பயிர் பாதுகாப்பு :: கரும்பு பயிரைத் தாக்கும் பூச்சிகள்
செதில் பூச்சிகள்: மெலாஸ்பிஸ் குளோமமெர்ட்டா
தாக்குதலின் அறிகுறிகள்:
  • இப்பூச்சிகளால் தாக்கப்பட்ட கரும்புகள் நுனி முதலில் காய ஆரம்பிக்கும்.,  பின்பு அவை வெளிர் பச்சை நிறமாக மாறும்.  தொடர்ந்த பூச்சி தாக்குதலால் சோகைகள் மஞ்சள் நிறம் பெற்று விடும்.
  • சோகையின் சாற்றினை உறிஞ்சுவதால், இளம் இலைகள் விரியாமலேயே மஞ்சள் நிறமாகிப் பின் காய்ந்து விடும்.
  • இடைகணுப்பகுதியை விட கணுப்பகுதிகளில் தாக்குதல் அதிக அளவில் இருக்கும்.
  • தாக்கப்பட்ட பயிரின் வளர்ச்சி குன்றி, கரும்பு சுருங்கி கணுவிடைப் பகுதியின் நீளம் குறைந்து விடும்.
  • பின்பு கரும்பு முழுதும் காய்ந்து விடும்.  இக்கரும்பினைப் பிளந்து பார்த்தால் உட்பகுதி செம்பழுப்பு நிறமாகக் காணப்படும்.
  • அடர் காப்பி நிற புள்ளிகளை கணுவிலும் கணுயிடைப் பகுதிகளிலும்  தாக்கப்பட்ட கரும்பில் காணலாம்.
   
  இலைகளின் ஒழுங்கற்ற மஞ்சள் நிறமாதல்   அடர் காப்பி நிற புள்ளிகள் குறைந்த முளைப்புதிறன்
   
  சுருங்கிய கரும்பு   காய்ந்த கரும்பு செதில் பூச்சி
பூச்சியின் விபரம்: 
  • குஞ்சுகள்: பெண் பூச்சிகள் குட்டி போடும் இனப்பெருக்கம் செய்கின்றன.  பெண் பூச்சியின் வயிற்றுக்குள்ளேயே குஞ்சுகள் பொரித்து வெளிவருகின்றன (முட்டையிலிருந்து).  இவை பெண் பூச்சியின் புறப் பாலுறுப்புகள் மூலம் வெளிவருகின்றன.  இவை தவழும் பூச்சிகள் எனப்படும்.  இவை சாறினை உறிஞ்ச சரியான இடத்தினைத் தேர்வு செய்தபின் அங்கேயே ஒட்டிக்கொள்கின்றன.
  • முதிர்ந்த பூச்சிகள்: சாம்பல் கலந்த கருப்பு அல்லது பழுப்பு நிற வட்ட வடிவச் செதில்கள் அடைஅடையாக கணுப்பகுதிக்கு அருகில் ஒட்டியிருக்கும்.
கட்டுப்படுத்தும் முறை:

உழவியல் முறைகள்:

  • கோ 439, கோ 443, கோ 453, கோ 671, கோ 691, கோ 692 போன்ற செதில் பூச்சிக்கு எதிர்ப்புத் தன்மை வாய்ந்த இரகங்களைப் பயிரிடவும்.
  • செதில் பூச்சித் தாக்குதலற்ற விதைக் கரணைகளைத் தேர்வு செய்து வென்ணீரில் நினைத்த பின் நடவேண்டும்.
  • வரப்பு மற்றும் வயல்களை களைகளின்றி சுத்தமாக வைத்திருக்கவும்.
  • தகுந்த நேரத்துக்கு நீர் பாயிச்ச வேண்டும், நீண்ட நேரத்திற்கு வயலில் நீர் தேங்கா வண்ணம் பார்த்துக்  கொள்ளவும்.
  • அதிக முறை கட்டைக் கரும்புகள் பயிரிடுவதைத் தவிர்க்கவும்.

இயற்பியல் முறைகள்:

  • 150 - 210 வது நாட்களில் சோகை உரித்தல் அவசியம் இதனை தொடர்ந்து பார் வரிசையாக விட்டம் கட்ட வேண்டும்.
  • விதைக் கரணைகளை டைக்குளோர்வாஸ் மருந்தினில் 1 மி.லி/1லி நீர் என்ற கரைசலில் நனைத்து எடுத்து, சிமெண்ட் பைகளில் இட்டுக் கட்டி நடவு வயலுக்கு எடுத்து வரவும்.

இரசாயன முறை:

  • டைக்குளோர்வாஸ் அல்லது எதாவது தொடுப் புச்சிக்கொல்லிகள் 2 மி.லி/லி என்ற அளவில் தண்ணீரில் கலந்து கைத் தெளிப்பான் மூலம் தெளிக்கலாம்.
  • 1 லி நீரில் 1 கி மாலத்தியான் கலந்த கரைசலில் விதைக் கரணைகளை 30  நிமிடம் நனைத்துப் பின் நடவும்.
  • டைமேத்தோயேடை 2 மில்லி/லிட்டர் ஒட்டும் திரவத்தில் கலந்து  சோகை உரித்த பின் தெளிக்கவும்.

உயிரியல் முறைகள்:

  • ஹைமனோப்டிரான் ஒட்டுண்ணிகளான அனபிரோடிபிஸ், மயூராய், கைலோனியூரஸ் ஸ்பீசிஸ் மற்றும் பூச்சிகளை உண்ணும் சிலந்திகளான சேனிலேசுலஸ் நுாடஸ், டைரோபாகஸ் புட்செர்டியா போன்றவை செதில் பூச்சிகளை உண்ணக் கூடியவை.
  • வயலில் சில்லோக்கேரஸ் நைய்கிரிட்டஸ் அல்லது பேராஸ்கைநஸ் ஹர்னி முட்டை அட்டைகளை @ 1.5 சி.சி / வெளியிடு / ஹெ  என்று கட்டவேண்டும்
Content Validators:
Dr.V.Jayakumar, Senior Scientist (Plant Pathology), Sugarcane Breeding Institute, Coimbatore -641007.
Dr.T.Ramasubramanian, Senior Scientist (Entomology), Division of Crop Protection, Sugarcane Breeding Institute, Coimbatore -641007.
Dr.M.Ravi, Assistant Professor (Entomology), Krishi Vigyan Kendra, Sirugamani- 639115

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015