பயிர் பாதுகாப்பு :: புகையிலை பயிரைத் தாக்கும் நோய்கள்

கருந்தண்டழுகல் நோய்: ஃபைட்டோ ப்தோரா பாரசைட்டிகா நிக்கோட்டியானே
அறிகுறிகள்

  • இந்நோய் நாற்றாங்காலிலும் நட்ட வயலிலும் காணப்படுகிறது. இந்நோய் பூசணம் தரை மட்டத்திலுள்ள தண்டுப் பகுதியைப் பாதிக்கிறது.
  • குளுமையாக உள்ள நேரங்களில் தண்டு அழுகியும் வறட்சி நேரங்களில் நாற்றுக்கள் பழுப்பு நிறமாகிக் காய்ந்து விழுவதையும் காணலாம்.
  • பூசணம் தண்டிலிருந்து மேலும் கீழும் பரவி நோயினால் நாற்றுக்கள் இறந்துவிடச் செய்கின்றது.
  • நோயுற்ற நாற்றுக்களை நடவுக்கு பயன்படுத்துவதால் புகையிலை நட்ட வயலில் இந்நோய் ஏற்படக் காரணமாக அமைகிறது.
  • நோயுற்ற செடியின் அடி இலைகள் மஞ்சளாகி சுருங்கி தண்டிலிருந்து தொங்கிக் காணப்படும். நாளடைவில் நோயுற்ற செடிகள் காய்ந்த விடுகின்றன.
  • நோயுற்ற செடியில் தண்டின் மூலமானவோ வேரின் மூலமாகவோ தண்ணீரோ உணவுப் பொருட்களோ மற்றும் பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப்படுவதில்லை.
  • நோயுற்ற செடியைப் பிடுங்கிப் பார்த்தால் அதன் தண்டுப் பகுதியும் வேர்ப்பகுதியும் கருமை நிறமடைந்து அழுகி இருப்பதை நன்கு அறியலாம்.
Tobacco Tobacco Tobacco Tobacco
  • இளம் பருவத்திலேயே நோய் தோன்றியிப்பின் தரை மட்டத்திலிருந்து தண்டின் முழுப்பகுதியும் அழுகியிருக்கும். இலைகளில் பெரிய பழுப்பு நிற வட்டங்களை உடையப் புள்ளிகளைக் காணலாம். இவ்வறிகுறி இந்நோயினால் ஏற்படும் இலைக்கருகல் காணலாம்.
  • இவ்வாறு கருகிய இலைகள் பதனிட்ட பிறகு தரம் குறைந்து காணப்படுகின்றன. நோயுற்ற செடியிலுள்ள தண்டை நீளவாக்ிகல் பிளந்து பார்த்தால் அவற்றின் உட்பகுதியில் இருக்கும் தக்கை கருமை நிறமாக மாறுவதுடன் குறுக்கு வாக்கில் சில்லகளாகக் காணப்படும்.

கட்டுப்பாடு

  • நாற்றாங்காலை 0.4 சதவிகிதம் போர்டோக் கலவையினால் விதைப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன் தெளிக்கவேண்டும்.
  • அதன் பின்னர் பூசணக் கொல்லியான காப்பர் ஆக்ஸிகுளோரைடு 0.2 சதவிகிதம் தெளிப்பதன் மூலம் இலைக்கருகல் மற்றும் நாற்றழுகல் நோயைக் குறைக்கலாம்.
  • நாற்றுக்கள் நடவு செய்யும் போது நாற்றுக்களின் தண்டுகளில் கருப்பு நிறமுடைய புள்ளிகள் காணப்படுகிறது.
  • பாதிக்கப்பட்ட செடிகளை 0.4 சதவிகிதம் போர்டோக் கலவையினால் தெளிப்பதன் மூலம் இந்நோய் ஏற்படுவதைக் குறைக்கலாம்.
  • மேங்கோசெப் 0.2 சதவிகிதம் அல்லது காப்பர் ஆக்ஸி குளோரைடு 0.2 சதவிகிதம் என்ற அளவில் தெளிக்கவும்.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015