பயிர் பாதுகாப்பு :: எண்ணெய்ப்பனை பயிரைத் தாக்கும் பூச்சிகள்

பயிர் : எண்ணெய்பனை
அறிவியல் பெயர் : எலாயிஸ் கினீன்ஸிஸ்
குடும்பம் : பால்மே

காண்டாமிருக வண்டு
காண்டாமிருக வண்டு தென்னை தாக்கும் முக்கிய பூச்சிகளில் ஒன்றாகும். சமீப காலங்களில் இதன் தாக்குதல் எண்ணை பனை மரத்திலும்  தென்படுகிறது. வளர்ந்த வண்டானது எண்ணை பனையின் குருத்து பகுதியியல் சென்று சேதம் விளைவிக்கிறது. இதனால் தாக்கப்பட்ட மரத்தில் இருந்து வெளிவரும் இலையானது சேதமுற்று காணப்படும். பராமரிப்பு சரிவர செய்யப்படாத எண்ணை பனை தோட்டங்களில் இவ்வண்டின் தாக்குதல் பெருமளவு காணப்படுகிறது. அறுவடைக்கு முழுமையாக வராத பெண் பூக்களின் குவியல், ஆங்காங்கே குவிக்கப்பட்டிருக்கும் மட்டைகள் பழங்களைப் பிரித்தபின் மீதமுள்ள குலைகளின் குவியல் ஆகியவைகளில் இவ்வண்டு உற்பத்தியாகும்.

கட்டுப்படுத்தும் முறைகள்

  1. வயலில், மட்டைகள், ஆங்காங்கே குவிக்கப்பட்டிருக்கும் காய் பிரித்த பின் மீதமுள்ள பகுதி இல்லாமல் சுத்தமாக வைத்திருத்தல் வேண்டும்.
  2. காண்டாமிருக வண்டு தாக்குதலுக்கு உண்டான  எண்ணை பனைகளில் குறிப்பாக இளம் பனைகளில் தாய் வண்டுகளை அதற்கென பிரத்யேகமாக உள்ள வண்டுகளை குத்தி எடுக்கும் கம்பிகளை பயன்படுத்தி அழிக்க வேண்டும்.
  3. கரும்புச்சாறு அசிட்டிக் அமிலம், ஈஸ்ட்  முதலியவற்றினைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் சிவப்பு கூன் வண்டுகளை மெட்டாரைசியம் மற்றும் வைரஸ் கிருமிகளான பாக்குகனோ வைரஸ் (Baculovirus) முதலியவற்றை பயன்படுத்தலாம்.
  4. ஒரு எண்ணை பனை ஒன்றுக்கு மூன்று முதல் நான்கு பாச்சை (நாப்தலின்) உருண்டை என்ற விகிதத்தில்  மட்டையின் இடையில் வைப்பதன் மூலம் காண்டாமிருக வண்டு தாக்குதல் தடுக்கலாம்.

சிவப்பு கூன் வண்டு
சிவப்பு கூன் வண்டானது, எண்ணை பனை பயிர் செய்யப்படும் அனைத்துப் பகுதிகளில் பரவலாக காணப்படுகிறது. தாக்குதலுக்கு உள்ளாகும் மரமானது முழுவதுமாக காய்ந்து மடிந்து விடுகிறது. இவ்வண்டின் புழுக்களானது பனையின் தண்டுப் பகுதியின் உட்பகுதியியல் உண்ணுகின்றன. இலைகள் மஞ்சளாகி கொஞ்சம் கொஞ்சமாக மரம் முழுமையாக காய்ந்து விடுகின்றது.

கட்டுப்படுத்தும் முறைகள்
வயலை சுத்தமாக பராமரிக்கவேண்டும். ஊடுபயிரை நெருக்கமாக பயிர் செய்யக்கூடாது.
சிவப்பு கூன் வண்டு தாக்குதலுக்குள்ளான எண்ணை பனையில் சேதாரம் அதிகபட்சம் காணப்படும் சூழலில் மரம் ஒன்றுக்கு 5 முதல் 8 மில்லி மேனோ குரோட்டோபாஸ் மருந்தினை ஊசி மூலம் செலுத்தி கட்டுப்படுத்தவேண்டும்.

எலித் தொல்லை
எண்ணை பனை நாற்றாங்காலில் எலிகளின் தொல்லைகள் அதிகமாக காணப்படுகின்றது. இதனால் கன்றுகளுக்கு பெருமளவில் சேதம் ஏற்படுகிறது. இதனைக் கட்டுப்படுத்த சிங் பாஸ்பேட், அலுமினியம் பாஸ்பேட், டையலான் போன்ற எலி மருந்துகளை பயன்படுத்தலாம். மேலும் எலிகளை பிடித்து அழிக்க பிரத்யேகமாக உள்ள கிட்டிகளை பயன்படுத்தலாம்.
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2013