இயற்கை சீற்ற மேலாண்மை் :: சுற்றுச்சூழல் மாசுபடுதல் 

கதிரியக்க மாசுபாடு
கதிரியக்கம் என்பது புரோட்டான் (ஆல்பா துணிக்கை) எலக்ட்ரான் (பீட்டா துணிக்கை) மற்றும் காமா (மின் காந்த கதிர்வீச்சு) போன்ற சில அணுக்களில் இருந்து வெளிப்படும் ஒரு வகை ஆற்றல் மிகுந்த கதிர்வீச்சாகும். இந்த கதிர்வீச்சு தான் கதிரியக்க மாசுபாட்டிற்கு காரணமாகும் கதிரியக்கமானது. அயனி கதிரியக்கம், அயனியாக்க கதிரியக்கம் என இருவகைப்படும். அயனியாக்க கதிரியக்கமானது கிரகிக்கும் அணுக்களை தாக்குகறிது. இவை குறைந்த ஊடுருவும் தன்மையுடையது. அயனி கதிரியக்கமானது அதிக ஊடுருவும் தன்மையுடையது. பெரிய மூலக்கூறு உடைப்பிற்கு இந்த அயன்கதிரியக்கம் காரணமாகும்.
சுரங்கத்தொழில், புளோடோனியம் மற்றும் தோரியத்தின் தூய்விப்பு மற்றும் உற்பத்தி, வெடிக்கத்தக்க மற்றும் அணுஆயுதங்கள், அணு சக்தி நிலையம், எரிபொருள் மற்றும் கதிரியக்க சமதானி உற்பத்தி போன்றவை கதிரியக்கத்திற்கு மனிதனால் உருவாக்கப்படும் ஆதாரங்களாகும்.
பொதுவாக கதிரியக்கத் மூன்று வகைப்படும்: அவை

  • ஆல்பா துணிக்கை - இவற்றை ஒரு துண்டு காகிதம், மனிதனின் தோல் மூலம் தடுக்கப்படுகிறது.
  • பீட்டா துணிக்கை - இவை மனிதனின் தோலில் ஊடுருவிச் செல்லும். இதனை ஒரு சிறிய துண்டு கண்ணாடி மற்றும் உலோகம் போன்றவற்றின் மூலம் தடுக்கப்படுகிறது.
  • காமா கதிர்கள் - இலை மனிதனின் தோல் பாதிக்கப்பட்ட செல்கள் மூலம் ஊடுருவிச் செல்லும் இவை அதிக தொலைதூரத்திற்கு உடுருவும் இவற்றினை அடர்த்தியான பலமான நுண்சேர்பொருளின் (concrete) மூலம் தடுக்கப்படுகிறது.

ஆதாரங்கள் மற்றும் முறைகள்
     கதிரியக்க மாசுபாட்டிற்கு காரணமாக ஆதாரங்களின் வகைகள் பின்வருமாறு

  • அணு சக்தி நிலையம்
  • அணு ஆயுதம்
  • போக்குவரத்து
  • அணுச்சிதைவு அப்புறப்படுத்ததல்
  • யுரேனியம் சுரங்கத்தொழில்

