பயிர் பாதுகாப்பு :: துவரை பயிரைத் தாக்கும் நோய்கள்

வேர் அழுகல் நோய்: மேக்ரோபோமினா பேசியோலினா

அறிகுறிகள்

இந்நோய் இளம் செடிகளிலும் வளர்ந்த செடிகளிலும் தோன்றுகிறது. ஆரம்பத்தில் இலைகள் வாடத் தொடங்குகின்றன.  பின்பு இலைகள் காய்ந்து செடியும் காய்ந்து விடுகின்றன.  நோய் தீவிரமாகப் பரவினால் தாக்கப்பட்ட செடிகளில் ஆணி வேரைத் தவிர மற்ற வேர்கள் யாவும் அழுகிவிடுகின்றன.  ஆணி வேரின் மேல் பட்டை அழுகிச் சிதைந்து நார் நாராக உரிந்து விடுகிறது.  நோயினால் பாதிக்கப்பட்ட செடியை மெதுவாக இழுத்தாலும் எளிதாக கையோடு வந்துவிடும் தாக்கப்பட்ட வேர்ப்பகுதியில் இழை முடிச்சுகள் இணைந்திருக்கும்.

பரவுதல்

இப்பூஞ்சாணங்கள் மண்ணில் தங்கியிருந்து பரவும் திறனுடையது.  இந்நோய் விதை, காற்று, பாசனநீர் ஆகியவை மூலம் பரவுகின்றது.  இப்பூஞ்சாணம், காய்கறிச் செடிகள், எண்ணெய் வித்துப்பயிர்கள் பயறுவகைப் பயிர்கள் ஆகியவற்றிலும் நோய்களை உண்டாக்குகின்றன.

 

::pulses:red gram_rootrot.png
அறிகுறி பட்டைஉறிதல்

மேலாண்மை

விதை நேர்த்தி

  • டிரைக்கோடெர்மா விரிடி டால்கம் பவுடர் 4 கிராம் அல்லது சூடோமோனாஸ் ஃபுளுரசன்ஸ் 10 கிராம் அல்லது கார்பன்டாசிம் அல்லது திரம் 2 கிராம், 1 கிலோ விதைக்கு

உயிரியல் முறை

  • சூடோமோனாஸ்ஃபுளுரசன்ஸ் அல்லது டிரைகோடெர்மாவிரிடி (2.5 கிலோ ஹெக்டேர்) 50 கிலோ நன்கு மக்கிய தொழுவுரம் (அ) மணலில் கலந்து விதைத்த 30 நாட்கள் கழித்து இட வேண்டும்.

இரசாயன முறை

  • பாதிக்கப்பட்ட இடத்தில் கார்பென்டாசிம் 1 கிராம், 1 லிட்டர் என்ற விகித்தில் கலந்து ஊற்ற வேண்டும்.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016