எல் நினோ
தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல அமைப்பின் படி எல் நினோ (El Nino) என்பது பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பில் இடம் பெறும் முக்கியமான வெப்பநிலை ஏற்றதாழ்வு ஆகும். பெரு, எக்குவடோர் மற்றும் தெற்கு அமெரிக்கா பகுதிகளின் கடற்கரையருகில் வழக்கத்திற்கு மாறான வெப்பத்தை தோற்றுவிக்கிறது. எல்நினோ என்பது வெப்பநிலை ஏற்றதாழ்வை குறிக்கும் ஒரு பொருளாகும். இது ஒவ்வொரு ஆண்டின் டிசம்பர் மாதத்தில் தோன்றும். ஆனால் தற்பொழுது இதன் தீவிரம் மற்றும் தாக்கம் கடந்த வந்த ஆண்டுகளில் அதிகமாக காணப்படுகிறது. முக்கியமாக 1982 மற்றம் 1983 காலத்தில் மற்றும் ஒரு முறை இதன் தாக்கம் தோன்றும்போது உலக முழுவதும் அந்த ஆண்டிற்கு தீவிரம் இருந்துகொண்டேயிருக்கிறது. ஆனால் தற்பொழுது ஒவ்வொரு 3 முதல் 7 ஆண்டுவரைக்கும் இதன் தாக்கம் தோன்றுகிறது. அதாவது 1972 1976, 1982 1983, 1987, 1991. 1994, 1997 ஆகும்.
கிழக்கும் மற்றும் மேற்கத்திய பசிபிக் பெருங்கடலின் சாதாரண காலநிலை மாறுபாட்டின் தீவிரத்தை பொருத்து எல் நினோவின் தாக்கமானது கண்டுபிடிக்கப்படுகிறது. இந்த தாக்கத்தின் போது காற்றின் கிழக்கு மேற்கு என்ற திசை மாறி அதற்கு நேர் மாறான மேற்கு கிழக்கு திசைக்கு இடம்பெயருவதால் மேற்கத்திய மற்றும் கிழக்கத்திய பசிபிக்கின் காலநிலை முற்றிலும் மாறுகிறது. மேற்க்கத்திய பசிபிக் வழக்கமாக ஈரப்பதத்தையும் மிதவெப்பத்தையும் அதிகமழையையும் கொண்டுயிருக்கும், ஆனால் இந்த தாக்கத்திற்கு பிறகு ஈரப்பதம் இல்லாமலும் குறைந்த மழையையும் கொண்ட வறண்ட நிலையை தென்கிழக்கு ஆசியா, இந்தியா, தென்ஆப்பிரிக்கா பகுதிகளுக்க தருகிறது. இதை போலவே கிழக்கத்திய பசிபிக்கானது வழக்கமான வறண்ட குளிரான மற்றும் குறைந்த மழையை கொண்டுயிருக்கும். இந்த தாக்கத்திற்கு நேர் மாறாக அதாவது ஈரமாக மித வெப்பம் மற்றும் அதிக மழையை உடைய பகுதியாக மாற்றப்படுகிறது.
கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையானது எல் நினோவின் முக்கிய நிகழ்வுகளை விளக்கியுள்ளது
தாக்கம் |
- கிழக்கத்திய பசிபிக்கில் மழையை அதிகரிக்கிறது
- மேற்கத்திய பசிபிக்கில் வறட்ச்சியை அதிகரிக்கிறது. இதனால் காடுகள் எரியும் அபாயம் ஏற்படுகிறது.
- கடற்கரை பகுதிகளான பெரு மற்றும் எக்குவடோர் பொருளாதாரரீதியாக பாதிக்கிறது. வழக்கமான நிலையில் நீரானது குளிர்ச்சியாக இருப்பதால் மீன்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது ஆனால் எல்நினோவின் தாக்ககத்திற்கு பிறகு கடற்கரைப்பகுதி வெப்பமாக மாறுவதால் ஊட்டப்பொருட்களில் தளர்வு ஏற்பட்டு மீன்களுக்கு உணவு கிடைக்காத நிலைஏற்படுகிறது.
- உடல்நிலை பிரச்சினை,முக்கியமான வறட்ச்சி பகுதிகளில் ஏற்படுகிறது.
|
பெயரின் விளக்கம் |
எல்நினோ என்பது ஸ்பானிஷ் மொழியில் சிறு பையன் என்னும் பொருள் கொண்டது டிசம்பர் மாதத்தில் அதாவது கிறிஸ்மஸ் -கிற்கு அருகில் வருவதால் இப்பெயரை கொண்டுள்ளது. |
லா நினா
எல்நினோவிற்கு எதிர்மறையானது லா நினா ஆகும். இது கிழக்கத்திய பசிபிக்பகுதியில் வழக்கத்திற்கு மாறாக குளிர்ச்சியை கொண்டதாகும். இதன் தாக்கத்தின் போது அதாவது பெரு மற்றும் எக்குவடோர் கடற்கரையின் பகுதியில் அதிக வறட்சியும் குளிர்ச்சியாகவும் இருக்கும். மேற்கத்திய பசிபிக் பகுதியில் மிதவெப்பமாகவும் அதிக ஈரப்பதத்தையும் மற்றும் அதிகமழையையும் கொண்டுயிருக்கும் இது எல்நினோவிற்கு அடுத்தாக வரும் ஆனால் அனைத்து நேரங்களில் எல்நினோவிற்கு அடுத்ததாக இருக்காது.
லா நினாவின் விளக்கம் “சிறு பெண்” ஆகும். எல் நினோவிற்கு எதிர்மறையாகும்.
|