பயிர் பாதுகாப்பு :: துவரை பயிரைத் தாக்கும் நோய்கள்

மலட்டுத் தேமல் நோய்: நச்சுயிரி

அறிகுறிகள்

ஆரம்பத்தில் இலைகளில் நரம்புகளைச் சுற்றிலும் வெளுத்து மஞ்சளாகக் காணப்படும். நாளடைவில் இலைப்பாகங்களில் இடையிடையே இளமஞ்சள் வளையம் தோன்றித் தேமல் தோற்றம் ஏற்படும்.  மஞ்சள் வளையம் தோன்றும் இந்த வளைய புள்ளிகளால்     மலட்டுத்தன்மை தோன்றாது.  சில சமயங்களில் லேசான தோன்றும்.  இதில் பகுதி மலட்டுத்தன்மை ஏற்படும்.  இலைகளில் அடர் பச்சை நிறமும், வெளிர்ப்பச்சை நிறமும், இளமஞ்சள் நிறமும் மாறிமாறிக் காணப்படும்.  பாதிக்கப்பட்ட இலைகள் மென்மையாக இல்லாமல் கடினமாக இருக்கும். இலைகள் சுருங்குதல், இலைப்பரப்பு குறைதல், கிளைகளின் கணுக்கள் குறைதல், பாதிக்கப்பட்ட செடி முழுவதும் குட்டையாக இருத்தல் போன்ற அறிகுறிகளும்  காணப்படும்.  இளஞ்செடிகள் நோயினால் பாதிக்கப்பட்டால் செடிகள் வளர்ச்சிக் குன்றிக் கட்டையாக இருக்கும். இலைகள் அடர்த்தியாக அருகருகே இருப்பதால் செடியின் தலைப்பாகம் புதர் போன்று காட்சியளிக்கும். இத்தகைய செடிகள் மலட்டுத் தன்மை பெறுவதால் பூக்கும் திறனிழந்து விடுகின்றன.  எனவே, செடிகள் வளர்ந்த பிறகு நோயினால் பாதிக்கப்பட்டால் தேமல் அறிகுறிகள் மட்டும் காணப்படும்.

பரவுதல்

மலட்டுத் தேமல் நோயுற்ற செடியிலிருந்து, மற்ற செடிகளுக்கு அசெரியா கஜானி என்னும் கண்ணுக்குத் தெரியாத சிலந்தியின் மூலம் பரவுகிறது.  சிலந்திகள் காற்றின் உதவியால் மற்ற செடிகளுக்கு நோயை தொற்ற உதவுகிறது.

DSCN3562
இலையின் மேல் வெளிறிய வளையங்கள் பூக்கும் முன் மலட்டுத்தன்மை பூ பூத்தப்பின் மலட்டுத்தன்மை

மேலாண்மை

  • பாதிக்கப்பட்ட செடிகளை கலைந்து எடுத்தல், நோயின் அறிகுறி தென்பட்டவுடன் பினாசாகுயின் 1 மில்லி  லிட்டா தெளிக்க வேண்டும்.  பின்பு இருவாரம் கழித்து மீண்டும் ஒருமுறை தெளிக்க வேண்டும்.


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016