ஒசோன் படலம்
|
ஒசோன் படலம், நமது வளிமண்டலத்தில் பாதுகாப்பு படலமாகும். (O3, மூன்று ஆக்ஸிஜன் அணு) புவி நிலப்பரப்பிலிருந்து இது 19-30கி.மீ இடைதொலைவில் உள்ளது. இந்தபடலமானது சூரியனிலிருந்து வரும் புறஊதாகதிர்களை தடுக்கிறது. இந்த ஒசோன் படலம் இல்லாமல் இருந்தால் புற்றுநோயின் தாக்கம் அதிகமாகயிருக்கும். இந்த உலகில் ஒருவரும் உயிர் வாழமுடியாதநிலை ஏற்படும். இந்த படலத்தில் நிலைப்பாடு 10ppm ஆகும். இந்த ஒசோன் படலமானது சூரியஒளியை ஆக்ஸிஜனாக மாற்றி உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் அளவானது இருப்பிலிருக்கும் நைட்ரஜன் மூலம் நிலைப்படுத்தப்படுகிறது.
இன்றைய காலகட்டத்தில் ஒசோன் படலத்தில் தெரியக்கூடிய செறிதளர்வு காணப்படுகிறது. இது 1970ல் கண்டறியப்பட்ட குளோரோஃபுளோரோ கார்பன் ஆகும். இது ஒசோன் படலத்தை தாக்குகிறது. இந்த குளோரோஃபுளோரோ கார்பன் (CFC) குளிர்சாதனப்பெட்டி குளிர்விப்பான் மற்றும் காற்றில் மிதக்கும் தின்ம துகள்கள் தெளிப்பான் போன்றவற்றில் இருக்கிறது. நாம் இந்த சாதனங்களை அதிகமாக பயன்படுத்தும்போது புவியின் ஒசோன் படலத்தில் செறிதளர்வு ஏற்படுகிறது. எனினும் தற்போது வரும் பொருள்களில் CFC ஆனது இருப்பதில்லை. மேலும் இது மட்டுமல்லாமல் மற்ற பொருட்களான புரோமைன் ஹேலோகார்பன் மற்றும் நைட்ரஸ் ஆக்ஸைடுகள் போன்றவையும் தாக்குகிறது.
ஓசோன் படல செறிதளர்வின் விளைவு
- அதிக புறஊதாகதிர்கள் புவியை வந்தடைதல் (இதனால் புவி சமையல் அடுப்பினை போல் இருக்கும்)
- அதிக வெப்பத்தால் உலக வெப்பமயமாக்கலின் அபாயம் அதிகரிக்கிறது
ஒசோன் படலத்தை CFC எப்படி செறிதளர்த்துகிறது?
- மூலக்கூறில் ஒரு புளோரைன் அணு ஒரு கார்பன் அணு மற்றும் 3 குளோரின் அணுக்கள் உள்ளது. இது புறஊதா கதிரால் தாக்கப்படுகிறது.
- இதில் ஒரு குளோரின் அணு உடைந்து ஒசோனை (O3) தாக்குகிறது. ஒரு ஆக்ஸிஜன் அணு வெளியேறி குளோரின் மோனாக்ஸைடை உருவாக்கிறது. இந்த குளோரின் மோனாக்ஸைடு ஒரு ஆக்ஸிஜன் மூலக்கூறினை வெளியேற்றுகிறது.
3. மற்றொரு ஆக்ஸிஜன் அணு குளோரின் குளோரின் மோனாக்ஸைடை உடைத்து ஆக்ஸிஜன் அணுவை வெளியேற்றுகிறது. மேலும் குளோரின் அணுவையும் வெளிதள்ளுகிறது. இதனால் ஒசோன் மூலக்கூறுகள் நீக்கப்படுகிறது. இந்த இயக்கமுறையானது தொடர்ந்து நடத்தப்படுகிறது.
|