பயிர் பாதுகாப்பு :: கரும்பு பயிரைத் தாக்கும் பூச்சிகள்
சாம்பல் நிற வண்டு: கோலோட்ரைக்கியா கொன்சங்கினியா
தாக்குதலின் அறிகுறிகள்:
  • முதல் பயிரை விட, மறு தாம்புப் பயிரில் இப்பூச்சித் தாக்குதல் அதிகம் காணப்படுகின்றது.
  • இலைகள் மஞ்சள் நிறமடைந்து வாடி சருகுபோன்று மாறிவிடும்.
  • உச்சிப் (குருத்தின்) பகுதி முழுதும் காய்ந்து விடும்.
  • பாதிக்கப்பட்ட கரும்பினை இழுத்தால், எளிதில் வெளிவந்து விடும்.
  • வேர் மற்றும், அடிக்குருத்து பகுதியில் பெரும் சேதம் விளைவிக்கும்.
  • பாதிக்கப்பட்ட கரும்புகள்  வேரற்று கீழே சாய்ந்து விடும்.
 
  மஞ்சள் இலைகள் காய்ந்த உச்சிப் (குருத்தின்) பகுதி பாதிக்கப்பட்ட கரும்பு பாதிக்கப்பட்ட வேர்
பூச்சியின் விபரம்: 
  • முட்டை: ஒரு பெண் வண்டானது மண்ணில் 27 முட்டைகள் இடக்கூடியது.  இதன் முட்டைகள் உருண்டை வடிவில் மண் தவரினால் சூழப்பட்டிருக்கும்.
  • புழு: சதைப்பற்றுடன் ஆங்கில ‘சி’ (C)  எழுத்து வடிவில் மஞ்சள் கலந்த வெள்ளை நிறத்தில் காணப்படும்.  கரும்பின் வேர் மற்றும் மண்ணில் அதிகம் காணப்படும்.
  • கூட்டுப்புழு: கூட்டினுள் மண்ணில் ஆழப்பகுதியில் காணப்படும்.  மஞ்சள் முதல் பழுப்பு நிறத்தில் இருக்கும். இதன் கூடு மண்ணால் ஆனது.
  • வண்டு: வண்டுகள் கூட்டிலிருந்து வெளிவந்த உடன் சிவப்பு அல்லது பழுப்பு நிறத்தில் இருக்கும். பின் கருமை நிறமாக மாறிவிடும்.
   
  புழு   வண்டு
கட்டுப்படுத்தும் முறை:

உழவியல் முறைகள்:

  • கோடை காலங்களில் அறுவடை முடிந்த உடன் ஒரு ஆழமான உழவு செய்ய வேண்டும்.
  • வயலில் எப்பொழுதும் ஈரத்தன்மை இருக்குமாறு வைத்திறுக்க வேண்டும் இதனால் புழுக்கள் மண்ணை விட்டு வெளியே வந்துவிடும்.

இயற்பியல் முறைகள்:

  • ஒரு கோடை மழைக்கு பிறகு, வேப்பமரம்,  தீக்குச்சி மரம், வேலமரம் அருகே இருக்கும் வண்டுகளை எடுத்து அழிக்க வேண்டும்.  இதற்கு உயர்ந்த ஒளி உடைய பெட்ரோமார்க்ஸ் விளக்கை பயன்படுத்தி வண்டுகளை அழிக்க வேண்டும். 

இரசாயன முறைகள்:

  • போரேட் 10 ஜி / கார்போபியுரான் 3 ஜி / கியுனால்பாஸ் 5ஜி @ 25 கி.கி/ஹெ என்ற அளவில் பயன்படுத்தவும்.
  • லின்டேன் 1.6 டி 50 கி.கி/ஹெ என்ற அளவில் வேர் மண்டலத்திற்கு அருகே இடலாம்.
  • உயிரியல் முறை: ஒரு எக்டருக்கு 2.5 கி.கி Beauveria brongniortii தொழுஉரத்துடன் கலந்து  சாம்பல் நிற வண்டு தாக்கிய இடங்களில் தெளிக்க வேண்டும்.
Content Validators:
Dr.V.Jayakumar, Senior Scientist (Plant Pathology), Sugarcane Breeding Institute, Coimbatore -641007.
Dr.T.Ramasubramanian, Senior Scientist (Entomology), Division of Crop Protection, Sugarcane Breeding Institute, Coimbatore -641007.
Dr.M.Ravi, Assistant Professor (Entomology), Krishi Vigyan Kendra, Sirugamani- 639115

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015