பயிர் பாதுகாப்பு :: கரும்பு பயிரைத் தாக்கும் நோய்கள்
கட்டைப் பயிர் குட்டை நோய்: லீஃப்சோனியா ஷைலி
அறிகுறிகள்:
  • நோய் தாக்கப்பட்ட கரும்பு உயரம் குறைந்து, குறுகிய கணு இடைவெளியுடன் தடிமன் மெலிந்து காணப்படும்.  இது மறுதாம்புப் பயிரில் மேலும் பாதிக்கப்படும்.   
  • நோய் தாக்கப்பட்ட கரும்பினை வெட்டி பிளந்து பார்த்தால் கணுப்பகுதியில் ஊசி நுனி அளவில் ஆரஞ்சு நிறப் புள்ளிகள் போன்ற பாக்டீரியா நுண்ணுயிர் தென்படும். 
  • இக்கரும்பில் அதிகத் சோகைகள் தோன்றுவதில்லை.  துார் அதிகமாக உண்டாகாது.  மிக மெதுவாகவே இந்நோய் சாறின் மூலம் பரவுகிறது.  தாக்கப்பட்ட பயிர்களின் வளர்ச்சி மெதுவாக இருக்கும்.

 

   
  வளர்ச்சி குன்றிய கரும்பு   ஊசி நுனி அளவில் ஆரஞ்சு நிறப் புள்ளிகள்
நோய்க்காரணி:
  • லீஃப்சோனியா ஷைலி துணை உயிரி, சிறிய காற்றில் பரவும் பாக்டீரியம், இந்த உயிரினம் முன்பு கிளாவிபாக்டர் என அழைக்கப்பட்டது.
கட்டுப்படுத்தும் முறை:
உழவியல் முறைகள்:
  • ஆரோக்கியமான கரணைகளை விதைகளுக்குப் பயன்படுத்தவும்.
  • சரியான வடிகால் வசதி அமைத்தல் அவசியம்.    
  • முளைக்காமல் உள்ள கட்டைகளை நீக்கி, இடைவேளைகளிள் நல்ல நாற்றுக்களை அவ்விடத்தில் நட வேண்டும்.
   
  லீஃப்சோனியா ஷைலி   நுண்ணிய பார்வை

இயந்திர முறை:

  • நடவுக் கரணைகளை 50° செ நீராவியில் 2 மணி நேரம் வைத்துப் பின் நடுவது நல்ல பலன் தரும். 50 செ க்கு அதிகமான வெப்பநிலை கரும்பினை பாதிக்கும். அதற்குக் குறைவான வெப்பநிலை கிருமிகளை அழிக்காது.
  • விதைக்கரணைகளை நீராவி கொண்டு நேர்த்தி செய்தல் நன்று.  விதை கரணை வெட்டப்பட்ட பகுதிகளை கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்துதல் அவசியம்.

வேதியியல் முறை:

  • லைசால், டெட்டால், மிரால் மற்றும் ராக்கால் இவற்றில் ஏதேனும் ஒரு கிருமி நாசினியைப் பயன்படுத்தலாம்.  குறைந்தது 5 நிமிடமாவது விதைக்கரணைகளை இம்மருந்தில் நனைத்துப்பின் நட வேண்டும்.
Content validators: 
Dr. T. Ramasubramanian, Senior Scientist, Sugarcane Breeding Institute, Coimbatore-641007.
Dr.V. Jayakumar, Senior Scientist, Sugarcane Breeding Institute, Coimbatore-641007. 
Dr.M. Ravi, Assistant Professor, Sugarcane Research Station, Sirugamani, Trichy- 639115.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015