பயிர் பாதுகாப்பு :: தேயிலை/டீ பயிரைத் தாக்கும் நோய்கள்

கருப்பு வேர் அழுகல்: ரோசெளினா அற்குவாட்டா

சேதத்தின் அறிகுறி:

  • பூஞ்சையானது இறந்த குவிக்கப்பட்ட இலைகளில் மண்ணில் 5– 7.5 செ.மீ மட்டத்தில் உருவாகிறது. அங்கிருந்து தேயிலை செடி வேர்களுக்குப் பரவுகிறது.
  • பட்டையை நீக்கும்பொழுது பூஞ்சாண இலைத் தொகுதியை காண முடியும்.
  • மணல் பரப்பில் பூஞ்சை தண்டுகளைச் சுற்றி பரவி 7.5 -10.0 செ.மீ நிளத்திற்கு கொன்றுவிடும்.
  • வீங்கிய மோதிரம் போன்ற திசு தண்டைச் சுற்றி உருவாகிறது.

கட்டுப்படுத்தும் முறை:

  • பாதிக்கப்பட்ட செடியினை அப்புறப்படுத்தி அழிக்க வேண்டும்.
  • கீழே உதிரும் பாதிக்கப்பட்ட இலைகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும்.
  • பாதிக்கப்பட்ட செடியை சுற்றிலும் பள்ளம் தோண்டி சூரிய ஒளி விழச்செய்வதன் மூலம் பூஞ்சானம் பரவுவதை கட்டுப்படுத்தலாம்.

Content validator: Dr. M. Deivamani, Assistant Professor, Horticulture Research Station, Yercaud-636602.

Source of image:
http://www.celkau.in/Crops/Plantation%20Crops/Tea/diseases.aspx

 



கருப்பு வேர் அழுகல்

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015