பயிர் பாதுகாப்பு :: துவரை பயிரைத் தாக்கும் நோய்கள்

இலைப்புள்ளி: ஆல்டேர்னேரியா ஆல்டெர்னேட்டா

அறிகுறிகள்

  • முதலில் சிறிய புள்ளிகள் இலைகளில் தோன்றும். இப்புள்ளிகள் அளவில் பெரியதாகி பழுப்பு நிறத்தில் வளையங்களைத் தோற்றுவிக்கும்.
  • இந்த வளையத்தின் கோடு ஊதா நிறத்தில் இருக்கும்.
  • அந்நோய் அதிகமாகும் போது இவ்வகைப் புள்ளிகள் பெரிதாகி ஒன்றோடொன்று சேர்ந்துவிடும்.
  • மழைக்குப்பின் பயிரிடப்படும் பயிர்களில் முதிர்ந்த செடிகளின் அறிகுறிகள் முதிர் இலைகளிலும், இளம் செடிகளில் இளம் இலைகளிலும் தோன்றும்.

பரவுதல்

  • நோயுற்ற செடியிலிருந்து மற்றொரு செடிக்கு காற்றின் மூலம் பரவுகிறது.

மேலாண்மை

  • மேங்கோசெப் 1 கிலோ எக்டர் என்ற அளவில் தெளிக்கவும்.

 

 


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016