பயிர் பாதுகாப்பு :: கரும்பு பயிரைத் தாக்கும் பூச்சிகள்

இளஞ்சிகப்பு மாவுப்பூச்சி: சக்காரிகாக்கஸ் சக்காரி

தாக்குதலின் அறிகுறிகள்:

  • இளஞ்சிவப்பு நீள் வட்ட வடிவ பூச்சிகள் கணுக்களுக்கு கீழே இலைப் பரப்புகளின் நிற அடியில் காணப்படுகின்றன
  • வெள்ளை நிற மாவுத்துகள்கள் கரும்பின் வளர்ச்சியைக் குறைப்பதோடு வேரினையும் பாதிக்கின்றன. இதனால் கட்டைக் கரும்புகள் அதிகம் பாதிக்கப்படுகின்றன.
  • தேன் போன்ற திரவத்தின் மேல் கரும்பூசனப் படலம் உருவாகிக் கரும்பி கருநிறமாகக் காட்சி அளிக்கும்

பூச்சியின் விபரம்:

  • முட்டை: முட்டைகள் முதிர்ச்சி அடையும் வரை பெண் பூச்சியின் இனப்பெருக்க உறுப்பில் பாதுகாக்கப்படுகின்றன. இதன் உள்வளர்நிலை குறைவே. கன்னி இனப்பெருக்க முறையில் பெண் பூச்சிகள் 400 குஞ்சுககள் வரை பெற்றெடுக்கும். முட்டைகள் மஞ்சள் நிறமாக, இருபுறமும் வட்டவடிவமான உருளை வடிவத்துடன் மென்மையாக இருக்கும்.
  • இளங்குஞ்சுகள்: முட்டையிலிருந்து வெளி வந்த உடன் குஞ்சுகள் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளிபுகும் தன்மையுடைய உடலுடன் சுறுசுறுப்பாக இருக்கும்
  • முதிர்ந்த பூச்சிகள்: வெண்மை நிறத்தில் மாவுப் படலங்களால் சூழப்பட்டு காம்பற்று தட்டையாக இருக்கும்

கட்டுப்பாடு:

  • தோகை உரித்தல் வேண்டும்
  • தேவைக்கு அதிகமாக தேங்கியுள்ள நீரை அகற்ற வேண்டும்
  • பின்வரும் ஏதேனும் ஒரு பூச்சிக்கொல்லியை தெளிக்கவும்
    • மீத்தைல் பாரதையான் 50 EC 1000 மிலி/ஹெக்டர்
    • மாலைத்தையான்   50 EC 1000 மிலி/ஹெக்டர்

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015