பயிர் பாதுகாப்பு :: மா பயிரைத் தாக்கும் பூச்சிகள்

ரோமப்புழு: யுப்ராக்டிஸ் ஃபிராட்டெர்னா
தாக்குதலின் விபரம்:

  • ரோமப்புழுக்கள் இலைகளைத் தாக்கி சேதம் விளைவிக்கும்

பூச்சியின் விபரம்:
யுப்ராக்டிஸ் ஃபிராட்டெர்னா:

  • புழு - பழுப்பு நிறத்தில் இருக்கும். தலை சிவப்பு நிறத்திலும் தலையைச் சுற்றி வெள்ளை நிற முடிகள் கொத்தாக காணப்படும்.
  • அந்துப்பூச்சி மஞ்சள் நிறத்தில் இருக்கும் முன் இறக்கையில் வரிவரியாய் கோடுகள் காணப்படும்.

கட்டுப்படுத்தும் முறை:

  • முட்டைக் குவியல்களையும் ரோமப்புழுவையும் சேர்த்து அழிக்கலாம்.
  • விளக்கு பொறி அமைத்த அந்துப்பூச்சியைக் கவர்ந்து அழிக்கலாம்.
  • குளோர்பைரிபாஸ் (அ) குயினால்பாஸ் 2 மிலி மருந்தை 1 லி தண்ணீரில் கலந்து தெளித்தால் ரோமப்புழுவின் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம்.
  • பெரும் தீ அமைத்து கூட்டமாக உள்ள ரோமப்புழுவை அழிக்கலாம்.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | வெளியீடுகள் | பொறுப்புத் துறப்பு | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016