இயற்கை சீற்ற மேலாண்மை் :: சுற்றுச்சூழல் மாசுபடுதல் 

முக்கிய வாயுக்கள்
பசுமை கூடக வாயுக்கள் என்பது வளிமண்டலத்திலுள்ள வாயுக்கள் வெப்பமுள்ள வெப்பம் சம்பந்தமான அகச்சிவப்பு கதிர் இயக்கங்களை உட்கிரகித்து மற்றும் உமிழ்வதாகும். இந்த செயல்முறை பசுமை கூடக விளைவிற்கு முக்கிய அடிப்படை காரணமாககும். நீராவி, கார்பன்-டை-ஆக்ஸைடு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்ஸைடு, ஒசோன் மற்றும் குளோரோ புளோரோகார்பன் போன்றவை வளிமண்டலத்திலுள்ள பொதுவான வாயுக்களாகும்.
நம்முடைய சூரிய மண்டலத்தில் வெள்ளி, செவ்வாய் மற்றும் திங்கள் டைட்டான போன்றவற்றின் வளிமண்டலங்களில் உள்ள வாயுக்கள் பசுமை கூடக விளைவினை ஏற்படுத்துக்கின்றது.

அதிகரிக்கும் பசுமை கூடக வாயுக்களின் தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஒரு வருடத்திற்கு கார்பன்டை ஆக்ஸைடு (CO2) 1ppm அதிகரிக்கிறது.

வாகனங்களின் மாசுபாடுகளினால் நைட்ரஸ் ஆக்ஸைடு வெளியேற்றப்படுகிறது.

மீத்தேன் தற்போது கண்டறியபட்டவையாகும், ஒரு வருடத்திற்கு வீதம் அதிகரிக்கிறது. ஒரு மீத்தேன் மூலக்கூறு 25 கார்பன்டைஆக்ஸைடின் மூலக்கூறுகளுக்கு சமமாகும். இதன் சரிவிகித வளர்ச்சி வீதத்தில் அதாவது கார்பன்டை ஆக்ஜைடு 25 ஆகும். நம்டைய வளிமண்டலத்தால் மீத்தேனின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது.


புவியிலுள்ள பசுமை கூடக வாயுக்கள்:

  1. நீராவி
  2. கார்பன்டைஆக்ஸைடு
  3. மீத்தேன்
  4. நைட்ரஸ் ஆக்ஸைடு
  5. ஒசோன்
  6. குளோரோஃபுளோரோ கார்பன்

      பசுமை கூடக விளைவில் பங்கு பெற்றுள்ள வீதத்தின் அடிப்படையில் வாயுக்களானது பட்டியலிடப்பட்டள்ளது. அவை பின்வருமாறு

  1. நீராவி, 36-72 % பங்கு
  2. கார்பன்-டை-ஆக்ஸைடு, 9-26% பங்கு
  3. மீத்தேன், 4-9 % பங்கு
  4. ஒசோன், 3-7% பங்கு

      புவியின் பசுமை கூடக விளைவில் மேகங்களின் பங்கு முக்கியமாக கருத்தப்படுகிறது. ஏனெனில் இது மற்ற வாயுக்களைப் போல, அகச்சிவப்பு கதிர்களை உட்கிரகிப்பது மற்றும் உமிழ்வது போன்ற செயல்களை செய்கின்றது. பசுமை கூடக விளைவில் வாயுக்களின் பங்களிப்பு அதன் தன்மை மற்றும் வளத்தினை பொறுத்து அமைகிறத. எடுத்துக்காட்டாக, மூலக்கூறு அடிப்படையில் பார்க்கும் பொழுது கார்பன்-டை-ஆக்ஸைடை விட மீத்தேன் பசுமை கூடக விளைவிற்கு முக்கிய பலமாக காரணமாக உள்ளது. ஆனால் மீத்தேனின் நிலைபாடு மிகக்குறைவாகும். அதனால் இதன் பங்களிப்பு மிகக் குறைவாக இருக்கிறது.

 

 

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2015