பயிர் பாதுகாப்பு :: சோயாபீன் பயிரைத் தாக்கும் நோய்கள்

சோயாபீன் தேமல் நோய்: சோயாபீன் தேமல் நோய்க்கான நச்சுயிரி

அறிகுறிகள்

  • பாதிக்கப்பட்ட விதைகள் சேதமடைகின்றன.
  • இந்நோயினால் பாதிக்கப்பட்ட செடிகள் வளர்ச்சியில் குறைந்தும், இலைகள், சுருங்கியும், நெளிந்தும் காணப்படுகின்றன.
  • மடங்கிய இலைகள் அல்லது தட்டையான விதைகளைக் கொண்டிருக்கும்.
  • பாதிக்கப்பட்ட விதைகள் முளைக்கும் திறனை இழந்து விடுகின்றன. அல்லது விதைகள் முளைத்தாலும் அவை நோயுற்ற செடிகளை பாதிக்கின்றன.
கட்டுப்பாடு
  • நல்ல தரமான விதைகளை உபயோகிக்கவேண்டும்.
  • வயல்களில் களைகள் இல்லாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.
  • நோயினால் பாதிக்கப்பட் செடிகளை பிடுங்கி எரிக்கவேண்டும்.
  • மீதைல் டெமட்டான் எக்டர் என்ற அளவில் விதைத்த 30 மற்றும் 45 நாளில் தெளிக்கவேண்டும்.

Soyabean


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015