பயிர் பாதுகாப்பு :: சோயாபீன் பயிரைத் தாக்கும் நோய்கள்

ஆல்டர்னேரியா இலைப்புள்ளி: ஆல்டர்னேரியா டெனுசியாமா

அறிகுறிகள்

  • விதைகள் சிறியதாகவும் உதிர்ந்தும் காணப்படும். அடர்ந்த, ஒழுங்கற்ற, பரவும் புள்ளிகள் போன்ற அறிகுறிகள் விதையில் காணப்படுகின்றன.
  • பழுப்பு நிற தோற்றமுடைய, இறந்த புள்ளிகளைக் கொண்டு வட்ட வளைய அறிகுறிகளை இலையில் கொண்டுள்ளன. இவை ஒன்று சேர்ந்து பெரிய இறந்த பகுதிகளை உருவாக்குகின்றன.
  • பாதிக்கப்பட்ட இலைகள் பின்னர் காய்ந்து, உதிர்ந்து விடுகின்றன.
கட்டுப்பாடு
  • தரமான, நல்ல விதைகளை பயன்படுத்தவேண்டும்.
  • பழைய செடியின் கழிவுகளை அகற்றவேண்டும்.
  • விதையை திரம் + கார்பன்டாசிம் (2:1) 3 கிராம் / கிலோ என்ற அளவில் நேர்த்தி செய்யலாம்.
  • மேங்கோசெப் அல்லது காப்பர் பூசணக்கொல்லியை (கார்பன்டாசிம் 1 கிலோ / லிட்டர்) என்ற அளவில் பயன்படுத்தவும்.

Soyabean


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015