பயிர் பாதுகாப்பு :: மிளகு பயிரைத் தாக்கும் பூச்சிகள்

செதில் பூச்சிகள்: லெபிடோசேபஸ் பைப்பரிஸ்

சேதத்தின் அறிகுறிகள்:

  • மிளகுக் கொடியின் இலைக்காம்பு, இலை மற்றும் தண்டுப் பகுதிகளின் சாற்றை உறிஞ்சி சேதப்படுத்தும்.
  • தாக்கப்பட்ட பகுதி மஞ்சளாக மாறிவிடும். மேலும் வாடிவிடும்.

பூச்சியின் விபரம்:

  • லெபிடோசோபஸ் பைப்பரிஸ்: சிறிய கருநிறப் படகு போன்றவை.
  • ஏஸபிடியோடஸ் டெஸ்ட்ரக்டார்: மிகச்சிறிய இளம் மஞ்சள் நிறம் கொண்டது.
கட்டுப்படுத்தும் முறைகள்:
  • மிளகுச் செடியின் தாக்கப்பட்ட பகுதிகளைக் களைந்து நீக்கவும்.
  • டைமிதோயேட் 0.1 சதவிகிதம் கரைசலை தெளிக்கவும் இரண்டாவது முறையாக 21 நாட்கள் கழித்து மீண்டும் தெளிக்கவும்.

 

 

 

தாக்கப்பட்ட தண்டு

இலைகள் வாடிவிடும்


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015