பயிர் பாதுகாப்பு :: குசும்பா பயிரைத் தாக்கும் நோய்கள்

ஆல்டர்னேரியா கருகல்: ஆல்டர்னேரியா கார்த்தாமி

அறிகுறிகள்:

  • இது ஒரு மோசமான விளைவைத் தரும் நோயாகும்.
  • 2.5 மி.மீ விட்டமுடைய அடர் நிலத்தில் காய்ந்த புள்ளிகள் வித்திலைகளில் முதலில் தோன்றும்.
  • தண்டிலும் அறிகுறிகள் தோன்றும். அதிகம் தாக்கப்பட்ட செடிகள் கருகிவிடும்.
  • தண்டுகளில் பழுப்பு நிற மாற்றம் தோன்றும் அடர் பழுப்பு நிறப் புள்ளிகள் 1 செ.மீ அளவுடைய அடர்ந்த வளையங்களும் இலைகளில் தோன்றி, பின் பெரிய புள்ளிகளாக மாறும்.
  • விதைகளும் தாக்கப்படும். அடர் நிறத்தில் நீரில் அமிழ்ந்தது போன்ற புள்ளிகள் தோன்றும். சில சமயங்களில் அழுகும், சிறிய நாற்றுக்களில் நாற்றழுகல் நோய் தோன்றும்.

கட்டுப்பாடு:

  • தாழ்வான பகுதிகள், வெள்ளம் சூழக்கூடிய பகுதிகளில் பயிரிடக்கூடாது
  • நோய் தாக்கப்பட்ட செடிகளை அகற்றி, அழிக்க வேண்டும்
  • கார்பண்டசிம் 1.5 கிராம் / கிலோ விதை என்ற அளவில் விதை நேரத்தி செய்ய வேண்டும்
  • மான்கோசெப் (0.25%) நோய் தெரிய ஆரம்பித்தவுடனே தெளிக்க வேண்டும். 15 நாட்கள் கழித்து நோயின் தீவிரத்தைப் பொறுத்து தெளிக்க வேண்டும்.

 

 


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015