முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு

ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை :: பயிறு வகைகள்

பயிறு வகைகள்

பயிறுவகைகள் கீழ்கண்ட செயல்பாடுகள் பூச்சியைக் கட்டுப்படுத்த உதவுகின்றன (உளுந்து, பச்சைப்பயிறு, கொண்டைக்கடலை, தட்டைப்பயிர்)

  • தட்டைப்பயிரை ஜீலை மாதத்தின் நான்காவது வாரமும், ஆகஸ்ட் மாதத்தின் இரண்டாவது வாரமும் விதைத்தால் பூச்சிகளும், மஞ்சள் தேமல் நோயும் குறைந்து காணப்படும்
  • துவரையில் உளுந்து மற்றும் தட்டைப்பயிரை ஊடுபயிர் செய்தால் பச்சைத்தத்துப்பூச்சி, பச்சைப்பூச்சி, வண்டுகள், வெள்ளை ஈ, கம்பளி புழுக்கள் மற்றும் தண்டு துளைப்பானின் தாக்கம் சற்று குறைவாகத் தோன்றும்
  • உளுந்தில் சோளம் மற்றும் எள்ளு ஊடுபயிலாகப் பயிரிட்டால் தத்துப்பூச்சியின் தாக்கம் குறையும்
  • பச்சைப்பயிறு, எம்.எல் 337, எம்.எல் 423, எம்.எல் 428, தட்டைப்பயிறு, வி - 16, வி - 18, வி - 19 ஆகிய எதிர்ப்பு இரகங்களை பயிரிடலாம்.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015