இயற்கை சீற்ற மேலாண்மை் :: சுற்றுச்சூழல் மாசுபடுதல் 

கார்பன் வணிகம் / கார்பன் ட்ரேடிங்
கார்பன் வணிகம் என்பது க்யோட்டோ வரைமுறைக்கு பதிலாக ஏற்படுத்தப்பட்ட ஓர் கருத்தாகும். இது இரு நாடுகளுக்கு இடையே பசுமைக்குடில் வாயுக்களின் உரிமையை பரிமாற்றிக்கொள்ளும் ஒரு திட்டமாகும். உதாரணமாக பசுமைக்குடில் வாயுக்களின் வெளியீடு அளவினை மீறிய ஒரு நாடு பசுமைக்குடில் வாயுக்களை வெளியீடு அளவினை மீறாத ஒரு நாட்டிடம் அதன் உரிமையை நிதி ஒப்பந்த அடிப்படையில் பெற்றுக்கொள்வதே கார்பன் வணிகமாகும்.


க்யோட்டோ வரைமுறையானது உலக நாடுகளுக்கு பசுமைக்குடில் வாயுக்களின் அளவினை குறைத்து கார்பன் அளவினை சேமித்து வைக்கும்படி பரிந்துரைக்கின்றது. பசுமைக்குடில் வாயுக்களின் வெளியீட்டினை குறைக்க இயலாத ஒரு நாடு மற்றொரு நாட்டிற்கு ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்தி அதன் பசுமைக்குடில் வாயு வெளியீட்டினை குறைக்கின்றது. க்யோட்டோ வரைமுறையை நிறைவேற்றும் ஒரு திட்டமே இந்த கார்பன் வணிகம். 1997 ம் வருடம் டிசம்பர் மாதம் ஜப்பான் நாட்டின் க்யோட்டோ நகரில் 180 நாடுகள் இந்த க்யோட்டோ வரைமுறையில் கையெழுத்திட்டனர். இதன் மூலம் 38 தொழில்துறை வளர்ந்த நாடுகள் 2008-2012 ம் வருடத்திற்குள் தங்களது பசுமைக்குடில் வாயுக்களின் வெளியீட்டினை 5.2 சதவிகிதம் குறைக்கவேண்டும் என அழைப்பு விடுக்கிறது.


“கார்பன்” என்பது தொல்லுயிர் எரிபொருள்களான நிலக்கரி மற்றும் எண்ணெய்யில் சேமிக்கப்படும் ஒரு தனிமமாகும் இந்த எரிபொருள்கள் எரிக்கும்பொழுது கார்பன் டை ஆக்சைடு வாயு வெளியிடப்படுகின்றது. இதுவே பசுமைக்குடில் வாயு என்றழைக்கப்படுகின்றது.


கார்பன் வணிகம் என்பதன் எண்ணம் சந்தையில் பாதுகாப்பு பத்திரம் மற்றும் பொருட்கள் வணிகம் செய்யப்படும் முறையினை ஒத்ததாகும். இதன் மூலம் கார்பனிற்கு ஒரு பொருளாதார மதிப்பு கொடுக்கப்பட்டு அதனால் மக்கள் தொழில்துறைகள் மற்றும் நாடுகள் அதன் வணிகத்தில் ஈடுபடும் முறை கொண்டுவரப்படுகின்றது. ஒரு நாடு கார்பன் வாங்கும் பொழுது இதனை எரிக்கும் உரிமையை பெறுகின்றது. அதேபோல் கார்பனை விற்கும் நாடு அதனை எரிக்கும் உரிமையை இழக்கின்றது. கார்பன் சேமித்து வைத்துள்ள அளவினை பொருத்து அதன் உரிம நாட்டிற்கு தொகை செலுத்தப்படும். எந்த அளவிற்கு சேமிக்கப்பட்டுள்ள்தோ அந்த அளவிற்கு தொகை செலுத்தப்படும்.


பசுமைக்குடில் வாயுக்களின் வெளியீட்டு உரிமத்தை விற்கவும். பெறவும் ஒரு சந்தை ஏற்படுத்தப்படும். தொழில் வளர்ச்சி பெற்ற நாடுகளுக்கு இவ்வாயுக்களின் வெளியீட்டினை குறைப்பது என்பது மிகவும் கடினமான செயலாகும். ஆதலால் தொழிற்சாலைகள் குறைந்த பசுமைக்குடில் வாயுக்கள் வெளியேற்றம் குறைவாக உள்ள நாடுகளிடம் இருந்து அந்த உரிமத்தை பெற்றுக்கொள்ளும் பசுமைக்குடில் வாயுக்களின் வெளியீட்டினை குறைப்பது என்பது க்யோட்டோ வரைமுறையின்படி ஒரு ஒருங்கிணைந்த செயல்பாடு என்பதால் இப்படிப்பட்ட சந்தை சாத்தியமானதே ஆகும். 


