பயிர் பாதுகாப்பு :: தேயிலை/டீ பயிரைத் தாக்கும் நோய்கள்

சாம்பல் கருகல் நோய்: கொலட்டோட்ரைக்கம் வகை, பெச்டாலொட்டியோப்சிச் வகை

சேதத்தின் அறிகுறி:

  • சிறிய ,வட்ட வடிவில் வெளிர் பச்சை மஞ்சள்  புள்ளிகள் இளம் இலைகளில் தோன்றும்.
  • பெரும்பாலும் புள்ளிகளை சுற்றி குறுகிய, மஞ்சள் மண்டலம் காணப்படும்.
  • புள்ளிகள் வளர்ந்து  பழுப்பு அல்லது சாம்பல் நிறமாக மாறி, பரந்து கிடக்கும் வளையங்களை கொண்டு,  சிறிய கருப்பு புள்ளிகளாக தோன்றி இலை  திசுகள் உதிர்வதுடன் இலைகள் முழுமையாக் உதிர்ந்து விடும்.
  • எந்த வயதிலும்  இலைகள் பாதிக்கப்படும்.
பழுப்பு நிற கருகல் சாம்பல் நிற கருகல் வளையங்கள் பாதிக்கப்பட்ட இலைகள்
வாழ்க்கை சுழற்சி
  • சிறிய, கருப்பு புள்ளிகளின் புண்களில் உள்ளே பூஞ்சை வித்துகள்  இருக்கும்.
  • மழை தண்ணீர் மூலம் வித்துகள்  ஒரு தாவரம்  அல்லது பதிக்கப்பட்ட  இடத்திலிருந்து  மற்றொரு  இடத்துக்கு   பரவுகிறது.
  • வித்துக்கள்  வேறு இலையை பாதிக்கும் பொது அவைகள்  ஒரு புதிய இலைப்புள்ளி அல்லது ஒரு மறைந்திருக்கும் தொற்றை  தொடங்கும். 

கட்டுப்படுத்தும் முறை:

  • தாவரத்திற்கு அழுத்தம் இல்லாத சூழ்நிலையை அமைக்க வேண்டும்.
  • தேயிலை புதரை  காற்று உட்போகுமாறு  போதிய இடைவெளியில் வளர்பதன்  மூலம்  இலையின்  ஈரப்பத கால அளவை குறைக்கலாம் .
  • குளிர் காலம்  மற்றும் கோடை பருவத்தில் காப்பர் ஆக்சி குளோரைடு அல்லது போரடியாக்ஸ் கலவை 0.1% தெளிக்கவும்

Content validator: Dr. M. Deivamani, Assistant Professor, Horticulture Research Station, Yercaud-636602.

Image source:

Keith, l., Ko, W.H and Sato D.M. 2006. Identification Guide for Diseases of Tea (Camellia sinensis). Plant Disease, 33, pp-1-4.


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015