அமிலமழை
அமிலமழை என்பது மற்ற மழையை போல அல்லாமல் அதிக அளவு அமிலத்தன்மையுடைய ஒரு வகை மழையாகும். மழைநீரானது சிறிதளவு அமிலத்தன்மையையும் 5 மற்றும் 6 காரஅமிலநிலையையும் கொண்டுயிருக்கும். நீரானது வளிமண்டலத்தில் ஆவியாகி கார்பன்டைஆக்ஸைடுடன் கலந்து ஒரு வாரத்தில் அமிலமாகமாறிகிறது. அமில மழையானது அதிக கார அமிலநிலையை கொண்டது. காற்று மாசுபடுத்திகளான சல்பர்டைஆக்ஸைடு மற்றும் நைட்ரஜன் ஆக்ஸைடுகள் போன்றவற்றின் தாக்கத்தினால் இது உருவாகிறது. இந்த சல்பர்டைஆக்ஸைடு, நைட்ரஜன் ஆக்ஸைடு நீருடன் கலந்து அமிலத்தை தருகின்றது.
அமில மழையானது நிலப்பரப்பினை அடைவதற்கு முன் காற்றிலுள்ள ஈரப்பதத்துடன் கலந்து ஈரம் படிவமுடைய மாசுபடுத்தியாகவும், ஈரப்பதத்துடன் கலக்காமல் இருந்தால் உலர்ந்த படிவமுடைய மாசுபடுத்தியாகவும் இருக்கும்.
எரிமலை குமறலின் போது இயற்கையாகவே அமிலமழை உண்டாகிறது. இது மட்டுமல்லாமல் மனிதனால் ஏற்படுத்தப்படும் வாகனங்களின் புகை, தொழிற்சாலைபுகை மற்றும் தொல்லுயிர் எச்சபொருட்களை எரிப்பதால் ஏற்படும் புகை போன்றவற்றின் மூலம் உண்டாகிறது. நாம் தொடாச்சியாக காற்று மாசுபாட்டினை அதிகரிக்கும்போது அமிலமழையின் விளைவையையும் அதிகரித்துக்கொண்டேயிருக்கிறோம்.
அமிலமழையின் தாக்கம் என்ன?
- பெருங்கற்களால் கட்டப்பட்ட கட்டிடங்களில் அரிப்பு
- மண் மற்றும் ஏரிகளில் அமிலம் படிதல்
- சுற்றுவட்ட நிலப்பரப்பில் உள்ள நச்சு கலந்த தாதுக்களான அலுமினியம் மற்றும் பாதரசம் போன்றவற்றை பிரித்தெடுத்தல், ஏரிகள் நீர் நிறைந்த பகுதிகளில் தொற்றுகளானது அதிகமாக இருத்தல்
- மரங்கள் மற்றும் வனப்பகுதிகள் அழிதல்
அமிலமழையின் இயக்க முறை
|