பயிர் பாதுகாப்பு :: சோயாபீன் பயிரைத் தாக்கும் பூச்சிகள்
பீகார் ரோமப்புழு: ஸ்பைலோசோமா ஆப்ளிகுவா
அறிகுறிகள்
  • முட்டையிலிருந்து வெளிவரும் இளம் புழு இலைகளின் பச்சையத்தைச் சுரண்டி உண்ணுகிறது.
  • வளர்ச்சியடைந்த புழு இலைகளின் ஓரங்களைத் தின்று சேதப்படுத்தும்.
  • தாக்கப்பட்டசெடிகளின் இலைகள் வலைப்பின்னல் போன்று காட்சியளிக்கும்.
பூச்சியின் விபரம்
  • முட்டைகள் - பெண் அந்துப்பூச்சி இலைகளின் அடிப்புறத்தில் முட்டையைக் குவியல்களாக இடும்.
  • புழு - கருமைக் கலந்த மஞ்சள் நிற ரோமங்கள் உடலைச் சுற்றி காணப்படும்.
Soyabean
கட்டுப்பாடு
  • கோடைக்காலத்தில் நிலத்தை ஆழமாக உழுதல் வேண்டும்.
  • பரிந்துரைக்கப்பட்ட விதை அளவை மட்டும் பயன்படுத்த வேண்டும்.
  • தேவையான இடைவெளி விட்டு நட வேண்டும்.
  • ஊடுபயிராக மக்காச்சோளம் (அ) சோளம் ஆகியவற்றை 4:2 என்ற விகிதத்தில் பயிரிட வேண்டும்.
  • தாக்கப்பட்ட செடிகள், முட்டைக்குவியல் மற்றும் இளம் புழுக்களை சேகரித்து அழிக்கலாம்.
  • வயல்வெளியை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். குறைந்தது 10 நாட்களுக்கு ஒருமுறை தாக்கப்பட்ட செடிகளின் பாகங்களை சேகரித்து உரக்குழியில் இட்டு எரித்துவிட வேண்டும்.
  • விளக்குப் பொறியை எக்டர்க்கு 1 வீதம் அமைத்து அந்துப் பூச்சியினைக் கவர்ந்து அழிக்கலாம்.
  • குளோர்பைரிபாஸ் (அ) குயினால்பாஸ் மருந்தை எக்டர்க்கு 1500 மிலி எடுத்து தண்ணீருடன் கலந்துத் தெளிக்கவும்.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015