பயிர் பாதுகாப்பு :: சோள பயிரைத் தாக்கும் பூச்சிகள்
குருத்து ஈ: அதெரிகோனா சொக்கேட்டா
தாக்குதலின் அறிகுறிகள்:
  • புழுக்கள் தண்டுகளை துளைத்து உள்ளே சென்று உண்பதால் நடுக்குருத்து காய்ந்து விடும்
  • நடுக்குருத்தின் அடிப்பாகத்தை தாக்குவதால் நடுக்குருத்து அழுகிவிடும்
  • தாக்கப்பட்ட பயிர்களில் பக்கத் தூர்கள் உருவாகும்
     
  நடுக்குருத்து காய்தல்   நடுத் தண்டு பாதிப்பு   பக்கத் தூர்கள்
பூச்சியின் விபரம்:
  • முட்டை: அரிசி போன்று தட்டையாக வெள்ளை நிறத்தில் இருக்கும்
  • குருத்து ஈ: வெள்ளை சாம்பல் நிறத்தில் இருக்கும்

கட்டுப்படுத்தும் முறை:
பொருளாதார சேத நிலை: 1 முட்டை/சோளம் (அ) “10% குருத்து காய்தல்”

  • சரியான பருவங்களில் முன்கூட்டியே விதைப்பு செய்வதன் மூலம் இப்பூச்சியின் தாக்குதலைத் தவிர்க்கலாம்
  • பூச்சி மருந்தினால் விதைமுலாம் பூசப்பட்ட விதைகளை பயன்படுத்த வேண்டும்
  • ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் இமிடாகுளோபிரிட் 70 ws என்ற அளவில் விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும்.
  • அறுவடை செய்த உடனே சோளத்தட்டைகளை அகற்ற வேண்டும்.
  • குறைந்த விலை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழக மீன் இறைச்சிப் பொறிகளை எக்டருக்கு 12 என்ற எண்ணிக்கையில் அமைத்து குருத்து ஈக்களை கவர்ந்து அழிக்கலாம்
  • கீழ்காணும் ஏதேனும் ஒர் மருந்தினை நாற்றுகள் நாற்றாங்காலில் இருக்கும் போது தெளிக்கவேண்டும்
    • மெத்தில் டீமட்டான் 25 EC 12 மி.லி/ஹெக்டேர்
    • டைமீத்தேயேட் 30 EC12 மி.லி/ஹெக்டேர்
  • நேரிடையாக சோளம் விதையை விதைப்பு செய்த வயலில் கீழ்காணும் ஏதேனும் ஒர் மருந்தினைத் தெளித்து குருத்து ஈக்களைக் கட்டுப்படுத்தலாம்
    • மெத்தில் டீமட்டான் 25 EC 500 மி.லி/ஹெக்டேர்
    •  டைமீத்தேயேட் 30 EC 500 மி.லி/ஹெக்டேர்
  • வேப்பங்கொட்டைச் சாறு 5%
  • ஒரு ஹெக்்டருக்கு போரேட் 10 G 18 கிலோ அல்லது கார்போபியுரான் 33.3 கிலோ என்ற வீதம் விதைக்கும் போது மண்ணில் தூவ வேண்டும்
   
  அதெரிகோனா சொக்கேட்டா  
Source of images:
http://agropedia.iitk.ac.in/content/sweet-sorghum-shoot-fly
http://www.infonet-biovision.org/default/ct/127/crops
 

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | பொறுப்புத் துறப்பு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015