கதிரியக்க மாசுபாட்டினால் உயிரியலில் தாக்கம்

  • கதிரியக்க சமதானியஜன் விளைவானது, கதிரியக்கத்தின் உயிரிகளை பாதிக்கும் தன்மை மற்றும் இவை, உயிரணுக்களை உட்கிரகிக்கும் வெளியேற்றம் தன்மையை பொருத்து இருக்கும். பெரும்பாலும் இந்த கதிரியக்கம் உயிரணுக்களின் ஒரு செல்லை தாக்குகிறது. இதனால் மனிதன் மற்றும் பிற பல செல்களுடைய உயிரணுக்களில் சிக்கலை ஏற்படுத்துகிறது. ஏனெனில் ஒரு செல் பாதிப்படையும் போது மற்ற செல்களையும் எதிராக தாக்குகிறது. ஒரு மனிதனின் உடலில் உள்ள உறுப்புகளை தோல் குடல் மற்றும் இரத்த நாள செல்களானது மனிதனின் உணர்ச்சி தூண்டுதல் மையமாக உள்ளது.
  • உயிரியல் மூலக்கூறுகளுடன் கதிரியக்கம் வினைபுரியும் போது அயன்களை உருவாக்குவதால் நச்சுத்தன்மையை உண்டாக்குகிறது. இந்த அயனிகள் முற்றுப்பெறாத அயனிகளாக (free radical) இருந்து, புரதம், சவ்வுகள் மற்றும் நியூக்ளிக் அமிலங்கள் போன்றவற்றை சேதப்படுத்துகிறது. கதிரியக்கமானது டி.என்.ஏவின் தனிப்பட்ட அடிப்பகுதி (அதாவது தைமின்) அழித்தல் ஒரு புரியிழை உடைப்பு, இருபுரியிழை உடைப்பு, வெவ்வேறு டி.என்.ஏ புரியிழையின் பிணைப்பில் சேதம் போன்றவற்றினால் டி.என.ஏ முற்றிலும் பாதிப்படைகிறது. இதனால் புற்றுநோய் பிறப்பில் கோளாறு மற்றும் இறப்பு போன்றவை ஏற்படுகிறது.
  • கதிரியக்கம் தாக்கம் மனித உடலில் குறைவாக இருக்கும் பொழுது செல்களிலுள்ள உயிர்வேதியியல் திருத்தம் செய்யும் முறையின் மூலம் அதன் தாக்கத்தை குறைக்கிறது. ஆனால் அணுமின் நிலையம் மற்றும் அணு ஆயுதங்களில் வெளிப்படும் கதிர்கள்ளானது இந்த உயிர் வேதியியல் முறையினால் கட்டுப்படுத்த முடிவதில்லை. இதனால் மக்கள் தொகையில் புற்றுநோய் இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. அறிவியலறிஞர்களால் கூட இதற்கான நிரந்திர தீர்வை கண்டுபிடிக்க முடியவில்லை
  • அறிவியல் விஞ்ஞானிகளில் மத்தியில், மனிதனில் தாக்கத்தை ஏற்படுத்தும் கதிரியக்கத்தின் (கறைந்தபட்ச) அளவில் வேறுபட்ட கரத்துக்கள் நிலவி வருகிறது. இதில் சில அறிவியல் விஞ்ஞானிகள் குறைந்தபட்ச அளவுக்கு கீழே கதிரியக்கம் இருந்தாலும் அதாவது நுண்ணிய அளவு இருந்தாலும் உயிரியலில் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று கூறுகின்றனர். ஆனால் சில விஞ்ஞானிகளின் கருத்து யாதெனில் குறைந்தபட்ச அளவுக்கு கீழே இருந்தால் அவை மனிதனின் உயிரியலில் எவ்வித பாதிப்பும் ஏற்படுத்துவதில்லை.
  • 1945 - ல் ரோஸீமா மற்றும் நாகசாகி என்ற பகுதியில் நடந்த அணுகுண்டு வெடிப்பில் ஜோம்ஸ் நீல் மற்றும் அவருடைய ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வில் அதிக அளவு மக்கள் புற்றுநோய் இரத்த புற்றுநோய் மற்றும் பிற நோய்கள் போன்றவற்றால் பாதித்தது கண்டுபிடிக்கப்பட்டது
  • கதிரியக்க மாசுபாடு சுற்றுப்புறச்சூழலில் ஒரு முக்கிய பிரச்சனையாக கருத்தப்படுகிறது. எனவே கதிர்வீச்சு சம்பந்தப்பட்ட பொருட்கள் மற்றும் அணுமின் நிலையங்களில் செய்யப்படும். செயல்களில் போன்றவற்றின் பயன்பாட்டில் அதிக கவனம் செலுத்தி பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

