பயிர் பாதுகாப்பு :: பப்பாளி பயிரைத் தாக்கும் பூச்சிகள்

வெள்ளை ஈ: பெமிசியா டேபேசி
அறிகுறிகள்:

  • இளம் பூச்சிகள் மற்றும் வண்டுகள் இலையின் அடிப்புறத்திலிருந்து சாற்றை உறிஞ்சும்
  • இலைகள் மஞ்சள் நிறமாதல்

பூச்சியின் விபரம்:

  • முட்டை – இளம் மஞ்சள் நிறத்தில் காணப்படும்.
  • இளம் பூச்சி – நீள் வட்டமாக, செதில் போன்று, பச்சை கலந்த வெள்ளை நிறத்தில் காணப்படும்.
  • இலையின் சதைப்பான பகுதியில் தங்கியிருக்கும்.
  • வண்டு – வெள்ளை நிறத்தில், சிறியதாக, செதில் போன்று இருக்கும்.

கட்டுப்பாடு :

  • வயலை சுகாதாரமாக வைத்தல்
  • ஓம்புயிரி பயிர்களை அகற்றுதல்
  • மஞ்சள் நிற ஒட்டும் பொறிகளை அமைத்தல்
  • இமிடாகுளோபிரிட் 200 எஸ்.எல் 0.01% (அ) டிரைஅசோபாஸ் 40 கிகி 0.06% தெளித்தல்
  • வேப்பஎண்ணெய் 3% (அ) வேப்பங்கொட்டை சாறு 5% தெளித்தல்
  • இரை விழுங்கிகளான காக்கிநெல்லிட், கிரிப்டோலேமஸ் மான்டோசோரிகளை வயலில் விடுதல்
  • ஒட்டுண்ணிகளான என்கார்சியா ஹேட்டரிஸிஸ், எ.குவாடெலோட்பே வயலில் வெளிவிடுதல்.

 


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015