கார்பன் வணிகம் வெற்றி பெரும் திட்டமாகும்: அதாவது பசுமைக்குடில் வாயுக்களின் வெளியீடு குறைவதுடன் சில நாடுகளுக்கு பொருளாதார பலனும் கிட்டுகிறது. ஆயினும் இதற்கு எதிரான கருத்துகள் கூறுவது யாதெனில் சில நாடுகள் இவ்வணிக முறையை தவறாக உபயோகித்து சாதகமில்லாத முடிவுகள் உருவாகும் என்பதுதான். கார்பன் வணிகம் சில நற்பலன்களை கொண்டிருந்தாலும் இதன் சந்தை முறையை பற்றிய விவாதம் தவிர்க்க முடியாததாகும் ஏனெனில் அது லாபம் சமத்துவம் மற்றும் சூழிடம் ஆகியவற்றிற்கு ஒரு சமரசம் ஏற்படும் முறையை கண்டறிவது ஆகும்.

க்யோட்டோ வரைமுறையின் செயல்பாடு எப்படி ?
கீழ்காணும் நான்கு செயல்பாடுகளின் மூலம் க்யோட்டோ வரைமுறை அதன் இலக்கினை பூர்த்தி செய்கின்றது.

1. சர்வதேச வெளியீட்டு வணிகம்
இத்திட்டததில் பசுமைக்குடில் வெளியீடு அளவு இலக்கை பூர்த்தி செய்யமுடியாத நாடுகள் கூடுதல் கடனாக (நிர்ணயிக்கப்பட்ட அளவு புள்ளிகள்) அதனை பூர்த்தி செய்யும் நாடுகளிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம். இத்திட்டத்தினை செயல்படுத்தும் வணிக முறைகள் நாடுகளுக்கிடையே தோன்றியுள்ளது, அதனில் அதிகபட்சமானது ஐரோப்பிய வெளியீட்டு வணிகமுறை இம்முறை ஜனவரி 1, 2005 ம் ஆண்டு இரு நிலைகளாக தொடங்கப்பட்டது. முதல் நிலை டிசம்பர், 31, 2007 ம் ஆண்டுக்குள் முடிவடைந்துவிட்டது. இதன் உறுப்பினர்களுக்கு அதிக கடன் கொடுத்த காரணத்தால் இந்நிலையில் நீக்கங்கள் செய்யப்பட்டது. இரண்டாம் நிலை 2008-2012 வரையில் கடன் வழங்கும் முறையில் புதிய பஙங்கீடுகளுடனும் கடுமையான வெளியீட்டு தடைகளும் கொண்டு அழுல்படுத்தப்பட்டுள்ளது.

2. உள்நாட்டு வெளியீட்டு வணிகம்
பல நாடுகள் தங்கள் நாட்டினுள் உள்ள வெளியீட்டினை கட்டுப்படுத்த மண்டல அளவில் இத்திட்டத்தினை அழுல்படுத்தியோ (அ) செயல்படுத்தும் முடிவுடன் உள்ளன. இம்முறையில் ஒரு நாட்டின் வெளியீட்டு அளவினை கட்டுப்படுத்தும் இலக்கினை அடைவதற்காக மாநில் அளவில் மண்டல அளவில் மற்றும் நாட்டின் வணிகத்திற்கு உட்பட்டு இத்திட்டம் செயல்படுகின்றது. இதன் முக்கிய சிக்கல் யாதெனில் அந்தந்த நாடுகள் தங்களுக்கென கடன் எல்லைகளும் அதற்கு வரைமுறைகளும் விதித்து கொள்கின்றன. ஆதலால் சர்வதேச முறைக்கும் உள்நாட்டு முறைக்கும் ஒரு சிறிய ஒற்றுமையே உள்ளது. கார்டனின் அளவு புள்ளிகள் ஒரு நிலையானதாக இருக்கவேண்டும். க்யோட்டோ வரைமுறையை வெற்றிகரமாக செயல்படுத்துவதற்கு ஒரு அகில உலக வணிக முறை கொண்டு வரப்படவேண்டும்.

