இயற்கை சீற்ற மேலாண்மை் :: சுற்றுச்சூழல் மாசுபடுதல் 

உலகம் வெப்பமயமாதலின் தன்மை
உலக வெப்பமயமாதலின் தன்மையானது பசுமைகுடிலின் வாயு மற்றும் இதன் வளிமண்டலத்தின் ஆயுட்காலம் போன்ற மூலக்கூறின் வினைத்திறனை பொருத்துள்ளது. கார்பன் டைஆக்ஸைடின் தொகுப்பினை பொறுத்து GWP-ன் தன்மை அளவீடு செய்யப்பட்டு, தனிப்பட்ட நேர அளவு மூலம் மதிப்பிடப்படுகின்றது. 20 வருட கால அளவில் அதாவது குறுகிய கால அளவில் மூலக்கூறானது அதிக யைகொண்டு இருக்கும். ஆனால் 100 வருட கால அளவில் குறைவாகவே இருக்கும். மாறாக மூலக்கூறானது, கார்பன்டைஆக்ஸைடை விட நீண்ட வளிமண்டல ஆயுட்காலம் கொண்டிருக்கும் போது இதன் GWP ஆனது குறித்த நேரத்தில் அதிகரிக்கும். 
பல்வேறு பசுமைகுடில் வாயுக்களின், வளிமண்டல ஆயுட்காலம் மற்றும் க்கு உதாரணங்கள் பினவருமாறு

  • கார்பன்டைஆக்ஸைடு ஆனது மாறுபட்ட வளிமண்டல் ஆயட்காலத்தை கொண்டது. இதனை தனிப்பட்ட துல்லியமாக வரையறுக்க முடியாது. சமீபத்திய நிலவரப்படி, எரிக்கப்படும் தொல்லுயிர் எச்சப் எரிபொருட்களின் வளிமண்டல கார்பன்டைஆக்ஸைட்டின் ஆயுட்காலம் பத்தாயிரம் வருடமாகும் எல்லா கால கட்டங்களிலும் கார்பன்டைஆக்ஸைடின் ஆகும்.
  • மீத்தேன் - வளிமண்டல ஆயுட்காலம் 1213 வருடங்கள் ஆகும். இதன் GWP ஆனது 20 வருடங்களில் 72,100 வருடங்களில் 25 மற்றும் 500 வருடங்களில் 7.6ஆகும். நீண்ட கால வருடங்களில் குறைந்து கொண்டெ வரும். வளிமண்டல வேதியியல் மாற்றத்தின் போது மீத்தேனானது நீராகவும், கார்பன்டைஆக்ஸைடாகவும் மாறுகிறது.
  • நைட்ரஸ் ஆக்ஸைடின் வளிமண்டல ஆயுட்காலம் 114 வருடங்களாகும். GWP ஆனது 20 வருடங்களில் 289, 100 வருடங்களில் 298 மற்றும் 500 வருடங்களில் 153 ஆகும்.
  • குளோரோபுளோரோ கார்பன் 12 - ன் வளிமண்டல ஆயுட்காலம் 100 வருடங்களாகும். இதன் GWP ஆனது 20 வருடங்களில் 11,000, 100 வருடங்களில் 10.900 மற்றும் 500 வருடங்களில் 5200 ஆகும்.
  • ஹைட்ரோ குளோரோஃபுளொரோ கார்பன் 22 - ன் வளிமண்டல் ஆயுட்காலம் 12 வருடங்களாகும். இதன் GWP ஆனது 20 வருடங்களில் 5160, 100 வருடங்களில் 1810 மற்றும் 500 வருடங்களில் 549 ஆகும்.
  • ட்ராபுளோரோமீத்தேனின் வளிமண்டல ஆயுட்காலம் 50,000 வருடங்களாகும், இதன் GWP ஆனது 20 வருடங்களில் 5210, 100 வருடங்களில் 7390 மற்றும் 500 வருடங்களில் 11,200 ஆகும்.
  • சல்பர்ஹெக்ஸாஃபுளோரோரைடு -ன் வளிமண்டல ஆயுட்காலம் 3200 வருடங்கள் ஆகும். இதன் GWP ஆனது 20 ஆண்டுகளில் 16300, 100 வருடங்களில் 22800 மற்றம் 500 ஆண்டுகளில் 32600 ஆகும்.
  • நைட்ரஜன் டரைபுளோரைடின் வளிமண்டல ஆயுட்காலம் 740 ஆண்டுகள் ஆகும். இதன் GWP ஆனது 20 ஆண்டுகளில் 12300, 100 ஆண்டுகளில் 17200 மற்றும் 500 ஆண்டுகளில் 20700 ஆகும்.

 

 

 

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2015