பயிர் பாதுகாப்பு :: மக்கா சோளம் பயிரைத் தாக்கும் நோய்கள்

டர்கிசம் இலைக்கருகல் நோய்: எக்ஸிரோஹிலம் டர்சிகம்

  • இந்நோய் ஜம்மு மற்றும் காஷ்மீர், ஹிமாச்சலப்பிரதேசம், மேற்கு வங்காளம், சிக்கிம், மேகாலாயா, திரிபுரா, அஸ்ஸாம், உத்திரப்பிரதேசம், உத்திராஞ்சல், பீகார், மத்தியப் பிரதேசம், குஜராத், கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய இடங்களில்  பரவியுள்ளது.

அறிகுறிகள்:

  • இந்நோயினால் பாதிக்கப்பட்ட செடி மிக சிறிய பொருளாதார சேதாரத்தை ஏற்படுத்தகிறது. இந்நோயின் முந்திய நிலையில் சிறிது நீள் வட்டவடிவ தண்ணீரில், மூழ்கியுள்ள அளவு சிறிய புள்ளிகள் உருவாகும். இவ்வகையான புள்ளிகள் பெரியதாகவும், நீளவடிவமுள்ள புள்ளிகளாகவும், இறந்த செல்களைக் கொண்டும் உள்ளன.
  • இவ்வகையான அறிகுறிகள் முதலில் கீழ்ப்பகுதியிலுள்ள இலைகளிலும் தோன்றி, அவை அளவிலும், எண்ணிக்கையிலும் அதிகரிக்கின்றன. இவ்வகையான அறிகுறிகள் செடிகள் காயும் வரை தோன்றுகின்றன.
  • இவ்வகையான புள்ளிகள் பெரியதாகவும், வெளிர்பச்சை, நிறத்திலும் இருக்கும்.

கட்டுப்பாடு:

  • நோய் எதிர்ப்புத்திறன் கொண்ட இரகங்களான, சால்டாஸ், டெக்கான் 105, ட்ரிசுலேட்டா, டெக்கான் 109, பயிரிடலாம். மேங்கோசெம்  2 கிராம் / லிட்டர் என்ற அளவில் தெளிக்கலாம்.

 

Maize
Maize

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2014