பயிர் பாதுகாப்பு :: சோள பயிரைத் தாக்கும் பூச்சிகள்
தண்டுத்துளைப்பான்: கைலோ பார்டெலஸ்
தாக்குதலின் அறிகுறிகள்:
  • நடுக்குருத்து வதங்கி மற்றும் காய்ந்து காணப்படும்
  • இளம் பயிரில் இப்பூச்சியினால் தாக்குதல் ஏற்பட்டால் நடுக்குருத்து காய்ந்துவிடும். நடுத்தண்டில் துளைகள் காணப்படும்.
  • வளரும் பயிரிலிருந்து வெளிவரும் இலைகளின் இரண்டு பகுதியிலும் சம அளவில் துவாரங்கள் இருக்கும்
 
  நடுக்குருத்து காய்தல் நடுத்தண்டில் துளைகள் துவாரங்கள் நடுத் தண்டு பாதிப்பு

பூச்சியின் விபரம்:

  • முட்டை: முட்டையானது செதில் செதிலாக இலையின் அடிப்பகுதியில் காணப்படும்
  • புழு: தலை பழுப்பு நிறத்துடன், உடலின் மேற்பரப்பில் கரும்புள்ளிகளும் காணப்படும்
  • அந்துப்பூச்சி: தாய் அந்துப்பூச்சி பழுப்பு நிறத்தில் இருக்கும்
 
  முட்டை புழு கூட்டுப்புழு அந்துப்பூச்சி

கட்டுப்படுத்தும் முறை:
பொருளாதார சேத நிலை: 10% சேதாரம்

  • அவரை அல்லது தட்டைப்பயிரை 4:1 என்ற விகிதத்தில் சோளத்துடன் ஊடுபயிராக செய்வதன் மூலம் இப்பூச்சியின் தாக்குதலை சிறிதளவு குறைக்கலாம்
  • விளக்கு பொறி அமைத்து அந்துப்பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கலாம்
  • குருத்துக் காய்ந்த செடிகளை வயலிலிருந்து அகற்றிவிடவேண்டும்
  • பின்வரும் ஏதேனும் ஒரு பூச்சிக்கொல்லியை மணலுடன் (50 கிலோ) கலந்து இலைகளின் மீது தூவ வேண்டும்.
    • போரேட் 10G 8 கிலோ/ஹெக்டேர்
    • கார்போபியுரான் 3G 17 கிலோ/ஹெக்டேர்
    • கார்ப்ரைல் 50 WP 1 கிலோ/ஹெக்டேர்
Source of images:
http://www.infonet-biovision.org/default/ct/92/pests
http://www.nbair.res.in/insectpests/images/Chilo-partellus6.jpg

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | பொறுப்புத் துறப்பு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015