கதிரியக்க மாசுபாட்டின் வகைகள் மற்றும் விளைவுகள்

  • புறஊதாக் கதிர்கள்: சிற்றலையின் அலைநீளம் 100-300 நேனோமீட்டர் மற்றும் அதிக ஆற்றலானது 260 நேனோமீட்டர் அலை நீளத்தில் இருக்கும் பொழுது டி.என்.ஏ வை பாதிக்கின்றது. இவை கண்விழித்திரையிலுள்ள செல்களை தாக்கும் போது குருட்டுத்தன்மை ஏற்படுகிறது. மேலும் இவை தோலின் வளர்ச்சி செல்களை பாதிக்கிறது. தோலில் கொப்பளங்கள் ஏற்படுதல் மற்றும் தோலில் சிவப்பேறுதல் (தோல் புற்றுநோய்) போன்ற நோய்கள் ஏற்படுகிறது. நம்முடைய தோலில் உள்ள நிறமிகள் புறஊதாக்கதிர்கள் தாக்கத்திலிருந்து பாதுகாக்குகிறது. ஆனால் இந்த நிறமிகளில் பற்றாக்குறை ஏற்படும் போது தோல் உலர்வு நோய் உண்டாகிறது. மேலும் இந்த புறஊதாக்கதிர்கள், புற்றுநோய் பாதிப்பையும் ஏற்படுத்துகிறது.
  • காஸ்மிக் கதிர்கள்: காஸ்மிக் கதிர்களின் கதிர்வீச்சுத் தன்மை 0.001 ஏ ஐ விட குறைவாகும். ஆனால் இதன் ஆற்றல் அதிகமாக இருப்பதால் உயிரணுக்களை எளிதில் தாக்குகிறது. அதிஷ்டவசமாக விண்வெளியின் படை மண்டலத்தில் (stratosphere) இந்த கதிர்வீச்சு சிக்கிக் கொள்வதால் குறைந்த அளவு மட்டும் புவிளை வந்தடைகிறது.
    • மற்ற கதிர்வீச்சான ஊடுக்கதிர் (x - கதிர்), இவை உயிரணுக்களின் ஊடுருவி செல்வதால் பல்வேறு உயிரணுக்களின் பரிணாம வளர்ச்சியானது குறைகிறது.
    • கதிர்களின் தாக்கமானது 1909 - ல் யுரேனியம் சுரங்கத் தொழிலாளர்களிடம் ஏற்பட்ட புற்றுநோயின் மூலம் கண்டறியப்பட்டது. உயர்வான மின் நிலையங்களில் பயன்படுத்தும் அல்லது மேம்படுத்தும் பன்மயமி (polyploid) கதிரியக்கத்தை கட்டுப்படுத்தும் ஒருவகை இயக்கமுறையாகும் அணுசக்தி குறையும் பொழுது ஓரகத்தனிமம் (isotopic) I - 132 மற்றும் Sr-90 மூலம் உடனடியாக தாக்குகிறது. கதிரியக்க I -131 ஆனது கேடயச் சுரப்பியுள்ள சாதாரண அயோடின் (I -27) மூலம் செறியை எடுத்துக்கொள்கிறது. இதனால் இரத்த வெள்ளையணுக்கள், எலும்பு பகுதி, மண்ணீரல், நண்நீர்க்கணு போன்றவற்றை தாக்குகிறது.

மேலும் கண் பார்வை கோளாறு, மலட்டுத் தன்மையை அதிகரித்தல், தோல் புற்றுநோய் மற்றும் நுரையீரல் கட்டி போன்றவை உருவாகிறது. Sr-90 என்பது கால்சியத்தின் கோளாறு. இவை எலும்புகளை தாக்கி எலும்பு புற்று நோயை உருவாக்குகிறது. வரலாற்று சம்பந்தப்பட்ட எடுத்துக்காட்டாக ஜப்பானின் ஹீரோஸிமா மற்றும் நாகசாகி பகுதியில் 1945ல் ஏற்பட்ட அணு குண்டு வெடிப்பு ஒரு உதாரணமாகும்.

ஆதாரம்: http://www.studentsguide.in/biology/pollution_environment/radioactive_pollution.html


 

 

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2015