பயிர் பாதுகாப்பு :: மா பயிரைத் தாக்கும் பூச்சிகள்

இலைப்பிணைக்கும் புழு: ஆர்த்தேகா எக்ஷிவினேசியா

தாக்குதலின் விபரம்:

  • புழுக்கள் மெல்லிய நூலிழையினால் அடுத்தடுத்த இலைகளை பிணைத்துக் கொண்டு உள்ளிருந்து பச்சையத்தை சுரண்டி உண்ணும்.
  • இலைகள் காய்ந்து விழுந்துவிடும்.
  • தாக்கப்பட்ட இலைகளின் நரம்புகள் மட்டுமே காணப்படும்.

பூச்சியின் விபரம்:

  • புழு - பச்சை நிறமுடையது தலை பழுப்பு நிறத்திலும் இருக்கும்.
  • அந்துப்பூச்சி - பழுப்பு நிறத்திலும் முன் இற்ககையில் வரிவரியாக கோடுகள் காணப்படும்.

கட்டுப்படுத்தும் முறை:

  • பாதிக்கப்பட்ட இலைகளை புழு மற்றும் கூட்டுப்புழுவுடன் சேர்த்து அகற்றி விட வேண்டும்.
  • கார்பரில் 50 சதம் குருணை மருந்தினை 2 கிராம் + 1 லி தண்ணீரில் கலந்து தெளிக்கவும்.
  • பாரனியா லேக்டிசின்டா, ஒசிமா போன்ற இயற்கை எதிரிகளை பயன்படுத்தி இலைப்பிணைக்கும் புழுவைக் கட்டுப்படுத்தலாம்.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | வெளியீடுகள் | பொறுப்புத் துறப்பு | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016