பயிர் பாதுகாப்பு :: புகையிலை பயிரைத் தாக்கும் நோய்கள்

ஆந்தரக்னோஸ்: கொலிடோடிரைகம் டெபகம்
அறிகுறிகள்

  • முதலில் அடி இலைகளில் இலேசான வெளிர் - பழுப்பு நிறமுடைய வட்டவடிவப் புள்ளிகள் தோன்றுகின்றன. இப்புள்ளியின் மத்தியப்பகுதி சற்று அமிழ்ந்து காணப்படுகிறது. இப்புள்ளிகள் ஓரங்கள் சற்று உயர்ந்த காணப்படுகிறது.
  • இச்சிறிய இலைப்புள்ளிகள் வெள்ளை நிறத்தைக் கொண்டும் பின்னர் இறந்த செல்களைக் கொண்ட பெரிய புள்ளிகளாக மாறுகின்றது.
  • தொடர்ந்து வானிலை மோசமாக இருக்கும் போது கரும்பழுப்பு நிறமுடைய கோடுகள் இலையின் மத்திய நரம்புப்பகுதியில் உருவாகிறது. முதலில் பாதிக்கப்பட்ட செடியிலிருந்து வித்துக்கள் அடுத்த பருவப் பயிர்களுக்கு கடத்தப்படுகின்றன.
  • இந்நோய்க் காரணி விதையிலிருந்து பரவுவதில்லை மண்ணில் வித்துக்கள் பரவி செடியில் தங்கி இருக்கின்றன.

கட்டுப்பாடு

  • மேடான இடத்தில் நாற்றாங்காலும் மற்றும் பண்ணைக் கழிவுகளை பயன்படுத்தவதாலும் இந்நோய் குறைகிறது.
  • பாதிக்கப்பட்ட செடிகளை கலைந்தெறிவதன் மூலம் நோயின் அளவைக் குறைக்கலாம்.
  • மேங்கோசெப் 0.2 சதவிகிதம் என்ற அளவில் தெளிப்பதன் மூலம் இந்நோயின் அளவைக் குறைக்கலாம்.


tobacco tobacco

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015