பயிர் பாதுகாப்பு :: புகையிலை பயிரைத் தாக்கும் நோய்கள்

நாற்றழுகல் நோய்: பித்தியம் அஃபானிடெர்மேட்டம்
நாற்றழுகல் நோய் புகையிலை பயிரிடப்படும் பகுதிகள் யாவற்றிலும் காணப்படுகிறது. இந்நோய் நாற்றாங்காலிலும் நட்டபின் இளஞ்செடிகளிலும் மிகுந்த பேரிழப்பினை ஏற்படுத்துகின்றது. இந்நோய் நாற்றுப்பகுதியில் இரு நிலைகளில் தோன்றுகின்றது.

நாற்று வெளிவரும் முன் தோன்றும் அறிகுறிகள்
விதைகள் முளைத்து தரைக்கு மேல் வெளி வருமுன்பே பாதிக்கப்படுகின்றன. சில சமயங்களில் விதையுரைகளிலிருந்து விதையிலைகள் வெளிவரும் முன்பாகவே அழிக்கப்படுகின்றன. விதையிலிருந்து முளைவேர், விதையிலை ஆகியவை வெளிவரு முன்பாகவே அழுகிவிடுகின்றன. இந்நிலை மண்ணிற்கு உள்ளேயே நிகழ்வதால் அறிகுறிகளை வெளிப்படையாகத் தெரிந்து கொள்ள முடிவதில்லை.

Tobacco Tobacco Tobacco Tobacco

விதை முளைத்து வெளி வந்த பின் தோன்றும் அறிகுறிகள்
இந்நிலையை எளிதில் அறிந்து கொள்ள முடியும். நாற்றுக்களில் அடிப்பாகத்தில் தரைக்கு மேற்பாகத்திலோ, தரைக்குள்ளேயோ மென்மையான நீர் கசிந்த தோற்றத்தில் இந்நோய் தொற்றுகிறது. நோய் பரவும்பொழுது தண்டின் அடிப்பாகம் சிறுத்து விடுவதால் நாற்றுக்கள் வலுவிழந்து ஒடிந்து தரையின் மேல் விழுந்து கிடக்கின்றன. நாற்றுக்கள் நட்ட பின்பும் வயலில் இளஞ்செடியழுகல் ஏற்படுகின்றது.

கட்டுப்பாடு

  • மேடைப் பாத்திகளில் அமைத்து நாற்றுப் பரவுதல் சிறந்தது.
  • நாற்று நெருக்கமாக இல்லாமல் விதைகளை அளவோடு பயன்படுத்தி, நாற்றுப் பரவுதல் சிறந்தது.
  • நாற்றாங்காலில் விதைப்பதற்கு முன் மெதுவாக எரிந்த பண்ணைக் கழிவுகளான நெல் சுருக்கமாய், புகையிலையின் குச்சி மற்றும் கோல்கள், தேவையற்ற புல்கள், பனையிலைகள் ஆகியனவற்றை நாற்றாங்காலின் மேல் போடலாம்.
  • நாற்றாங்காலில் அதிகமாக தண்ணீர் தேங்காமல் ஆகியனவற்றை நாற்றாங்காலில் மேல் போடலாம்.
  • நாற்றாங்காலில் அதிகமாக தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.
  • காப்பர் ஆக்ஸிகுளோரைடு 0.2 சதவிகிதம் என்ற அளவில் கலந்து ரோஸ் கேன் மூலம் தெளிக்கவேண்டும்.
  • மெட்டலாக்சில் 0.2 சதவிகிதம் என்ற அளவில் 2 மதல் 3 முறை விதைத்த 3 வாரம் கழித்து தெளிக்கவும்.
  • சாதாரண சூழ்நிலையில் இம்மருந்தை 4 நாட்களுக்கு ஒரு முறையும், வானிலை அசாதாரணமாக இருக்கும் பொது 2 நாட்களுக்கு ஒரு முறையும் இம்மருந்தை கொடுக்கவேண்டும். அதிகமாக மழை பெய்தால் இதனை அடிக்கடி பயன்படுத்தவேண்டும்.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015