பயிர் பாதுகாப்பு :: தேயிலை/டீ பயிரைத் தாக்கும் நோய்கள்

குதிரை முடி கருகல்: மராமிகஸ் க்ரிநிசெக்யு

சேதத்தின் அறிகுறி:

  • குதிரைமுடி போன்ற  கருப்பு பூஞ்சை நூல்கள் மேல் கிளைகள் மற்றும் கிளைகளை  சுற்றி இருக்கும்.
  • பூஞ்சை ஊடுருவி கிளைகளில் பாதிப்பை ஏற்படுவதுடன், ஆவியாகும் பொருட்களை உற்பத்தி செய்வதால் இலைகள் வேகமாக உதிர்ந்துவிடும்.

வாழ்க்கை சுழற்சி

  • இந்த கிருமி பாதிக்கப்பட்ட கிளைகளில்  இருந்து ஆரோக்கியமான கிளைகளுக்கு முடி போன்ற நுல்களில்  முலம் பரவுகிறது.

கட்டுப்படுத்தும் முறை:

  • பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள  தாக்கப்பட்ட பகுதிகளை அகற்றி, அழிக்க வேண்டும்.
  • பாதிக்கப்பட்ட அல்லது இறந்த கிளைகளை கவாத்து முலம்  நீக்கி அழிக்கவும்.

Content validator: Dr. M. Deivamani, Assistant Professor, Horticulture Research Station, Yercaud-636602.

Image source:

Keith, l., Ko, W.H and Sato D.M. 2006. Identification Guide for Diseases of Tea (Camellia sinensis). Plant Disease, 33, pp-1-4.

 


குதிரை முடி கருகல்

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015