பயிர் பாதுகாப்பு :: சோயாபீன் பயிரைத் தாக்கும் நோய்கள்

பாக்டீரியா இலைக்கருகல்: சூடோமோனாஸ் சிரின்கே வகை கிளைசினியா

அறிகுறிகள்

  • விதைகளில் சற்று உயர்ந்த புள்ளிகள் அல்லது தாழ்ந்த புள்ளிகள் ஏற்பட்டு விதைகள் சுருங்கியும், நிறமற்றும் காணப்படுகிறது.
  • சிறிய கோளவடிவில், ஊருவியும் தன்மையுடைய, மஞ்சள் கலந்த பழுப்பு நறித்தில் புள்ளிகள் இலைகளில் தோன்றுகின்றன.
  • இளம் இலைகள் அதிகமாக பாதிக்கப்பட்டு இறக்கின்றன. இவை அதிகம் வளராமலும், வெளிர் தோற்றத்தையும் கொண்டுள்ளன.
  • இச்சிறிய புள்ளிகள் பெரியதாகி ஒழுங்கற்ற வடிவத்தையும் இறந்த செல்களையும் கொடுக்கின்றன.
  • இளம்பருவத்திலேயே கீழுள்ள இலைகள் உதிர்ந்து விடுகின்றன. இவ்வகை அறிகுறிகள் காய்கள்  தண்டுகளிலும்  சரிவிலும் காணப்படுகின்றன.
கட்டுப்பாடு
  • கோடை உழவு மேற்கொள்ளவேண்டும்.
  • நல்ல, தரமான விதையை உபயோகிக்கவேண்டும்.
  • பாதிக்கப்பட்ட செடிகளை அழிக்கவேண்டும்.
  • விதையை ஸ்ரெப்டோசைக்கிளின் 250 பிபிஎம் (2.5 கிராம் / 10 கிலோ விதை) என்ற அளவில் நேர்த்தி செய்யவேண்டும்.
  • காப்பர் பூசணக்கொல்லி 2 கிராம் / லிட்டர் அதனுடன் ஸ்ரெப்டோசைக்கிளின் 250 பிபிஎம் தெளிக்கவேண்டும்.

Soyabean


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015