பசுமைக்கூட வாயுக்களின் வரைமுறை
வளர்ச்சி பெற்ற மற்றும் வளர்ந்து வரும் நாடுகளில் கார்பன் வெளியேற்றம் குறைப்பதில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சிதான் 1990ல் வருடத்திற்கு 1.1 % என்ற நிலையில் வெளியிடப்பட்ட கார்பன் அளவு 2006ல் வருடத்திற்கு >3% என்ற அளவில் உயர்ந்துள்ளது. வளர்ந்த நாடுகளில் ஏற்படும் மனித நடவடிக்கைகளால் முக்கால் பங்கு கார்பன் வெளியேற்றம் இருந்தாலும் இக்கால கட்டத்தில் ஏற்பட்ட அதிக அளவு வெளியேற்றத்திற்கு காரணம் சீனாவே ஆகும். சோவியத் யூனியன் பிரிந்து விட்டதாலும் உபயோகிக்கும் அங்கு கார்பன் வெளியேற்றம் குறைந்து காண்படுகிறது. மீத்தேன் வாயு அதிகரிக்காமல் N2O வாயு மட்டும் வருடத்திற்கு 0.25 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.
தொழில் சாலைகளில் இருந்து நேரடியாக வெளியேறும் அளவு வெகுவாக குறைந்துவிட்டது. இதற்கு ஆற்றல் திறன் அதிகரித்தும் மின் ஆற்றல் அதிகமாக உபயோகித்ததும் காரணம் ஆகும். ஆயினும் மின்உற்பத்தி ஏற்படும் மறைமுக வெளியேற்றத்தை கணக்கில் கொண்டாலும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள தொழில்சாலைகளின் வெளியேற்றம் 1994 ம் ஆண்டு முதல் நிலையாகிவிட்டது.
ஆசியா
ஆசியா நாடுகளில் குறிப்பாக சீனாவின் தொழில்சாலைகளின் வளர்ச்சியே அதிக வெளியேற்றத்திற்கு காரணம் ஆகும். 2000-2010 ம் ஆண்டில் சீனாவின் கார்பன் டை ஆக்சைட் வெளியேற்றம் 600 மெட்ரிக் டன்களாக உயர்ந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது சீனாவின் உட் பிராந்தியங்களில் உள்ள பண்டைகால மின் நிலையங்கள் புதுப்பிக்கப்படுவதே இதற்கு காரணமாகும்.
ஐக்கிய இராஜ்ஜியம்
ஐக்கிய இராஜ்ஜியம் தனது கார்பன் டை ஆக்சைட் வெளியேற்றத்தினை 1990 லிருந்து 2010 ற்குள் 20 சதவிகிதம் குறைக்கவேண்டும் என்ற சுய கட்டுப்பாட்டினை விதித்துக்கொண்டது. ஆயினும் இதனில் 4 சதவிகிதம் குறைவான அளவில் கட்டுப்பாடு உள்ளது.
ஐக்கிய அமெரிக்கா
ஐக்கிய அமெரிக்காவின் பசுமை குடில் வாயுக்களின் வெளியேற்றம் 1990- ஐ காட்டிலும் 2005 ல் 16.3 சதவிகிதம் அதிகமாக இருந்தது. நெதர்லாந்து சுற்றுப்புற ஆய்வு மையத்தின் ஒரு ஆரம்பநிலை கணக்கீட்டின்படி சீனா அதிகபட்ச கார்பன் டை ஆக்சைடினை வெளியேற்றுகிறது எனவும் 2006 ல் இதன் அளவு 6200 மெகா டன் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஐக்கிய அமெரிக்கா 5800 மெகா டன்களை வெளியேற்றுகிறது. ஆயினும் நபர்வாரி வெளியீடு அமெரிக்கா மக்கள்தொகைக்கு கால்பங்கே உள்ளது.
2005 ம் ஆண்டினை ஒப்பிடுகையில் சீனாவின் கார்பன் டை ஆக்சைட் வெளியீடு 8.7 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. ஆனால் ஐக்கிய அமெரிக்காவில் 1.4% சதவீதமாக குறைந்துள்ளது. இம்மையம் அளவில் மிக சிறிய கார்பன் டை ஆக்சைடினை கணக்கில் கொள்ளவில்லை. அதேபோல் விமான போக்குவரத்தால் வெளியேறும் கார்பன் டை ஆக்சைடும் கணக்கில் கொள்ளவில்லை. இக்கணக்கீடுகள் பூமியின் வாயுமண்டல CO2 அளவினை காட்டிலும் குறைவு என்றாலும் தொழில்துறை புரட்சிக்கு முந்தைய அளவினை காட்டிலும் அதிகமானது.
புள்ளியியல்
நபர்வாரி பசுமைக்குடில் வாயுக்கள் வெளியீட்டின் படி உள்ள நாடுகளின் பட்டியல்
2000 வருடம் நபர்வாரி பசுமைக்குடில் வாயுக்கள் வெளியீட்டின்படி நாடுகளின் பட்டியல் உள்ளது. இது கார்பன் டை ஆக்சைட், மீத்தேன், நைட்ரஸ் ஆக்சைடு, பெர்ப்ளுரோ கார்பன், ஹைட்ரோ ப்ளுரோ கார்பன் மற்றும் சல்பர் ஹெக்ஸ் ப்ளுரைடு ஆகியவற்றின் வெளியீட்டினை உலக ஆதார நிலையம் சிடிஐஏசி (CDIAC) மற்றும் ஐக்கிய அமெரிக்காவின் சுற்றுப்புற பாதுகாப்பு மையம் போன்றவை நிர்ணயம் செய்து தொகுத்துள்ளன.
நபர்வாரி வெளியீட்டினால் இரு முறையில் கொடுக்கப்பட்டுள்ளது. ஒன்று நில உபயோக பயன்பாட்டினால் ஏற்பட்டது. மற்றொன்று ஹாக்டன் “(2003)” பயன்பாடு இல்லாமல் முதல் முறையானது அடிப்படையில் அமைந்துள்ளது.
காடுகள் அழிவதும் பின்னர் உள்ள காடுகளின் மூலம் சேமிப்பில் உள்ள கார்பன் அளவுகள் மற்றும் நாடுகளுக்கு இடையில் ஏற்படும் கார்பன் பரிமாற்றம் போன்றவற்றால் நில உபயோக பயன்பாட்டினால் ஏற்படும் புள்ளியியல் பிழை அதிகபட்ச அளவினை அதாவது +/- 150 சதவிகிதம் வரையில் கொண்டுள்ளது. இப்பட்டியலில் அவை சேர்க்கப்பட்டுள்ளது பூமி வெட்பமடைவதற்கு நீர் உபயோக மாற்றம் ஒரு பெரும் பங்கு வகிக்கின்றது என்பதால் தான். இதன் பங்கு உலகளவில் பசுமைக்குடில் வாயு வெளியேற்றத்தில் 5 சதவிகிதம் உள்ளது என உலக ஆதார நிலையம் 2000- ஆம் ஆண்டு தெரிவித்தது.
தற்போதைய வாயு மண்டல CO2 அளவிற்கான நபர்வாரி பொறுப்பு (நில பயன்பாடு வேறுபாடு உட்பட்டது) விவரங்களுக்கு இங்கே அழுத்தவும்.
|