ஏரோ – மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்தல்

பெயர் : ப.மணிமொழி  
முகவரி : திரு.ப.மணிமொழி.
மதகளிர்மாணிக்கம் கிராமம்,
ஸ்ரீ முஷ்ணம் வழி,
காட்டுமன்னார் கோவில்  தாலுக்கா
கடலூர் மாவட்டம் அலைபேசி எண் : 9443511316
குறு /சிறு/ பெரு விவசாயிகள் : சிறு விவசாயி  
வெற்றிக்கான காரணங்கள்

மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்தல்

 • வேளாண் அறிவியல் நிலையத்தில் வழங்கப்பட்ட உணவு பதப்படுத்துதல் பயிற்சியில், பயிற்சிக்கு வந்த அனைவரையும் ஒருங்கிணைத்து ஒரு சங்கம் உருவாக்கப்பட்டது.
 • திரு.மணிமொழி நிலைய தொழில்நுட்ப வல்லுநர்களின் உதவியுடன் அந்த சங்கத்தை முறைப்படி அரசு பதிவு அலுவலகத்தில் பதிவு செய்து சங்க உறுப்பினர்களின் ஆலோசனையின் படி வேளாண் விளை பொருட்களை மதிப்பூட்டப்பட்ட உணவு பொருட்களாக தயார் செய்து விற்பனை செய்து வந்தார்கள்.
 • திரு.ப.மணிமொழி மற்றும அவருடன் 20 பேர் கலந்து கொண்டனர். இதன் மூலம் இந்த சங்கத்திற்கு மாதம் ரூபாய் 10,000 முதல் 15,000 வரை லாபம் கிடைத்தது.

மேலாண்மை உத்திகள்

 • மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் போது அவற்றை நல்ல தரமாகவும், சுவையாகவும் மற்றும் உணவுப் பொருட்கள் கொஞ்சம் அதிகமாகவும் நுகர்வோர்க்கு கிடைக்கக்கூடிய வகையில் தயார் செய்து விற்பனை செய்ய ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
 • இந்த உணவுப் பொருட்களை லாபகரமான முறையில் விற்பனை செய்ய தகுந்த விற்பனை யுக்திகளும் போதிக்கப்பட்டன. தரமான உணவு வகைகளை தயார் செய்யும் அரசு நிறுவனங்களுக்கு சங்க உறுப்பினர்கள் அழைத்துச் செல்லப்பட்டு பயிற்றுவிக்கப்பட்டனர்.

மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்களின் பங்கு

 • மதிப்பூட்டிய பொருட்களை லாபகரமாக விற்பனை செய்ய ஏதுவாக நுகர்வோர் கவரும் வகையில் சங்க உறுப்பினர்களுக்கு பேக்கேஜிங் தொழில்நுட்பம் கற்று தரப்பட்டது.
 • பேக்கேஜிங் தொழில்நுட்பம் தொடர்பாக சங்க உறுப்பினர்களை உணவு பதப்படுத்தும் தொழில்நுட்பங்கள் தொடர்பான கருவிகளை பார்வையிட வேண்டி கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் உள்ள அறுவடைக்குப்பின் சார் தொழில்நுட்பத்துறைக்க அழைத்து சென்று பார்வையிட வைக்கப்பட்டது.
 • அதே  போல் தஞ்சாவூரில் உள்ள இந்திய உணவு பதப்படுத்தும் ஆராய்ச்சி கழகத்திற்கு பயிற்சிக்காக அழைத்துச் சென்று பார்வையிட வைத்து அவர்களின் சந்தேகங்கள் களையப்பட்டன.

நிலைய பயிற்சிகள், செயல் விளக்கத்திடல்களின் பங்கு

 • 21 நாட்கள் தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்பட்டது.
 • கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், அரசு உணவு பதப்படுத்தும் நிறுவனம போன்ற இடங்களில் செயல் விளக்கத்துடன் கூடிய பயிற்சி அளிக்கப்பட்டது மற்றும் சந்தேகங்களுக்கு  தெளிவான விளக்கங்கள் அளிக்க்ப்பட்டது.