3. தூய்மை மேலாண்மை முறை
பசுமைக்குடில் வாயுக்களின் உருவாக்கம் பற்றி முக்கியத்துவம் இல்லாமல் அவற்றின் வெளியீட்டினை குறைப்பதே முக்கிய இலக்காகும். இதனை அடிப்படையாக கொண்டே க்யோட்டோ வரைமுறையானது வளர்ந்த நாடுகள் தங்களது வெளியீட்டு அளவினை குறைக்க வளர்ந்துவரும் நாடுகளும் நிதி திறன் வாய்ந்த திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியது. வளர்ந்து வரும் நாடுகளுடன் இவ்வணிக முறையில் வெளியீட்டினை குறைப்பதுடன் சில நாடுகள் இந்நாடுகளில் தூய்மை மேலாண்மை முறைகள் கொண்ட திட்டங்களுக்கு நிதியுதவி அளிக்கின்றது. இத்திட்டங்கள் தரமான வெளியீடு குறைக்கும் திட்டங்களாக அங்கீகாரம் பெறுவதற்கு கடினமான மற்றும் விலை மதிப்பான முறைகளை கடக்க வேண்டியுள்ளது. தற்போது இதுபோன்ற தூய்மை மேலாண்மை முறை திட்டங்கள் நூற்றுக்கணக்கில் 55 நாடுகளில் நடைபெறுகின்றது.

4. ஒருங்கிணைந்த செயல்பாடு
தூய்மை மேலாண்மை முறையை போன்ற இத்திட்டம் அதனுடன் இணைக்கப்படுகின்றது. இரண்டிற்கும் உள்ள வேறுபாடு யாதெனில் கிழக்கு பகுதியில் உள்ள நாடுகளில் தான் இந்த திட்டம் செயல்வடிவம் பெற்றது. தூய்மை மேலாண்மை முறையை காட்டிலும் இதனில் பங்கு பெரும் நாடுகள் அனைத்தும் வளர்ச்சி பெற்றவை ஆகும்.

இத்திட்டம் வெற்றிபெற்றதா?
க்யோட்டோ வரைமுறையை பற்றிய விவாதங்கள் பலவாறாக உள்ளது. அதனை பற்றிய பல சர்ச்சைகள் கிளம்பியுள்ளது. அதனில் முதன்மையானது யாதெனில் ஐரோப்பிய வணிக முறைகள் கடன் அளவினை அதிகரித்து வாயுக்களின் அளவினை குறைக்கவில்ல என்பதுதான் இதனோடு க்யோட்டோ வரைமுறை 2012 ம் ஆண்டு வரையில் மட்டுமே அமுல்படுத்த உள்ளது என்பதால் இக்காலகடடததினுள் சுற்றுப்புற சூழலில் மாற்றததினை கொண்டுவர இயலாது என்பதும் மற்றொரு சர்ச்சையாகும். இறுதியாக பல நாடுகள் தங்களுக்கு விதிக்கப்பட்ட வெளியீட்டு அளவினை 2008-2012 ம் வருட காலத்தினுள் நிறைவேற்ற இயலாது என நம்பப்படுகின்றது. க்யோட்டோ வரைமுறையினை தீர்மானித்த மலரும் இக்கருத்தினை ஆமோதித்தாலும் சர்வதேச வணிக முறையில் இது ஒரு வெற்றிப்படிகட்டு என்றே கருதுகின்றனர்.
இத்திட்டம் சரியான பாதையில் தான் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதுவரையில் செயல்படுத்தப்பட்ட வணிகமுறையில் க்யோட்டோ வரைமுறை மிகவும் பெரிய அளவாக இருப்பதுடன் தற்போது ஆரம்ப நிலையிலேயே உள்ளது. இத்திட்டம் 2012 ம் ஆண்டிற்கு பின்னரும் தொடர்ந்து இதனில் பங்கு பெற்றுள்ள நாடுகள் கார்பன் விலையினை நிலைப்படுத்தி இத்திட்டத்தினை நன்கு செயல்படுத்தி பசுமைக்குடில் வாயுக்களின் வெளியேற்றத்தினை குறைக்க வேண்டும். ஆயினும் ஐக்கிய அமெரிக்கா கையெமுத்திடாமலும் பிற நாடுகளின் வெளியீட்டினை குறைக்கும் தடைகள் உள்ளதாலும் சுற்றுச்சூழல் மாற்றத்திற்கு தீர்வு காணும் முறையென க்யோட்டோ வரைமுறையினை கருத இயலாது.

http://www.celsias.com/article/carbon-trading-the-basics-part-2-kyoto-protocol/

 

 

 

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2015