இயற்கை சீற்ற மேலாண்மை் ::சுற்றுச்சூழல் மாசுபடுதல் 

மாசுபடுதல்

வரையறை
வாயு, நீர், திடபொருள் போன்ற காரணிகளோ, வெப்பம், இரைச்சல், கதிர்வீச்சு, போன்ற ஆற்றல்களோ தங்களது இயல்பு, இருப்பிடம் மற்றும் அளவின் மூலம் சுற்றுப்புறத்தின் தன்மைகளை நேரிடையாகவோ, மறைமுகமாகவோ தாக்கி அதன் அங்கங்களான மனிதர்கள், விலங்குகள், செடிகள் போன்றவற்றின் நிலை, ஆரோக்கியம், பாதுகாப்பு (அல்ல) நலத்திற்கு தீங்கு விளைவிப்பது மாசுபடுத்துதல் என்றழைக்கப்படும்.


மாசுபடுத்துதல் மூலம் தீங்கு விளைவிக்கும் நச்சுகளை சுற்றுப்புறத்தில் புகுத்தி அவற்றிளுள்ள உயிரினங்களுக்கும் சுற்றுச்கூழல் இயக்கத்திற்கும் தீங்கு மற்றும் அசெளகார்யங்களை மாசுபடுத்திகள் (pollutants) உண்டாக்குகின்றன. மாசுபடுதல் வேதியியல் பொருள்கள் மூலமோ, ஆற்றல்களான இரைச்சல், வெப்பம் (அ) ஒளி மூலமோ ஏற்படுகின்றது. மாசு உண்டாக்கும் மாசுபடுத்திகள் என்பவை வேற்று பொருள்களாகவோ, ஆற்றலாகவோ, இயற்கையாக பொருள்களாகவோ இருக்கலாம். இயற்கையில் அவை அளவினை மீறும் பொழுது மாசுபடுத்திகளாக கருதப்படுகின்றது. மாசுபடுதல் ஓரிட மூலம் (அ) பரந்த மூலம் மாசடைதல் என்று இரு வகைகளாக உள்ளது.

முன்னுரை
மாசுபடுதல் இரு காரணிகளால் ஏற்படுகின்றது. இயற்கையாகவோ, மனித செயல்களின் மூலமோ ஆகும். இயற்கையாக ஏற்படும் மாசு நம் வாழ்வில் அதிக தாக்குதல ஏற்படுத்தாது. ஏனெனில் அவை மீண்டும் உயிர்த்தெழும் ஆற்றல் கொண்டவை. ஆனால் மனித செயல்களினால் ஏற்படும் மாசு மிகுந்த இன்னல்களை கொடுக்கக்கூடியவை. மக்கள் பெருக்கம் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியும் இதற்கு மூலதனமாகும். பொதுவாகவே மக்கள் தொகை பெருக்கத்தினால் நமது வாழ்விற்காக இயற்கையின் ஆதாரங்களை நாம் சார்ந்து உள்ளோம். நமது தேவைகள் அதிகரிக்கும் பொழுது இயற்கையோடு உள்ள தொடர்பும் நமக்கு அதிகரிக்கின்றது. அதே போல் மனிதர்கள் தங்களது புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியினை இயற்கையின் மேல் திணிக்கும் பொழுது அதன் மூலம் நன்மைகள் மட்டுமன்றி பக்க விளைவுகளும் ஏற்படும்.


சிறிய மக்கள் தொகையானது எவ்வித தொழில்நுட்ப வளர்ச்சி இருந்தாலும் இயற்கையை தாக்கிவிடாது. ஆனால் அதிக மக்கள் தொகையானது மக்களின் தேவைக்கேற்ப இயற்கையின் அழிவுக்கு வழிவகுக்கின்றது. மாசுபடுதல் என்பது நாளுக்கு நாள் அதிகரிக்கும் வேதனையான விஷயமாகும். மாசுபடுதல் என்பது ஒரு நாளில் ஏற்பட்டது அன்று. அது மனிதர்களின் தவறினால் பல்லாண்டுகளாக ஏற்பட்ட விளைவாகும். நமது இயற்கை ஆதாரங்களை நன்கு பராமரித்து, மேன்மேலும் ஏற்படும் மாசு வகைகளை தடுத்து நாம் வாழுமிடத்தினை நல்ல இடமாக மாற்றவேண்டும். 
இப்பகுதியில் ஆறுவகையான மாசுபடுதல் விவரிக்கப்பட்டுள்ளது.

  • நிலம் மாசுபாடு

  • நீர் மாசுபாடு

  • காற்று மாசுபாடு

  • ஒலி மாசுபாடு

  • வெப்பம் மாசுபாடு

  • கதிரியக்கம் மாசுபாடு

 

 

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2015