஈரப்பதத்தை சீராக வைப்பதோடு  இந்தநோய் அதிகரிக்காமல் தடுக்கிறது.

இரசயான முறை:

 • 2 கி அசிப்பேட் மருந்தினை 1 லி நீரில் கரைத்து தெளிக்க வேண்டும்.1 மாதம் கழித்து மீண்டுமொரு முறை தெளிப்பதன் மூலம் முட்டையிலிருந்து வெளிவரும் குஞ்சுகள் அழிக்கப்படும்.
 • க்ளோர்ப்பயிரிபாஸ் 1250 லி நீரில் கரைத்து கைத்தெலிப்பான் முலம் தெளிக்க வேண்டும்
 • தயமெத்தாக்ஸம் 25 wg @125 கிராம்/ஹெக்டேர் 750 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
Content Validators:
Dr.V.Jayakumar, Senior Scientist (Plant Pathology), Sugarcane Breeding Institute, Coimbatore -641007.
Dr.T.Ramasubramanian, Senior Scientist (Entomology), Division of Crop Protection, Sugarcane Breeding Institute, Coimbatore -641007.
Dr.M.Ravi, Assistant Professor (Entomology), Krishi Vigyan Kendra, Sirugamani- 639115

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015