சந்தைப்பற்றி நுண் அறிவு

 • நுகர்வோர் விரும்பக்கூடிய அளவுக்கு பேக்கேஜிங் முறையை கடைபிடித்தல் கற்றுத்தரப்பட்டன.
 • உணவு பொருட்கள் நீண்ட நாட்கள் கெடாமல் இருப்பது மற்றும் சுவை, நிறம், வாசனை மாறாமல் இருக்கும்படியான தொழில்நுட்ப அறிவும் தரப்பட்டன.
 • பெரிய மற்றும் சிறிய அளவில் இருக்கும் மளிகை கடைகளில்   சென்று இப்பொருட்களின் அவசியத்தையும், தரத்தையும் பற்றி விளக்கி கூறி விற்பனை செய்ய ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

வேளாண் விஞ்ஞானிகளின் பங்கு

 • மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் போது அதன் சுவை, மணம், நிறம் மற்றும் நீண்ட நாட்கள் சேமித்து வைப்பது பற்றி அவ்வப் போது அவர்களுக்கு நேரிடையாக சென்றும் மற்றும் தொலைபேசி மூலம் அறிவுறுத்தப்பட்டு வந்தன.
 • இவர்களின் உணவுப் பொருட்கள் விற்பனை செய்ய பல்வேறு இடங்களில் நடைபெறும் பொருட்காட்சியில்  பங்கு பெற்று விற்பனை செய்து வசதி செய்து தரப்பட்டது.

ஊடகங்களின் பங்கு

இச்சங்கம் “மக்கள் தொலைக்காட்சி” மற்றும் “பொதிகை தொலைக்காட்சியிலும்” இடம் பெற்றது.

வெற்றிக்கான காரணங்கள்

வேளாண் விஞ்ஞானிகளின் பங்கு

 • மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் போது அதன் சுவை, மணம், நிறம் மற்றும் நீண்ட நாட்கள் சேமித்து வைப்பது பற்றி அவ்வப்போது அவர்களுக்கு நேரிடையாக சென்றும் மற்றும் தொலைபேசி மூலம் அறிவுறுத்தப்பட்டு வந்தன.
 • இவர்களின் உணவுப் பொருட்கள் விற்பனை செய்ய பல்வேறு இடங்களில் நடைபெறும் பொருட்காட்சியில் பங்கு பெற்று விற்பனை செய்து வசதி செய்து தரப்பட்டது.

ஊடகங்களின் பங்கு

இச்சங்கம் ‘மக்கள் தொலைக்காட்சி’ மற்றும் “பொதிகை தொலைக்காட்சியிலும் இடம் பெற்றது.

வருமானம்

மாத வருமானம் ரூ.20,000 முதல்  25,000 வரை சம்பாதிக்கிறார்கள்.

வேலை வாய்ப்புகள்

சங்க உறுப்பினர்கள் அனைவரும் வேலை வாய்ப்பு பெறுகிறார்கள். அது போக 10 தொழிலாளர்கள் இவர்களது உணவு தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரிகின்றனர்.

தொழில்நுட்பத்தின் மூலம் பெறப்பட்ட மாத வருமானம்

மாதத்திற்கு ரூ.20,000 முதல் ரூ.25,000 வரை

தொழில்பற்றிய எதிர்கால திட்டம்

 • சொந்தமாக இடம் வாங்கி அதில் தொழிற்சாலை ஏற்படுத்த திட்டமிட்டு வருகின்றனர்.
 • புதிய கருவிகளான – பேக்கேஜிங் கருவி கொதிகலன் போன்ற கருவிகள் வாங்க திட்டம் வைத்து உள்ளனர்.
 • மாவட்டம் வாரியாக நுகர்வோர் டீலர்கள் ஏற்படுத்த வேண்டி செயல்பட்டு வருகின்றனர்.
 • மாத வருமானத்தினை ரூ.50,000 முதல் ரூ.75,000 வரை உயர்திட திட்டம் தீட்டி செயல்பட்டு வருகின்றனர்.

பிறருக்கு எடுத்துக்கூறும்  உண்மை

 • முறையான நிலையப் பயிற்சி எடுத்துக் கொண்டால் இந்த தொழிலில் அதிக லாபம் சம்பாதிக்கலாம்.
 • இது ஒரு சுய தொழில் மற்றவர்களை சார்ந்திருக்க வேண்டியதில்லை.
 • வேளாண் விளை பொருட்கள் சார்ந்த மதிப்பூட்டம் செய்யப்பட்ட உணவு வகைகளுக்கு நிரந்தர சந்தை வாய்ப்புகள் உள்ளன.

தொழல்நுட்பம் சார்ந்த படங்கள்

ஏரோ உணவு வகை தயாரிப்பு கூடம் ஏரோ உணவு வகைகள்
Updated on Feb , 2015
 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2015