பயிர் பாதுகாப்பு :: மா பயிரைத் தாக்கும் பூச்சிகள்

மாவுப்பூச்சி: டிரஸ்க்கா மாஞ்சிஃபெரே

தாக்குதலின் விபரம:

  • குஞ்சுகளும் மாவுப்பூச்சியும் இலைகள் மற்றும் பூங்கொத்துக்களை தாக்குகிறது
  • குஞ்சுகள் இலைகளின் சாறை உறிஞ்சுவதால் இலைகள் காய்ந்து விடுகின்றது
  • தாக்கப்பட்ட இலைகள் கேப்னோடியம் என்ற பூஞ்சையினால் தாக்கப்பட்டு கருமை நிறமாக மாறி கருகி விடுகிறது

பூச்சியின் விபரம்:

  • குஞ்சுகளும் மாவுப்பூச்சியும் பழுப்பு நிறத்திலிருக்கும்

கட்டுப்படுத்தும் முறை:

  • மரத்தைச் சுற்றிலும் உழுது களைகளை அகற்றிவிட வேண்டும்
  • அல்கேத்தின் பாலித்தீன் சீட்டை மரத்தின் அடிப்புறத்திலிருந்த 50 செ மீ உயரத்தில் இறுக்கமாகக் கட்டிவிட வேண்டும்
  • குளோர்பைரினாஸ்் தெளித்து மாவுப்பூச்சியைக் கட்டுப்படுத்தலாம்
  • கிரிப்டோலோமியஸ் மான்ட்ரோசிரி போன்ற இயற்கை எதிரிகளை மரத்திற்கு பத்து வீதம் பயன்படுத்தி மாவுப்பூச்சிகளை அழிக்கலாம்

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | வெளியீடுகள் | பொறுப்புத் துறப்பு | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016